நான் மாடக்கூடலான படலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நான் மாடக்கூடலான படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 19 ஆவது படலமாகும்.(செய்யுள் பத்திகள்: 1307- 1332)[1] இப்படலம் வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

சுருக்கம்

கடல் வற்றிப் போனது கண்டு கலங்கிய வருண தேவன், அடுத்தாக ஒன்பது மேகங்களை அனுப்பி மதுரை நகருள் மழையை பெய்யச் செய்தார். கடுமையான மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை காக்க இறைவனிடம் வேண்டினர். சொக்கநாத பெருமான் தன்னுடைய சடாமுடியிலிருந்த நான்கு மேகங்களை அனுப்பி, மதுரை காக்க கட்டளையிட்டார். அந்த நான்கு மேகங்கள் மதுரைக்கு வந்து நான்கு மாடங்களிலும் நின்று வருணன் அனுப்பிய மேகங்களிலிருந்து மழை நீரை உறிஞ்சி மதுரையை சுற்றி பெய்யுமாறு செய்தன.

வருணன் தன்னுடைய தவறை உணர்ந்து இந்திரனின் கட்டளையால் இவ்வாறு செய்தமையாக இறைவனிடம் வருந்தி வணங்கினான். இறைவன் வருணனின் வயிற்று வலியை தீர்த்து அனுப்பினார். [2]

காண்க

ஆதாரங்கள்

  1. "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 28. நாகமெய்த படலம் (1603 - 1625)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998–2014. பார்க்கப்பட்ட நாள் 11 செப்டம்பர் 2016.{{cite web}}: CS1 maint: date format (link)
  2. http://temple.dinamalar.com/news_detail.php?id=2260

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நான்_மாடக்கூடலான_படலம்&oldid=18419" இருந்து மீள்விக்கப்பட்டது