ராஜஸ்ரீ

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ராஜஸ்ரீ
பிறப்புகுசுமாகுமாரி
31 ஆகத்து 1945 (1945-08-31) (அகவை 79)
ஏலூரு, மேற்கு கோதாவரி, ஆந்திரப் பிரதேசம்
மற்ற பெயர்கள்ராஜஸ்ரீ, கிரேசி
பணிநடிகை, பரதநாட்டியக் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
1956–1979
வாழ்க்கைத்
துணை
தோட்டா பஞ்சாசனியம் (1978-1983, இறப்பு)
பிள்ளைகள்1 மகன் (பி.1979)

ராஜஸ்ரீ (Rajasree, குசுமா குமாரி, தெலுங்கு: కుసుమా కుమారి, பிறப்பு: 31 ஆகத்து 1945), தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் 1956 முதல் 1979 வரை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1] என். டி. ராமராவ், காந்தாராவ் ஆகியோருடன் பல தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் காதலிக்க நேரமில்லை, நீயும் நானும், பாமா விஜயம் நடித்துப் புகழடைந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை

ராஜஸ்ரீ ஆந்திரப் பிரதேசம், ஏலூரு என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தை ஒரு தொடருந்து நிலைய அதிபராக இருந்தவர். 10 வயதிலேயே சென்னைக்கு இடம்பெயர்ந்தார். இவரது கணவர் தோட்ட பஞ்சாசனியம் திருமணம் முடிந்து சில ஆண்டுகளிலேயே இறந்து விட்டார். அவர்களது மகனுக்கு அப்போது 4 வயது மட்டுமே.[2]

விருதுகள்

  • எம்.ஜி.ஆர் விருது (தமிழ்நாடு அரசு, 2004)
  • கலைமாமணி விருது (2012) - தமிழ்த் திரைப்படங்களில் அவரது பங்களிப்பிற்காக வழங்கப்பட்டது.

நடித்த திரைப்படங்கள்

தமிழ்

இப்பட்டியல் முழுமையானது அல்ல.

ஆண்டு திரைப்படம் பாத்திரம்
1978 இரவு 12 மணி
1976 வீடுவரை உறவு
1975 அமுதா அன்பரசி
நாளை நமதே கமலா
சுவாமி ஐயப்பன்
1974 அக்கரைப் பச்சை உஷா
நேற்று இன்று நாளை அமுதா
பத்து மாத பந்தம் மல்லிகா
1973 பட்டிக்காட்டு பொன்னையா மேகலா
ஸ்கூல் மாஸ்டர்
1972 எல்லைக்கோடு பவானி
1971 யானை வளர்த்த வானம்பாடி மகன் காமினி
ஆதி பராசக்தி இலட்சுமிதேவி
பாட்டொன்று கேட்டேன்
பொய் சொல்லாதே
நீதி தேவன்
1970 பத்தாம் பசலி ராதா
சொர்க்கம் அஞ்சனா
நம்மவீட்டு தெய்வம்
1969 குமார சம்பவம் ஊர்வசி
சிங்கப்பூர் சீமான்
அவரே என் தெய்வம்
அடிமைப் பெண் இளவரசி முத்தழகி
பூவா தலையா ராஜி
உலகம் இவ்வளவு தான் சுமதி
1968 குடியிருந்த கோயில் ஆஷா
சிரித்த முகம்
டில்லி மாப்பிள்ளை காந்திமதி
நீயும் நானும்
கல்லும் கனியாகும் கீதா
1967 செல்வ மகள் சாரதா
அனுபவம் புதுமை வனிதா
அனுபவி ராஜா அனுபவி ராஜாமணி
பாமா விஜயம் பாமா
தாய்க்குத் தலைமகன் நளினி
1966 தாயின் மேல் ஆணை
1965 நீலவானம் விமலா
வழிகாட்டி
இரு துருவம் கமலா
பூமாலை நளினா
1964 கலைக்கோவில் சரோஜா
அம்மா எங்கே
மகளே உன் சமத்து அல்லி
நல்வரவு
நானும் மனிதன் தான்
பூம்புகார் மாதவி
காதலிக்க நேரமில்லை நிம்மி
1963 காட்டு மைனா
யாருக்கு சொந்தம் மல்லிகா
மந்திரி குமாரன் ராணி
கலை அரசி இளவரசி ரஜனி
குபேரத் தீவு வசந்தி
1962 நிச்சய தாம்பூலம் சரளா
செங்கமலத் தீவு கன்னி
தென்றல் வீசும்
நீயா நானா
1961 பணம் பந்தியிலே சாந்தா
1960 பக்த சபரி
பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
1956 நாக தேவதை குழந்தையாக (முதலாவது படம்)

இந்தி

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1966 பியார் கியே ஜா நிம்மி காதலிக்க நேரமில்லையின் இந்திப் பதிப்பு
1967 நசீகட்
1968 பயால் கி ஜாங்கர் கலா
1968 முச்ரிம் கவுன்

மேற்கோள்கள்

  1. "Sengamala Theevu". cinestaan.com. பார்க்கப்பட்ட நாள் 7 January 2018.
  2. http://www.gulte.com/news/10034/CMs-Language-Skills-shock-Actresses

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ராஜஸ்ரீ&oldid=23306" இருந்து மீள்விக்கப்பட்டது