கடல் சுவற வேல்விட்ட படலம்
Jump to navigation
Jump to search
கடல் சுவற வேல்விட்ட படலம் திருவிளையாடற் புராணத்தில் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதிமூன்றாவது படலமாகும்.
படலச் சுருக்கம்
இதில் மதுரைப்பதியின் மன்னனான உக்கிர பாண்டியனின் தொண்ணூற்றாறு அசுவமேதயாகம் முடியவே பொறாமையும்,கோபமும் கொண்ட இந்திரன், கடலரசனை ஏவி மதுரைப்பதியை அழிக்க கூறியதும்,கடலரசனை வெற்றி கொள்ள சிவபெருமான் உக்கிரபாண்டியனின் கனவில் தோன்றி தான் கொடுத்த மூன்று படைக்கலங்களில் ஒன்றாகிய வேலை எறிந்து வெற்றி கொள்ள சிவபெருமானாகிய சுந்தரபாண்டியர் கூறியதையும், கடலரசனை வெற்றி கொண்டதையும் [1] கூறும் படலமாகும்.
சான்றாவணம்
- ↑ திருவிளையாடல்-கங்கை புத்தக நிலையம் சென்னை.5வது பதிப்பு-ஆகத்து-2010