வேதத்துக்குப் பொருள் அருளிச்செய்த படலம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வேதத்துக்குப் பொருள் அருளிச் செய்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினாறாவது படலமாகும்.[1]

படலச் சுருக்கம்

சிவபெருமானிலிருந்து தோன்றிய வேதங்களை கற்று அதன் பொருளை உணர முடியாமல் கண்ணுவர், கருக்கர் முதலிய முனிவர்கள் வருந்தினர். அவர்களின் வருத்தினை அகற்ற அரபத்தர் எனும் முனிவர் மதுரை சோமசுந்தரப் பெருமானை வணங்கும்படி கூறினார். அதன் படி முனிவர்கள் மதுரையை அடைந்து சோமசுந்தரப் பெருமானை வழிபட்டார்கள். சிவபெருமான் குருவாக அவர்களுக்கு காட்சி தந்து வேதத்தின் பொருளை விளக்கினார்.

காண்க

ஆதாரங்கள்

  1. http://www.tamilvu.org/slet/l41d0/l41d0lft.jsp திருவிளையாடற் புராணம் - தமிழாய்வு தளம் பார்த்த நாள் செப்டம்பர் 16 2013