சிவசந்திரன்
சிவசந்திரன் | |
---|---|
பிறப்பு | நாராயணன் |
பணி | நடிகர், இயக்குநர், எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1976–1999 |
வாழ்க்கைத் துணை | லட்சுமி (தி. 1987) |
பிள்ளைகள் | சம்யுக்தா (2000இல் தத்தெடுத்தது) |
நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தனது திரைப் பெயரான சிவச்சந்திரன் (Sivachandran) என்பதன் மூலம் சிறப்பாக அறியப்படுகிறார். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், இயக்குநர், எழுத்தாளர் ஆவார்.
தொழில்
சிவச்சந்திரன் பட்டினப்பிரவேசம் (1977) திரைப்படத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அறிமுகமானார்.[1] பின்னர் அன்னபூரணி (1978) படத்தில் ஆர். முத்துராமனுடன் எதிர்மறை வேடத்தில் நடித்தார். அவள் அப்படித்தான் (1978) மற்றும் பொல்லாதவன் (1980) உள்ளிட்ட குறிப்பிடத்தக்க படங்களில் நடித்தார்.[2] என் உயிர் கண்ணம்மா (1988) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் , பிரபுவின் பல படங்களை இயக்கியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
நாராயணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் சிவச்சந்திரன் என்று பெயரை மாற்றி தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த திரைப் பெயரானது சிவாஜி கணேசனிடமிருந்து "சிவா"வையும் எம். ஜி. ராமச்சந்திரனிடமிருந்து "சந்திரன்" என்பதையும் இணைத்து உருவாக்கபட்டதாகும்.[3]
என் உயிர் கண்ணம்மா (1988) படத்தின் படப்பிடிப்பின்போது நடிகை லட்சுமியை காதலித்தார். அவர்கள் இருவரும் 1987 இல் திருமணம் செய்து கொண்டனர்.[2]இவர் மீண்டும் இயக்கிய இரத்த தானம் (1988), ஜோடி சேந்தாச்சு (1992) ஆகிய படங்களில் மீண்டும் லட்சுமியுடன் சேர்ந்து பணியாற்றினார். சிவச்சந்திரனும் லட்சுமியும் 2000 ஆம் ஆண்டில் சம்யுக்தா என்ற பெண்ணை தத்தெடுத்தனர்.
திரைப்படவியல்
நடிகராக
- படங்கள்
- தொலைக்காட்சி
- அரசி (சன் தொலைக்காட்சி)
- மகாலட்சுமி (கலைஞர் தொலைக்காட்சி)
இயக்குநராக
- என் உயிர் கண்ணம்மா (1988)
- இரத்த தானம் (1988)
- ஹொச காவ்யா (1989; கன்னடம்)
- நியாயங்கள் ஜெயிக்கட்டும் (1990)
- சத்ய ஜ்வாலே (1995; கன்னடம்)
- மனம் விரும்புதே உன்னை (1999)
கதை எழுத்தாளராக
- அன்பே ஓடி வா (1984)
- சங்கர் குரு (1987)
உரையாடல் எழுத்தாளராக
- ஆனந்த் (1987)
குறிப்புகள்
- ↑ Mohan Raman (3 January 2015). "KB: Kollywood’s Discovery Channel". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150501063135/http://www.thehindu.com/features/cinema/kb-kollywoods-discovery-channel/article6751541.ece.
- ↑ 2.0 2.1 "Sivachandran". 23 August 2013. https://antrukandamugam.wordpress.com/2013/08/23/sivachandran/.
- ↑ Hindu Tamil Thisai (18 November 2019). ""பாரதிராஜா தந்த வாய்ப்பை மறுத்தேன்" – Exclusive Interview With Siva Chandran | Rewind With Ramji" (in ta). https://www.youtube.com/watch?v=gm2DKWPJoVw.
- ↑ Krishnaswamy, N. (8 June 1990). "Nyayangal Jayikkattum". இந்தியன் எக்சுபிரசு: p. 7. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19900608&printsec=frontpage&hl=en.