தேவூர் தேவபுரீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
தேவூர் தேவபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவபுரம்
பெயர்:தேவூர் தேவபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:தேவூர்
மாவட்டம்:நாகப்பட்டினம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:தேவபுரீசுவரர், தேவ குருநாதர், கதலிவனேசுவரர்
தாயார்:தேன் மொழியம்மை, மதுரபாஷிணி
தல விருட்சம்:வெள்ளை வாழை
தீர்த்தம்:தேவ தீர்த்தம், வருண,கௌதம,மிருத, சஞ்சீவினி தீர்த்தங்கள்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கோச்செங்கட்சோழன் கட்டிய மாடக்கோயில்

தேவூர் தேவபுரீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 85ஆவது சிவத்தலமாகும். [1]

அமைவிடம்

மூலவர் விமானம்

சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம்இக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம், தேவூர் ஊராட்சியில் தேவூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.[2]

வழிபட்டோர்

இத்தலத்தில் குபேரன் வழிபட்டு சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்பதும் விராடன் தன் மகள் உத்தரையுடன் வந்து வழிபட்டான் என்பதும் தொன்நம்பிக்கைகள். தேவர்கள், இந்திரன், வியாழபகவான், சூரியன் முதலானோரும் வழிபட்ட திருத்தலம்[3]

மாணிக்கவாசகர் - திருவாசகம் - கீர்த்தித் திருஅகவல்

தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்
கோவால் கோலம் கொண்ட கொள்கையும்

திருப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட சிலைகள்

இக்கோயிலின் திருப்பணி நடந்து கொண்டிருக்கும் போது, 27 செப்டம்பர் 2021 அன்று 14 ஐம்பொன்னால் செய்யப்பட்ட சுவாமி, அம்பாள் மற்றும் பிரதோச நாயனார் சிலைகளும், சங்கு, சூலம், திருவாச்சி போன்ற பூஜை செய்யும் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டது. [4][5]

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க