சிம்லா ஸ்பெஷல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிம்லா ஸ்பெஷல்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புமுக்தா வி.ராமசாமி
கதைவிசு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீப்ரியா
எஸ். வி. சேகர்
ஒய். ஜி. மகேந்திரன்
மனோரமா
ஒளிப்பதிவுஎம். கர்ணன்
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
சி. ஆர். ஷண்முகம்
நடனம்புலியூர் சரோஜா
கலையகம்முக்தா பிலிம்ஸ்
விநியோகம்முக்தா பிலிம்ஸ்
வெளியீடு14 ஏப்ரல் 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சிம்லா ஸ்பெஷல் (Simla Special) 1982-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படமாகும்.[1] இதில் கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 'உனக்கென்ன மேலே' எனும் பாடலுக்கு நடன அமைப்பாளராகவும் கமல் பணியாற்றியுள்ளார். முக்தா சீனிவாசன் இயக்கினார்.[2]

வகை

நகைச்சுவைப்படம்

கதை

கோபு (கமல்ஹாசன்) ஒரு வளர்ந்து வரும் நாடகக் கலைஞர். அவர் மற்றும் அவரது நல்ல நண்பர் பாபு (எஸ். வி. சேகர்) இருவரும் குறைந்தசெலவில் நகைச்சுவை நாடகங்கள் நிகழ்த்தும் பிரபலமான குழுவிற்குச் சொந்தக்காரர்கள். பாபுவின் சகோதரியின் திருமணச் செலவிற்கு கைகொடுக்க உதவும் என்று , அவர்கள் சிம்லாவில் உள்ள தமிழர்கள் சங்கம் சார்பில் நாடகங்களை நடத்த அவர்கள் குழு தயார் ஆகிறது. அந்த நாடகங்களில் ஒன்று "சிம்லா ஸ்பெஷல்" என்ற தலைப்பில் மகாலட்சுமி (ஸ்ரீப்ரியா)யால் எழுதப்பட்டிருக்கிறது.

கோபு சிம்லாவில் இருக்கும் போது, பாபுவிடம் கோபுவின் அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவசர தகவல் தெரிவிக்கும் ஒரு தந்தி வருகிறது. அவர்கள் சிம்லாவில் நாடகம் நடத்த இயலாவிட்டால், வரப்போகும் பணஇழப்புக்குப் பயந்து, பாபு கோபுவிடம் தகவலைக் கூறாமல் மறைத்து வைத்திருக்கிறார். இதற்கிடையில் ஒரு நண்பர், கோபுவின் தாயார் நிலைமை மிகவும் மோசமடைந்தது என்று கோபுவிடம் தெரிவித்து விடுகிறார். தனது தாயின் நோய் பற்றி கண்டுபிடித்தாலும், இருப்பினும், தனது நண்பரின் அக்காவுக்காக, கோபு நாடகத்தில் தொடர முடிவு செய்கிறார். பாபுவுக்குத் தெரிந்தால், கோபுவை அவரது தாயார் அருகில் இருக்க சொல்லி வலியுறுத்துவார் என்று நினைத்து, தனக்கு வந்த தகவலைக் கோபு மறைக்கிறார்.

பாபுவின் தங்கை நிச்சயதார்த்தம் நடந்த நாளில், பாபுவின் கோட்டு பையில் அந்த தந்தியைக் கண்டுபிடித்து தனது நண்பரின் சுயநலத்தை உணர்கிறான். மனக்கசப்பினால் அவர்களது நட்பு முறிகிறது. இறுதி நாடகம் நிகழ்த்தும் போது, கோபுவின் அம்மா உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று ஒரு அழைப்பு வருகிறது. கோபதாபங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, நண்பர்கள் மீண்டும் இணைகிறார்கள்.

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். கவிஞர் வாலி பாடல்களை எழுதினார்.[3] உனக்கென்ன மேலே" பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் சிந்து பைரவி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[4][5] அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலியே எழுதினார்.

எண். பாடல் பாடகர்(கள்)
1 "உனக்கென்ன மேலே நின்றாய்" எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2 "தஞ்சாவூர் மேளம் அடிச்சு" எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன்
3 "லுக் லவ் மை டியர் (Look Love Me Dear)" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
4 "குத்துர குத்துல" மலேசியா வாசுதேவன், மனோரமா

மேற்கோள்கள்

  1. "ஏப்ரல் 14ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..." (in Ta). 14 April 2021 இம் மூலத்தில் இருந்து 29 October 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231029021019/https://screen4screen.com/news/14-april-movies. 
  2. "Muktha Srinivasan was a people's person". சினிமா எக்ஸ்பிரஸ். 30 May 2018 இம் மூலத்தில் இருந்து 25 November 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211125130442/https://www.cinemaexpress.com/stories/trends/2018/may/30/muktha-srinivasan-was-a-peoples-person-6277.html. 
  3. "Simla Special (1982)" இம் மூலத்தில் இருந்து 3 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131203035913/http://www.raaga.com/channels/tamil/album/T0000314.html. 
  4. "Ragas hit a high". தி இந்து. 20 September 2013 இம் மூலத்தில் இருந்து 26 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181226035819/https://www.thehindu.com/features/friday-review/music/ragas-hit-a-high/article5149905.ece. 
  5. "Light and melodious". தி இந்து. 10 May 2013 இம் மூலத்தில் இருந்து 23 July 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180723083947/https://www.thehindu.com/features/friday-review/music/light-and-melodious/article4702358.ece. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சிம்லா_ஸ்பெஷல்&oldid=33299" இருந்து மீள்விக்கப்பட்டது