தடாதகையாரின் திருமணப் படலம்
தடாதகையாரின் திருமணப் படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற ஐந்தாவது படலமாகும்.
படலச் சுருக்கம்
காஞ்சனமாலையின் கணவர் இறந்தப்பிறகு மகளான தடாதகைப்பிராட்டியாருக்கு மணம் செய்விக்க எண்ணினார். ஆனால் தடாதகைப்பிராட்டியார் தனது தந்தையாருக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அனைத்து தேசங்களையும் கைப்பற்ற எண்ணினார். அதன்படி பெரும்படையுடன் நகரங்களை வென்று கொண்டே சென்றார். அவருடைய வீரத்தினால் அகந்தையும் கொண்டிருந்தார். அத்துடன் கையிலை மலையை அடைந்த தடாதகைப்பிராட்டியார் சிவபெருமானையும் எதிர்க்க துணிந்தார். பூத கணங்களின் படைகள் தடாகைப்பிராட்டியாரின் வீரத்தினை கண்டு பயந்து ஓடின. இறுதியாக சிவபெருமான் தடாகைப்பிராட்டியாருடன் சண்டையிட வந்தார். சிவபெருமானைக் கண்டவுடனேயே தடாதகைப்பிராட்டியாரின் மூன்று தனங்களில் ஒன்று மறைந்தது. இதனால் பிராட்டியார் வெட்கம் கொண்டார், தன்னை சக்தியின் உருவமாக உணர்ந்தார்.
மதுரை சென்ற தடாகைப்பிராட்டியார் இமயமலையில் நிகழ்ந்ததை எடுத்துரைத்து காஞ்சமாலையின் சம்மதம் பெற்றார். தடாகைப்பிராட்டியாருக்கும் இறைவன் சிவபெருமானுக்கும் இடையே திருமணம் நிகழ்ந்தது.