விருத்த குமார பாலரான படலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

விருத்த குமார பாலரான படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 23வது படலமாகும். (செய்யுள் பத்திகள்: 1428 - 1460)[1] இது யானை எய்த படலம் என்பதற்கு அடுத்து வருவதாகும்.

சுருக்கம்

விக்கரம பாண்டியர் ஆட்சியில் விருபாசர் சுபவிரதை தம்பதியினர் மதுரையில் வாழ்ந்தார்கள். அவர்கள் அந்தணர் குலத்தவர். இத்தம்பதிகளுக்கு இறைவன் அருளால் கவுரி என்ற பெண் குழந்தை பிறந்தது. சைவ சமயத்தில் பற்றுடன் இருந்த குழந்தை திருமண வயதிற்கு வந்தாள்.

அடியார்களுக்கு அன்னமிடுவதை வழக்கமாக கொண்டிருந்த குடும்பத்தினர் என்பதால், ஒரு நாள் வைணவ இளைஞன் ஒருவன் விருபாசர் இல்லத்திற்கு வந்து உணவு அருந்தினான். அவன் வைணவன் என்றாலும் விருபாசர் அவனிடம் அன்பு கொண்டு மகளை திருமணம் செய்து கொடுத்தார்.வைணவ இளைஞனின் குடும்பத்தினர் சைவ பெண்ணான கவுரியை ஏற்க வில்லை. கவுரி இள வயதிலேயே முக்தியை வேண்டி சிவபெருமானை வணங்கினார்.

கவுரியின் புகுந்த வீட்டினர், அவளை தனியறையில் அடைத்து வெளியே சென்ற நேரத்தில் அப்பூட்டுகளை உடைத்து அடியாராக வந்தார் சிவபெருமான். அவருக்கு மனதார உணவுகளைப் படைத்து அளித்தாள் கவுரி. அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தானே குழந்தையாக மாறினார். கவுரியின் புகுந்த வீட்டினர் அடைக்கப்பட்டிருந்த கதவுகள் திறந்து கிடைப்பதையும், கவுரி குழந்தையோடு இருப்பதையும் கண்டு கோபம் கொண்டனர்.

குழந்தை சிவபெருமானாக காட்சியளித்து கவுரிக்கு முக்தி அளித்தார். [2]

காண்க

ஆதாரங்கள்