திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற திருவிற்குடி வீரட்டானேசுவரர் திருக்கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10°49′53″N 79°39′50″E / 10.8314°N 79.6638°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருவிற்குடி |
பெயர்: | திருவிற்குடி வீரட்டானேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருவிற்குடி |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வீரட்டானேசுவரர் |
தாயார்: | ஏலவார் குழலம்மை, பரிமள நாயகி |
தல விருட்சம்: | துளசி |
தீர்த்தம்: | சக்கர, சங்கு தீர்த்தங்கள் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில் என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 74ஆவது சிவத்தலமாகும். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை.
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அமைப்பு
கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம், பலிபீடம் உள்ளன. திருச்சுற்றில் மகாலட்சுமி, சுப்பிரமணியர், மகாலிங்கம், சனீஸ்வரர், பைரவர், சூரியன், சந்திரன், தட்சிணாமூர்த்தி, நால்வர், சேக்கிழார், பிரதான விநாயகர், சோமாஸ்கந்தர் ஆகியோர் உள்ளனர். பைரவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும், துர்க்கையம்மன் சன்னிதியும், பள்ளியறையும், நிர்மால்ய அறையும், உக்ராண அறையும், மடைப்பள்ளியும் உள்ளன. பள்ளியறையை அடுத்து ஜலந்தரவதமூர்த்தி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் முன்பாக இருபுறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரும், விக்னேஸ்வரரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக கொடி மரமும், பலி பீடமும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் மகாவிஷ்ணு உள்ளார்.மூலவர் சன்னதியின் வலது புறம் ஏழவார்குழலி அம்மை சன்னதி உள்ளது. சன்னதிக்கு முன்பாக பலி பீடமும், நந்தியும் உள்ளன. கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது.
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் வீரட்டானேசுவரர்,இறைவி ஏலவார் குழலம்மை.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள் தளம்
- http://www.dinamani.com/weekly_supplements/vellimani/2014/04/25/அட்ட-வீரட்ட -தலங்கள்/article2188628.ece
இவற்றையும் பார்க்க
திருவிற்குடி வீரட்டானேஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருப்பனையூர் சவுந்தரேஸ்வர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 74 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 74 |