யோன் ஊலாவ் போச
இயற்பெயர் | யோன் போச Jon Fosse |
---|---|
பிறந்ததிகதி | 29 செப்டம்பர் 1959 |
பிறந்தஇடம் | கக்கசுண்ட், றுகலாண்ட், நோர்வே |
பணி | நாடக எழுத்தாளர், எழுத்தாளர் |
தேசியம் | நோர்வேயர் |
கல்வி நிலையம் | பேர்கன் பல்கலைக்கழகம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2023) |
யோன் ஊலாவ் போச (Jon Olav Fosse; பிறப்பு: 29 செப்டம்பர் 1959) ஓர் நோர்வேய எழுத்தாளரும் நாடகப் படைப்பாளியும் ஆவார். இவர் 2023 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றார். இவருடைய "சொல்லமுடியாதவற்றுக்குக் குரல் கொடுக்கும் புதுமையான நாடகங்களுக்கும் உரைநடை எழுத்துக்கும்" என்று நோபல் குழுவினர் குறித்துள்ளனர். என்றிக்கு இபுசெனுக்கு அடுத்ததாக இவருடைய நாடகங்களே அதிகமாக நடைபெறுகின்றன.[1] இவரை புதிய இபுசென் என்று அடிக்கடி கூறுவதுண்டு. பொசேயின் படைப்புகள் 19 ஆம் நூற்றாண்டில் அமைந்த நாடக மரபின் தொடர்ச்சியாகக் கருதப்பட்டது.[2][3]
வாழ்க்கைக் குறிப்பு
யோன் ஊலாவ் போச நோர்வேயில் யோகேசுன் என்னும் இடத்தில் பிறந்தார். இவருக்கு அகவை 7 இருக்கும்பொழுது ஒரு தீநேர்ச்சி ஏற்பட்டு அவர் இறப்பின் வாயில் இருந்து மீண்டார். இந்நிகழ்ச்சி அவர் ஆளான காலத்தில் எழுத்தாளராக உருவெடுக்கக் காரணமாக அமைந்தது.[4] இவர் பெர்கன் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து ஒப்பீட்டு இலக்கியம் படித்தார், பிறகு இதே துறையில் நைனோர்சுக்கு (Nynorsk) என்னும் நோர்வேயின் மற்றொரு எழுத்துப்பணி தொடங்கினார். இவருடைய முதல் புதினம் "சிவப்பு, கறுப்பு" (Raudt, svart) 1983 இல் வெளியிடப்பட்டது.[5] இவருடைய முதல் நாடகம் "நாம் எப்பொழுதும் பிரிக்கப்படமாட்டோம்" (Og aldri skal vi skiljast )1994 இல் எழுதி மேடை ஏறியது. பொசே புதினங்களும், சிறுகதைகளும் கவிதைகளும் குழந்தைகளுக்கான படைப்புகளையும், கட்டுரைகளையும் நாடங்களையும் படைத்துள்ளார். இவருடைய படைப்புகள் 40 மொழிகளிலே மொழிபெயர்க்கப்பட்டுல்ளன. இவர் வயலின் வாசிக்கவும் செய்வார்.[5]. இவருடைய பதின்ம அகவை எழுத்துகள் இவர் படைத்த பாடல்களௌம் இசையமைப்புகளும் கொண்டிருந்தன.
மதிப்பீடு
என்றிக்கு இபுசெனுக்கு அடுத்து அதிக அளவில் மேடையேறிய நாடக எழுத்தாளர் பொசேதான்.[1] He has often been referred to as the "new Henrik Ibsen,"[2] என்றும் இவருடைய படைப்புகள் என்றிக்கு இபுசென் தொடங்கி வைத்த 19 ஆம் நூற்றாண்டின் மரபின் தொடர்ச்சி என்றும் கூறப்படுகின்றது [3]
பொசே பிரான்சின் செவாலியே விருதினை 2003 இல் வென்றார்.[6] வாழும் நூறு வியப்புறு அறிவாளிகளில் 83 ஆவதாக த டெயிலி டெலிகிராப் அறிவித்தது.[7]
2011 முதல் பொசேவுக்கு கிரோட்டென் என்னும் நோர்வேயின் அரசின் இல்லத்தில் வாழ்நாள் முழுவதும் வாழ ஒரு பெருமையாக இடமளித்துள்ளனர். இது நோர்வேயின் அரச வளாகத்துக்குள் ஓசுலோ நகரத்தின் நடுவே அமைந்த ஒரு இல்லம்.[8] நோர்வேயின் கலை பண்பாட்டுக்கு ஆக்கம் அளிப்பவர்களுக்காக நோர்வேயின் அரசரால் பெருமைய செய்கையாக இவ்வில்லம் அளிக்கப்படுகின்றது.
விவிலியம் (விவிலியம்) மொழிபெயர்ப்பின் அறிவுரையாளர்களுள் ஒருவர் பொசே. 2011 இல் நோர்வே பைபிளை மொழிபெயர்த்துள்ளது.[9] and hospitalized himself to rehabilitate his long-term alcohol consumption.[5]
2015 இல் பொசேயின் முப்படைப்பாகிய விழிப்பு (அந்துவாக்கே, Andvake), ஓலாவின் கனவு ('Olavs draumar), களைப்பு (Kveldsvævd) ஆகியவற்றுக்கு நோர்திக்கு இலக்கிய மன்றத்தின் பரிசு வழங்கப்பெற்றது.[10]
மிகப்பல பொசேவின் படைப்புகள்பாரசீக மொழியில் முகம்மது அமீதால் மொழிபெயர்க்கப்பட்டு தெகுரானில் நாடங்கங்களாக நிகழ்த்தப்பட்டுள்ளன.[11][12]
ஏப்பிரல் 2022 இல், "ஒரு புதிய பெயர்: எழுபடைப்பில் VI-VII" என்னும் இவருடைய படைப்பு தாமியோன் சியரல்சு என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு அது அனைத்துலக புக்கர் பரிசுக்கான குறும்பட்டியலில் இடம் பிடித்தது.[13] The book was named a finalist for the 2023 National Book Critics Circle Award in Fiction.[14]
அக்டோபர் 2023 இல் பொசேவுக்கு இலக்கியத்துகான நோபல் பரிசு அறிவிக்கப்பெற்றது.[15]
தனிவாழ்க்கை
இவர் சுலோவாக்கிய நாட்டைச் சேர்ந்த தன் இரண்டாம் மனைவியுடன் பகுதிநேரம் ஆத்திரியாவில் வாழ்கின்றார். இது தவிர இவருக்கு பெர்கன் நகரிலும் மேற்கு நோர்வேயிலும் வீடுகள் உள்ளன.[5] முதலிலில் இவர் நோர்வே கிறித்துவத் திருச்சபையின் உறுப்பினராக இருந்தார். (2012-இற்கு முன்பு இவர் தன்னை இறைமறுப்பாளர் என்று கூறி வந்துள்ளார்) அதன் பின் 2012-2013 இல கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்தார்.[9] இவர் தன்னுடைய கள்சாராயக்குடிக்கு வயப்பட்டிருப்பதில் இருந்து மீள மருத்துவ மனையில் இருந்தார்.[5]
படைப்புகள்
உரைநடை
- Raudt, svart (1983). "சிவப்பு, கறுப்பு
- Stengd gitar (1985). மூடிய கித்தார்
- Blod. Steinen er (1987). குருதி. கல் உள்ளது
- Naustet (1989). ஓடவேடு (Boathouse, மொழிபெயர்ப்பு May-Brit Akerholt (Dalkey Archive, 2017).
- Flaskesamlaren (1991)." புட்டி திரட்டி (The Bottle-Collector)
- Bly og vatn (1992). ஈயமும் நீரும் (Lead and Water)
- To forteljingar (1993). இரு கதைகள் (Two Stories)
- Prosa frå ein oppvekst (1994). குழந்தைப் பருவத்திலிருந்து உரைநடை எழுத்து (Prose from a Childhood)
- Melancholia I (1995). உளத்துயரம் (Melancholy, மொழிபெயர்ப்பு. Grethe Kvernes and Damion Searls (Dalkey Archive, 2006).
- Melancholy II (1996). உளத்துயரம் II, மொழிபெயர்ப்பு. Eric Dickens (Dalkey Archive, 2014).
- Eldre kortare prosa med 7 bilete av Camilla Wærenskjold (1998). Older Shorter Prose with 7 Pictures of Camilla Wærenskjold
- Morgon og kveld (2000). காலையும் மாலையும், மொழிபெயர்ப்பு. Damion Searls (Dalkey Archive, 2015).
- Det er Ales (2004). தீக்காயலில் ஆலிசு, மொழிபெயர்ப்பு. Damion Searls (Dalkey Archive, 2010).
- Andvake (2007). விழிப்புநிலை
- Kortare prosa (2011). குறும் உரைநடை எழுத்து
- Olavs draumar (2012). ஓலாவின் கனவுகள்
- Kveldsvævd (2014). களைப்பு
- Trilogien (2014). முப்படைப்பு, மொழிபெயர்ப்பு. May-Brit Akerholt (Dalkey Archive, 2016). Compiles three novellas: Wakefulness, Olav's Dreams and Weariness.
- Det andre namnet – Septologien I-II (2019). மற்றொரு பெயர்: எழுபடைப்பு I-II, மொழிபெயர்ப்பு Damion Searls (Fitzcarraldo Editions, 2019).
- Eg er ein annan – Septologien III-V (2020). நான் இன்னொன்று எழுபடைப்பு III-V, மொழிபெயர்ப்பு. Damion Searls (Fitzcarraldo Editions, 2020).
- Eit nytt namn – Septologien VI-VII (2021). ஒரு புதிய பெயர் எழுபடைப்பு VI-VII, மொழிபெயர்ப்பு. Damion Searls (Fitzcarraldo Editions, 2021).
ஆங்கிலத்தில் தொகுப்புகள்
- Scenes from a Childhood, trans. Damion Searls (Fitzcarraldo Editions, 2018). Collects texts from various sources.
- Melancholy I-II, trans. Damion Searls and Grethe Kvernes (Fitzcarraldo Editions, 2023)
நாடகங்கள்
- Nokon kjem til å komme (written in 1992–93; first produced in 1996). Someone Is Going to Come Home
- Og aldri skal vi skiljast (1994). And We'll Never Be Parted
- Namnet (1995). The Name
- Barnet (1996). The Child
- Mor og barn (1997). Mother and Child
- Sonen (1997). The Son
- Natta syng sine songar (1997). Nightsongs, trans. Gregory Motton (2002).
- Gitarmannen (1999). The Guitar Man
- Ein sommars dag (1999). A Summer's Day
- Draum om hausten (1999). Dream of Autumn
- Sov du vesle barnet mitt (2000). Sleep My Baby Sleep
- Besøk (2000). Visits
- Vinter (2000). Winter
- Ettermiddag (2000). Afternoon
- Vakkert (2001). Beautiful
- Dødsvariasjonar (2001). Death Variations
- Jenta i sofaen (2002). The Girl on the Sofa, trans. David Harrower (2002).
- Lilla (2003). Lilac
- Suzannah (2004)
- Dei døde hundane (2004). The Dead Dogs, trans. May-Brit Akerholt (2014).
- Sa ka la (2004)
- Varmt (2005). Warm
- Svevn (2005). Sleep
- Rambuku (2006)
- Skuggar (2006). Shadows
- Eg er vinden (2007). I Am the Wind, trans. Simon Stephens (2012).
- Desse auga (2009). These Eyes
ஆங்கிலத்தில் தொகுப்புகள்
- Plays One (2002). Someone Is Going to Come Home; The Name; The Guitar Man; The Child
- Plays Two (2004). A Summer's Day; Dream of Autumn; Winter
- Plays Three (2004). Mother and Child; Sleep My Baby Sleep; Afternoon; Beautiful; Death Variations
- Plays Four (2005). And We'll Never Be Parted; The Son; Visits; Meanwhile the lights go down and everything becomes black
- Plays Five (2011). Suzannah; Living Secretly; The Dead Dogs; A Red Butterfly's Wings; Warm; Telemakos; Sleep
- Plays Six (2014). Rambuku; Freedom; Over There; These Eyes; Girl in Yellow Raincoat; Christmas Tree Song; Sea
பாக்கள்-கவிதைகள்
- Engel med vatn i augene (1986)
- Hundens bevegelsar (1990)
- Hund og engel (1992)
- Dikt 1986–1992 (1995). Revidert samleutgåve
- Nye dikt 1991–1994 (1997)
- Dikt 1986–2001 (2001). Samla dikt. Lyrikklubben
- Auge i vind (2003)
- Stein til stein (2013)
ஆங்கிலத்தில் தொகுப்புகள்
- பாக்கள் (Shift Fox Press, 2014). மேரி பிரித்து ஆக்ரோலட்டு ( May-Brit Akerholt.) மொழிபெயர்ப்புகள்
கட்டுரைகள்
- Frå telling via showing til writing (1989)
- Gnostiske essay (1999)
- An Angel Walks Through the Stage and Other Essays, trans. May-Brit Akerholt (Dalkey Archive, 2015).
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ 1.0 1.1 "Jon Fosse – «take it or leave it»". NRK. https://www.nrk.no/kultur/jon-fosse---_take-it-or-leave-it_-1.540311.
- ↑ 2.0 2.1 Jon Fosse in Store norske leksikon
- ↑ 3.0 3.1 H.H. Andersson, Jon Fosse i teaterhistorien, kunstinstitusjonen og markedet, University of Oslo, 2003
- ↑ "I have to talk about it because it's so fundamental to me: at the age of seven, I was close to death because of an accident . . I could see myself sitting here. everything was peaceful, and I looked at the houses back home, and I felt quite sure that I saw them for the last time as I was going to the doctor. Everything was shimmering and very peaceful, a very happy state, like a cloud of particles of light. This experience is the most important experience from my childhood. And it has been very formative for me as a person, both in good and in bad ways. I think it created me as a kind of artist." ('Jon Fosse's Search for Peace'. The New Yorker, 13 November 2022)
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 Merve Enre (13 November 2022). "Jon Fosse's Search for Peace". The New Yorker. பார்க்கப்பட்ட நாள் 14 November 2022.
- ↑ Fransk heder til Fosse, nrk.no.
- ↑ "Top 100 living geniuses". Telegraph.co.uk. 30 October 2007. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
- ↑ "Winje Agency". Winje Agency (in English). பார்க்கப்பட்ட நாள் 12 May 2020.
- ↑ 9.0 9.1 Kjell Kvamme (16 November 2013) Jon Fosse katolikk: Som å kome heim பரணிடப்பட்டது 19 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம் Vårt Land. Retrieved 16 November 2013
- ↑ NRK. "Fosse vant Nordisk råds litteraturpris". NRK. பார்க்கப்பட்ட நாள் 6 November 2015.
- ↑ "Iranian actor Kianian to perform in Fosse play". Mehr News Agency (in English). 4 November 2006. பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
- ↑ Behnegarsoft.com (1 January 2011). "IBNA – 2nd stage shortlisted works of Dramatic Arts". Iran's Book News Agency (IBNA) (in English). பார்க்கப்பட்ட நாள் 19 April 2019.
- ↑ Knight, Lucy (7 April 2022). "International Booker prize shortlist delivers 'awe and exhilaration'". The Guardian. https://www.theguardian.com/books/2022/apr/07/international-booker-prize-shortlist.
- ↑ Varno, David (1 February 2023). "NATIONAL BOOK CRITICS CIRCLE ANNOUNCES FINALISTS FOR PUBLISHING YEAR 2022". National Book Critics Circle. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023.
- ↑ Marshall, Alex (2023-10-05). "Nobel Prize in Literature: Jon Fosse Is the 2023 Laureate" (in en-US). The New York Times. https://www.nytimes.com/live/2023/10/05/books/nobel-prize-literature.
வெளி இணைப்புகள்
- Jon Fosse பரணிடப்பட்டது 4 செப்டம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம் at Doollee.com
- Vincent Rafis, Mémoire et voix des morts dans le théâtre de Jon Fosse, Les presses du réel, Dijon, 2009.
- Andrew Dickson: "Jon Fosse: 'The idea of writing another play doesn't give me pleasure'", தி கார்டியன், 12 March 2014. Retrieved 22 August 2014.