நதியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிறப்புசரீனா அனுஷா மோய்டு
24 அக்டோபர் 1966 (1966-10-24) (அகவை 58)[1]
செம்பூர், மும்பை, இந்தியா
தேசியம்இந்தியர்
மற்ற பெயர்கள்நதியா,
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1984-1994, 2004-தற்போது வரை
பெற்றோர்மோய்டு,
லலிதா
வாழ்க்கைத்
துணை
சிரீஷ் காட்போல் (1988-தற்போது வரை)
விருதுகள்நோக்கெத்த தூரத்து கண்ணும் நாட்டு க்காக சிறந்த நடிகை விருது (கேரளா)

நதியா (பிறப்பு: அக்டோபர் 24, 1966) தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்டு ஆகும். 1984-94 காலகட்டத்தில் கதாநாயகியாகவும், பின்னர் 2004 முதல் தற்போது வரை துணைப் பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2] இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.

நதியா தமிழ்ப் படங்களில் நடித்து ரசிகைகளின் மனதில் இடம் பெற்று தாக்கத்தை ஏற்படுத்தியவர். இவர் கதாநாயகியாக நடித்த கால கட்டங்களில் எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லிவிற்கும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் - நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை நதியா பெண்கள் சைக்கிள் ஆகியவையாகும்.[3]

நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற தமிழ்த் திரைப்படத்தில் மீண்டும் அறிமுகமானார் , மேலும் அவரது நடிப்புக்கு விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், அவர் ஆரோக்யா பால் மற்றும் தங்கமயில் ஜூவல்லரியின் பிராண்ட் தூதராக கையெழுத்திட்டார். ஜெயா டிவியில் நடிகை குஷ்பூவுக்கு பதிலாக ஜாக்பாட் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கினார். 2013 ஆம் ஆண்டில், தெலுங்கு திரைப்படமான மிர்ச்சியில் நடிகர் பிரபாஸின் தாயாகவும், அத்தாரிண்டிகி தாரேதியில் ஒரு பிடிவாதமான அத்தையாகவும், அவர் நடித்த இரு பாத்திரங்களுக்கும் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றார், . 2013 ஆம் ஆண்டில் அத்தாரிண்டிகி தாரேதியில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான நந்தி விருதைப் பெற்றார்.

தொழில்

மலையாளத் திரைப்படத்தில் மோகன்லால் மற்றும் பத்மினியோடு இணைந்து நோக்கத்த தூரது கண்ணும் நட்டு (1984)இல் நதியா என்ற பெயரில் அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - மலையாளத்தில் பெற்றார். இத்திரைப்படம் மீண்டும் தமிழில் பத்மினியோடு பூவே பூச்சூடவா(1985)இல் அறிமுகமானார். நதியா கூற்றுப்படி, 1986ஆம் ஆண்டு இந்திய தமிழ் -மொழி காதல் நாடகத் திரைப்படம் மணிரத்னம் எழுதி இயக்கிய, மற்றும் வெங்கடேஸ்வரன் தயாரித்த மௌன ராகம் திரைப்படத்தில் ரேவதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் முந்தைய திரைப்படக் கடமைகள் காரணமாக மறுத்துவிட்டார்.

1990 களின் நடுப்பகுதியில், அவர் லண்டனுக்குத் திரும்புவதற்கு முன்பு, ஒரு நடிகையாக ஒரு சுருக்கமான மறுபிரவேசம் செய்தார்.

குடும்ப வாழ்க்கை

இவரின் தந்தை மோய்டு இஸ்லாம் மதத்தையும், தாயார் லலிதா இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார். இவர் தமிழ், மலையாளம், மராட்டி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசும் திறன் பெற்றவர்.[சான்று தேவை] இவர் மராட்டியரான சிரீஸ் காட்போல் என்பவரை 1988 ஆம் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு சனம், ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

நதியா ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்

"https://tamilar.wiki/index.php?title=நதியா&oldid=22953" இருந்து மீள்விக்கப்பட்டது