தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற நான்காவது படலமாகும்.

படலச் சுருக்கம்

இதில் குலசேகர பாண்டியனின் மகன் மலயத்துவசன் நெடுநாட்களாகத் தமக்கு புத்திரப்பெறு கிடைக்காமையால் சிவபெருமானை நோக்கிப் புத்திர காமேட்டி யாகம் புரிந்தான். இதன் பயனாக யாகக் குண்டத்திலிருந்து 32 லட்சணங்களும் பொருந்திய மூன்று கொங்கைகளுடன் சிறு குழந்தை தோன்றி மலையத்துவசனின் மனைவியின் மடியில் சென்று அமர்ந்தது [1] . அக்குழந்தைக்கு தடாதகைப் பிராட்டி என பெயரிட்டனர்.பார்வதி தேவியே இவர்களுக்குக் குழந்தையாக அவதாரம் செய்ததை கூறும் வரலாறு தடாதகைப் பிராட்டியார் திருவவதாரப் படலம் ஆகும்.

சான்றாவணம்

  1. திருவிளையாடல் புராணம்-கங்கா பதிப்பகம்-சென்னை.