திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில்
திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில்
திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில்
திருப்பனையூர் சௌந்தரேசுவரர் கோயில், நாகப்பட்டினம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°51′53″N 79°39′26″E / 10.8646°N 79.6573°E / 10.8646; 79.6573
பெயர்
புராண பெயர்(கள்):பனையூர்
பெயர்:திருப்பனையூர் சவுந்தரேசுவர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருப்பனையூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சௌந்தரேசுவரர், அழகிய நாதர், தாலவனேசுவரர்
தாயார்:பெரிய நாயகி, பிருகந் நாயகி
தல விருட்சம்:பனைமரம்
தீர்த்தம்:பராசர தீர்த்தம், திருமகள் தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர், சுந்தரர்

திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில் (திருப்பனையூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 73ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சுந்தரருக்கு இறைவன் நடனக் காட்சியருளினான் என்பது தொன்நம்பிக்கை.

அமைப்பு

மூலவர் விமானம்
கோயில் எதிரில் குளம்

ராஜகோபுரம் இல்லை. கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது. அந்த வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது மற்றொரு வாயில் உள்ளது. இரு வாயில்களுக்கிடையே பெரியநாயகி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியில் விநாயகர் உள்ளார். இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. அருகே தல மரமான பனை மரம் உள்ளது. அடுத்து உள்ள கருவறையில் மூலவர் சௌந்தரேஸ்வரர் உள்ளார். அவருக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. கோஷ்டத்தில் பராசர முனிவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மாற்றுரைத்த விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். அடுத்து சண்டிகேஸ்வரர் சன்னதியும், தாலவனேஸ்வரர் சன்னதியும் உள்ளன. பனை மரத்தை தலமரமாகக் கொண்ட ஊர்களாக வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர் என்ற ஐந்து ஊர்களும் அமையும். அவை பஞ்சதல சேத்திரங்கள் எனப்படுகின்றன. கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது.

வழிபட்டோர்

சப்த ரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன் ஆகியோர் வழிபட்ட திருத்தலம்.

துணையிருந்த விநாயகர்

தந்தையை இழந்த கரிகாற்சோழனுடன் தாயார்(அரசி), அரசைக் கைப்பற்ற முயன்றோரிடமிருந்து மறைந்து இங்கிருந்த இத்தல விநாயகரின் துணையுடன் எட்டு ஆண்டுகள் கழித்ததால் இவருக்கு ’துணையிருந்த விநாயகர்’ என்ற பெயர் ஏற்பட்டது.[1]

மற்றொரு பனையூர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேறொரு ஊரும் பனையூர் என்ற பெயரில் உள்ளது. சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள காரணத்தினாலேயே இந்த ஊர் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது. சென்னையிலிருந்து 25 கி மீ. தொலைவிலும், திருவான்மியூரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அக்காலத்தில் மக்கள் பொதுவாக நால்வகை நிலங்களில் வாழ்ந்து வந்தாலும் மருதநிலமே மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக அமைந்தது. பனையூர் என்பதில் ஊர் என்பது மருதநிலம் என்பதைத்தான் குறிக்கும். மறப்பெயர், மாப்பெயர் என்று எல்லாவகைப் பெயர்களிலும் ஊர் என்பது சேர்ந்து கூறுவது தமிழகத்தில் வழக்கமாயிற்று. மருத மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் மருதூர், நாவல் மரத்தினை அடிப்படையாகக் கொண்ட ஊர் நாவலூர், அதேபோல் பனை மரங்களை அடிப்படையாகக் கொண்ட ஊர் பனையூர் என்று அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2021-08-10.

இவற்றையும் பார்க்க