பரி நரியாக்கிய படலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பரி நரியாக்கிய படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் அறுபதாவது படலமாகும். இது நரி பரியாக்கிய படலம் என்பதற்கு அடுத்து வருவதாகும்.

சுருக்கம்

மாணிக்கவாசரை அரசன் குதிரைகள் வாங்குவதற்கு பொருள் தந்து அனுப்பினார். ஆனால் மாணிக்கவாசகர் அப்பொருளை இறைவனுக்காக செலவிட்டார். இறைவன் குதிரைகள் வருமென கூறிமையால், அரசரிடமும் அவ்வாறே கூறிவிட்டார். ஆனால் நாட்கள் ஆனாலும், குதிரைகள் வரவில்லை. எனவே அரசன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்தார்.

இறைவன் நரிகளை குதிரைகளாக்கி மன்னடம் தந்தான். மன்னன் அக்குதிரைகளை தன்னுடைய குதிரைகள் இருக்கும் இடத்தில் கட்டி வைக்க ஏற்பாடு செய்து, மாணிக்கவாசகரை விடுவித்தார். ஆனால் இரவில் குதிரைகளெல்லாம் நரிகளாக மாறி, மன்னனிடமிருந்த அனைத்து குதிரைகளையும் கொன்று தப்பி ஓடின.

இதனால் மன்னன் கோபம் கொண்டு மாணிக்கவாசருக்கு தண்டனை அளித்தார். மாணிக்கவாசகரை வைகையின் கரையில் பாறையில் கட்டினர், காவலர்கள், இறைவன் அருளால் வைகை பெருக்கெடுத்து காவலர்களை ஓடும் படி செய்து, மாணிக்கவாசகரை காத்தது. [1]

காண்க

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/index.php?title=பரி_நரியாக்கிய_படலம்&oldid=18420" இருந்து மீள்விக்கப்பட்டது