மங்கை ஒரு கங்கை
மங்கை ஒரு கங்கை | |
---|---|
இயக்கம் | டி. அரிகரன் |
தயாரிப்பு | கோவைத்தம்பி |
திரைக்கதை | டி. அரிகரன் |
இசை | இலட்சுமிகாந்த்-பியாரேலால் |
நடிப்பு | சரிதா நதியா |
ஒளிப்பதிவு | உ. ராஜகோபால் |
படத்தொகுப்பு | எம். எஸ். மூர்த்தி |
கலையகம் | மதர் லேண்ட் பிக்சர்ஸ் |
வெளியீடு | 24 சூலை 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மங்கை ஒரு கங்கை (Mangai Oru Gangai) என்பது 1987 ஆண்டைய இந்திய தமிழ் சட்ட நாடகத் திரைப்படமாகும். இந்த படதை டி. அரிகரன் இயக்க, கோவைத்தம்பி தயாரித்துள்ளார். இப்படத்தில் சரிதா மற்றும் நதியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது 24 சூலை 1987 அன்று வெளியிடப்பட்டது. மங்கை ஒரு கங்கை (Mangai Oru Gangai) என்பது 1987 ஆண்டைய இந்திய தமிழ் சட்ட நாடகத் திரைப்படமாகும். இந்த படத்தை டி. அரிகரன் இயக்க, கோவைத்தம்பி தயாரித்துள்ளார். இப்படத்தில் சரிதா மற்றும் நதியா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இது 24 சூலை 1987 அன்று வெளியிடப்பட்டது.
கதை
ராதா ரங்கநாதன், ஒரு வழக்கறிஞர், தனது மைத்துனரைக் கொலை செய்த குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தரத் தவறியதால் மன உளைக்களுக்கு ஆளானவள்.
நடிகர்கள்
- ராதா ரங்கநாதனாக சரிதா
- நதியா
- சரண்ராஜ்
- பூர்ணம் விஸ்வநாதன்
- சுரேஷ்
- சிவசந்திரன்
தயாரிப்பு
மங்கை ஒரு கங்கை டி. அரிகரன் என்பவரால் இயக்கப்பட்டு, கோவைத்தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்சால் தயாரிக்கபட்டது. மதர்லேண்ட் பிக்சர்ஸ் கதைப் பிரிவின் கதையை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதையை அரிகரன் எழுத, உரையாடலை எம். ஜி. வல்லபன் எழுதினார். ஒளிப்பதிவை யு. ராஜகோபால் மேற்கொள்ள, படத் தொகுப்பை எம். எஸ். செய்தார்.
இசை
இந்த படத்திற்கான இசையை இலட்சுமிகாந்த்-பியாரேலால் ஆகியோரால் மேற்கொள்ளபட்டது.[1]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "அழகிய நிலவிது" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | 6:10 | |
2. | "ஓடம் இது ஓடட்டுமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 5:54 | |
3. | "நீராடி வா தென்றலே" | தினேஷ், சௌருஸ் | 7:14 | |
4. | "காதல் பண்ண கத்துக்கொடுப்பேன்" | எஸ். ஜானகி | 5:24 | |
5. | "அச்சம் இல்லா பாதையில்" | சித்ரா | 5:37 | |
6. | "நீராடி வா தென்றலே" | எஸ். ஜோதி | 5:49 |
வெளியீடு மற்றும் வரவேற்பு
மங்கை ஓரு கங்கை படம் 24 சூலை 1987 இல் வெளியிடப்பட்டது.[2] 7 ஆகத்து அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரசில் என். கிருஷ்ணசாமி எழுதியது, "படத்தின் படைப்பாளிகள் திரைக்கதையில் மெனக்கெட்டிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்", மேலும் சரிதா, சரண் ராஜ், நதியா, விஸ்வநாதன் ஆகியோரின் நடிப்பையும் பாராட்டினார்.
குறிப்புகள்
- ↑ Laxmikant–Pyarelal. "Mangai Oru Gangai (Original Motion Picture Soundtrack)". Super Cassettes Industries. https://itunes.apple.com/us/album/mangai-oru-gangai-original-motion-picture-soundtrack/1203131076.
- ↑ "Mangai Oru Gangai". இந்தியன் எக்சுபிரசு: p. 4. 24 July 1987. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870724&printsec=frontpage&hl=en.