திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் | |||||||
— பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | 10°35′N 79°17′E / 10.58°N 79.28°ECoordinates: 10°35′N 79°17′E / 10.58°N 79.28°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
ஆளுநர் | [1] | ||||||
முதலமைச்சர் | [2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||||||
பெருந்தலைவர் | புனிதா மயில்வாகனன் | ||||||
சட்டமன்றத் தொகுதி | திருவிடைமருதூர்
- | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
கோவி. செழியன் (திமுக) | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
14,786 (2011[update]) • 1,183/km2 (3,064/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 12.5 சதுர கிலோமீட்டர்கள் (4.8 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/thiruvidaimaruthur |
திருவிடைமருதூர் (ஆங்கிலம்:Thiruvidaimarudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த திருவிடைமருதூர் வட்டம் மற்றும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடம் அமைந்த பேரூராட்சி ஆகும்.
இவ்வூரில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் புகழ்பெற்றது. இந்த ஊருக்கு அருச்சுனம் என்னும் பெயரும் உண்டு.[4] வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, நீடாமங்கலம் நீரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
அமைவிடம்
தஞ்சாவூரிலிருந்து 38.00 கிமீ தொலைவில் உள்ள திருவிடைமருதூர் பேரூராட்சிக்கு அருகில் கும்பகோணம் 9 கிமீ; மயிலாடுதுறை 27 கிமீ; ஜெயங்கொண்டம் 39 கிமீ; மன்னார்குடி 47 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
12.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,361 பேர் ஆண்கள், 7,425 பேர் பெண்கள் ஆவார்கள். திருவிடைமருதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 87.83 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.83%, பெண்களின் கல்வியறிவு 82.86% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. திருவிடைமருதூர் மக்கள் தொகையில் 10.02% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[6]
அரசு அலுவலகங்கள்
ரயில்வே ஸ்டேசன், துணை அஞ்சல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகமும், கிளைச்சிறையும், சார்பதிவாளர்அலுவலகமும், அரசுகருவூலம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் உள்ளன. பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, கனரா வங்கி, போன்ற வங்கிகளும் உள்ளன. ஒன்றிய தலைநகரமாகவும், சட்டமன்ற தொகுதியாகவும் திகழ்கிறது.
திருநீலக்குடி சப்தஸ்தானம்
திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்கள் அடங்கும்.[7]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் ஒன்று, பதிப்பு 2005, பக்கம் 221
- ↑ "திருவிடைமருதூர் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-05.
- ↑ "Thiruvidaimarudur Population Census 2011". பார்க்கப்பட்ட நாள் 9 சூன் 2015.
- ↑ ஏழுர்த் திருவிழாக்கள், முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002
வெளி இணைப்புகள்
- திருவிடைமருதூர் பேரூராட்சியின் இணையதளம் பரணிடப்பட்டது 2019-03-23 at the வந்தவழி இயந்திரம்