தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்
தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் என்பன தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்பினால் 2001 ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் வழங்கப்படும் விருதுகள் ஆகும்.
இயல் விருது
ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சிறந்தவர்களாக அவர்கள் கருதும் தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு, 'இயல் விருது' எனும் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி சிறப்பிக்கிறது.
இந்தச் சாதனை விருது பாராட்டுக் கேடயமும், 2500 டாலர்கள் பணப்பரிசும் கொண்டது. உலகளாவிய ஆலோசனைக் குழு ஒன்றின் பரிந்துரையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது வழங்கப்படும். இந்த வாழ்நாள் விருது ஒரு படைப்பாளிக்கோ, கல்வியாளருக்கோ, நூல்வெளியீட்டாளருக்கோ, விமர்சகருக்கோ, வேறு ஏதேனும் ஒரு வகையில் சிறந்த தமிழ் தொண்டாற்றியதாக அவர்கள் கருதுபவர்களுக்கோ அளிக்கப்படும்.
இதுவரை வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்காக இயல் விருது பெற்றவர்கள்:
ஆண்டு | விருது பெற்றவர் | தொழில் | நாடு |
---|---|---|---|
2001 | சுந்தர ராமசாமி | எழுத்தாளர் | இந்தியா |
2002 | கே. கணேஷ் | எழுத்தாளர் | இலங்கை |
2003 | வெங்கட் சாமிநாதன் | எழுத்தாளர்/விமர்சகர் | இந்தியா |
2004 | பத்மநாப ஐயர் | எழுத்தாளர்/நூல் பதிப்பாளர் | இங்கிலாந்து |
2005 | ஜோர்ஜ் எல். ஹார்ட் | தமிழ் பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம் | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
2006 | ஏ. சி. தாசீசியஸ் | நாடகக் கலைஞர் | இங்கிலாந்து |
2007 | லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் | எழுத்தாளர்/மொழிபெயர்ப்பாளர் | இங்கிலாந்து |
2008 | அம்பை (சி.எஸ்.லட்சுமி) | எழுத்தாளர் | இந்தியா |
2009 | கோவை ஞானி | எழுத்தாளர் | இந்தியா |
2009 | ஐராவதம் மகாதேவன் | ஆராய்ச்சியாளர் | இந்தியா |
2010 | ச. பொன்னுத்துரை | எழுத்தாளர் | ஆஸ்திரேலியா |
2011 | ச.ராமகிருஷ்ணன் | எழுத்தாளர் | இந்தியா |
2012 | நாஞ்சில் நாடன்[1] | எழுத்தாளர் | இந்தியா |
2013 | டொமினிக் ஜீவா | எழுத்தாளர் | இலங்கை |
2013 | தியோடர் பாஸ்கரன் | எழுத்தாளர் | இலங்கை |
2014 | ஜெயமோகன்[2] | எழுத்தாளர் | இந்தியா |
2015 | இ. மயூரநாதன்[3] | கட்டிடக் கலைஞர் | இலங்கை |
2016 | நா. சுகுமாரன்[4] | எழுத்தாளர் | இந்தியா |
2017 | வண்ணதாசன்[5] | எழுத்தாளர் | இந்தியா |
2018 | இமையம்[6] | எழுத்தாளர் | இந்தியா |
2019 | சு. வெங்கடேசன் | எழுத்தாளர் | இந்தியா |
2021 | ஆ. இரா. வேங்கடாசலபதி[7] | வரலாற்றாளர் | இந்தியா |
2022 | பாவண்ணன்[8] | எழுத்தாளர் | இந்தியா |
லெ. முருகபூபதி | எழுத்தாளர் | ஆத்திரேலியா |
புனைவுக்கான விருது
ஆண்டு | விருது பெற்றவர் | நூல் |
---|---|---|
2005 | சோ. தர்மன் | கூகை |
2006 | ஜோ டி குரூஸ் | ஆழி சூழ் உலகு |
2007 | எஸ். ராமகிருஷ்ணன் | யாமம் |
2008 | தமிழவன் | வார்சாவில் ஒரு கடவுள் |
2009 | ஜெயமோகன் | கொற்றவை |
2010 | பொ. கருணாகரமூர்த்தி | பதுங்கு குழி |
2010 | சு. வெங்கடேசன் | காவல் கோட்டம் |
2011 | யுவன் சந்திரசேகர் | பயணக் கதை |
2012 | கண்மணி குணசேகரன் | அஞ்சலை |
2013 | கீரனூர் ஜாகீர் ராஜா | ஜின்னாவின் டைரி |
2014 | தேவகாந்தன் | கனவுச்சிறை |
2015 | ஷோபாசக்தி | கண்டி வீரன் |
2016 | சயந்தன் | ஆதிரை |
2017 | தமிழ்மகன் | வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் |
2018 | தீபச்செல்வன் | நடுகல் |
2020 | பா. கண்மணி | இடபம் |
2021 | பா. அ. ஐயகரன்[7] | பா.அ. ஜயகரன் கதைகள் |
2022 | வேல்முருகன் இளங்கோ | மன்னார் பொழுதுகள் |
அபுனைவுக்கான விருது
ஆண்டு | விருது பெற்றவர் | நூல் |
---|---|---|
2005 | கிரியா ராமகிருஷ்ணன் | தற்காலத் தமிழகராதி |
2006 | அ.ரேவதி | உணர்வும் உருவமும் |
2007 | நாஞ்சில் நாடன் | நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை |
2008 | மருத்துவர் முருகர் குணசிங்கம் | இலங்கையில் தமிழர் |
2009 | மருத்துவர் ந. சுப்பிரமணியன் | ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் |
2009 | ஆ. சிவசுப்பிரமணியன் | ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும் |
2010 | ச. சுகிர்தராஜா | பண்பாட்டு பொற்கனிகள் |
2010 | தியோடர் பாஸ்கரன் | இன்னும் பிறக்காத தலைமுறைக்காக |
2011 | பெருமாள் முருகன் | கெட்ட வார்த்தை பேசுவோம் |
2012 | பிரபஞ்சன் | தாழப் பறக்காத பரத்தையர் கொடி |
2012 | அப்பு | வன்னி யுத்தம் |
2013 | மு. புஷ்பராஜன் | நம்பிக்கைகளுக்கு அப்பால் |
2014 | மு. நித்தியானந்தன் | கூலித்தமிழ் |
2015 | அசோகமித்திரன் | குறுக்கு வெட்டுகள் |
2016 | மிஷ்கின் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் |
2017 | இ. பாலசுந்தரம் | கனடாவில் இலங்கைத் தமிழர் வாழ்வும் வரலாறும் |
2018 | உமாஜி | காக்கா கொத்திய காயம் |
2021 | கே. சந்துரு[7] | நானும் நீதிபதி ஆனேன் |
2022 | சாம்ராஜ் | மூவந்தியில் சூழலுறும் மர்மம் |
கவிதைக்கான விருது
ஆண்டு | விருது பெற்றவர் | நூல் |
---|---|---|
2006 | சேரன் | மீண்டும் கடலுக்கு |
2007 | கே. வாசுதேவன் | தொலைவில் |
2008 | லீனா மணிமேகலை | உலகின் அழகிய முதல் பெண் |
2009 | சுகுமாரன் | பூமியை வாசிக்கும் சிறுமி |
2010 | திருமாவளவன் | இருள் யாழி |
2010 | மனுஷ்ய புத்திரன் | அதீதத்தின் ருசி |
2011 | தேவதச்சன் | இரண்டு சூரியன் |
2011 | அனார் | எனக்குக் கவிதை முகம் |
2012 | தேவ அபிரா | இருள் தின்ற ஈழம் |
2012 | நிலாந்தன் | யுகபுராணம் |
2013 | இசை | சிவாஜி கணேசனின் முத்தங்கள் |
2014 | கதிர்பாரதி | மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் |
2015 | குமரகுருபரன் | மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது |
2016 | ஷங்கர் ராமசுப்பிரமணியன் | ஆயிரம் சந்தோஷ இலைகள் |
2017 | பா . அகிலன் | அம்மை |
2018 | போகன் சங்கர் | சிறிய எண்கள் தூங்கும் அறை |
2020 | கவிஞர் பெருந்தேவி | |
2021 | ஆழியாள்[7] | நெடுமரங்களாய் வாழ்தல் |
2022 | சுகிர்தராணி | சுகிர்தராணி கவிதைகள் |
மொழிபெயர்ப்பு விருது
ஆண்டு | மொழிபெயர்ப்பாளர் | நூல் | மூல நூல் | மொழிமாற்ற விவரம் | ஆசிரியர் |
---|---|---|---|---|---|
2011 | ஜி.குப்புசாமி | என் பெயர் சிவப்பு | My Name is Red | ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு | ஓரான் பாமுக் |
2012 | எம். ஏ. சுசீலா | அசடன் | The Idiot | ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு | பியோதர் தஸ்தயெவ்ஸ்கி |
2012 | வைதேகி ஹெர்பர்ட் [9] | முல்லைப்பாட்டு & நெடுநல்வாடை | முல்லைப்பாட்டு & நெடுநல்வாடை | தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு | |
2013 | சி. மோகன் | ஓநாய் குலச்சின்னம் | ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு | ஜியாங் ரோங் | |
2013 | அனிருத்தன் வாசுதேவன் | மாதொருபாகன் | One Part Woman | தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு | |
2014 | கே. வி. சைலஜா | யாருக்கும் வேண்டாத கண் | மலாயாளத்திலிருந்து தமிழுக்கு | ||
2014 | சொர்ணவேல் ஈஸ்வரன் பிள்ளை | Madras Studios – Narrative Genre and Ideology in Tamil Cinema.’ | ஆங்கிலம் | ||
2015 | புவியரசு | மிர்தாதின் புத்தகம் | ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு | ||
2015 | ந. கல்யாணராமன் | Farewell, Mahatma | தேவிபாரதியின் சிறுகதைகள் | தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு | |
2016 | எம். ரிஷன் ஷெரீப் | இறுதி மணித்தியாலம் | சிங்களத்திலிருந்து தமிழுக்கு | மஹேஷ் முணசிங்க | |
2016 | ஈவ்லின் மாசிலாமணி மேயர் | Bananenblatter und StraBenstaub | வாழை இலையும் வீதிப்புழுதியும் | தமிழிலிருந்து செருமனுக்கு | |
2017 | டி. ஐ. அரவிந்தன் | பாலசரஸ்வதி - அவர் கலையும் வாழ்வும் | Balasaraswathi - Her Life and Art | ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு | டக்லஸ் எம்.நைட் |
2018 | இரா முருகன் | பீரங்கிப் பாடல்கள் | லந்தன் பத்தேரியிலெ லுத்தினியகள் | மலையாளத்தில் இருந்து தமிழுக்கு | என். எஸ். மாதவன் |
2018 | பேராசிரியர் ரங்கசாமி கார்த்திகேசு | Beyond the Sea | கடலுக்கு அப்பால் | தமிழ் இருந்து ஆங்கிலத்திற்கு | பி. சிங்காரம். |
2021 | முனைவர் மார்த்தா ஆன் செல்பி[7] | Cat in the Agraharam and other stories | கடவு | தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு | திலீப் குமார் |
தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது
தமிழ் இலக்கியத் தோட்டம், தமிழ்க் கணிமைக்கான வாழ் நாள் பங்களிப்பு ஆற்றியோராக தாங்கள் கருதுவோருக்கு தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருதும் வழங்குகிறது.
தமிழ் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது பெற்றோர்:
ஆண்டு | விருது பெற்றவர் |
---|---|
2006 | கே. ஸ்ரீநிவாசன் |
2007 | கு. கல்யாணசுந்தரம் |
2008 | சுரதா யாழ்வாணன் |
2009 | தமிழ் லினக்ஸ் கே.டி.இ குழு |
2010 | முத்து நெடுமாறன் |
2011 | வாசு அரங்கநாதன் |
2012 | முகுந்தராஜ் சுப்பிரமணியன் |
2013 | மணி மணிவண்ணன் |
2014 | முத்தையா அண்ணாமலை |
2015 | சே. இராஜாராமன் (எ) நீச்சல்காரன் |
2016 | த. சீனிவாசன் |
2017 | சசிகரன் பத்மநாதன் |
2018 | ராமசாமி துரைபாண்டி |
ஆண்டு | விருது பெற்றவர் | |
---|---|---|
2017 | அனுக் அருட்பிரகாசம் | |
2020 | லோகதாசன் தர்மதுரை | The Sadness of Geography |
ஆண்டு | விருது பெற்றவர் | பங்களிப்பு | |
---|---|---|---|
2022 | சிவசங்கரி | இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு |
சிறப்பு விருதுகள்
ஆண்டு தோறும் வழங்கும் விருதுகளைத் தவிர, முக்கியமான இலக்கியப் பங்களிப்புகளுக்குத் தனியாக அவ்வப்போது சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. .
திசம்பர் 2006: சி.ஜே.கனகரத்னத்திற்கு அவரது இலக்கிய விமர்சனங்களுக்காக முதல் விருது வழங்கப்பட்டது.
யூலை 2010: சிகாகோ பல்கலைக்கழகத்தில், துணைப் பேராசிரியராகவுள்ள சஸ்ச்சா எபெலிங்-குக்கு (Sascha Ebeling), அவரது தமிழ் மொழி ஆராய்ச்சிக்காக, குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டு தமிழ் கலாச்சாரம், கல்வெட்டுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக ஜூலை 2010-ல் இவ்விருது வழங்கப்பட்டது.
யூலை 2013: இலங்கையிலிருக்கும் நாவந்துறையைச் சேர்ந்த ஆசீர்வாதம் தம்பதியினருக்கு, தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியத் தோட்ட அமைப்புக்கும் அவர்கள் ஆற்றிய பங்களிப்புக்காக டொராண்டோவில் வழங்கப்பட்டது.
யூலை 2015: சோமசுந்தரம்பிள்ளை. பத்மநாதன் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்திலும், மொழிபெயர்ப்பிலும் அயராது உழைத்து தமிழ் மேம்பாட்டிற்காக சேவை ஆற்றியதற்காகவும், முனைவர் ப்ரெண்டா பெக் அவர்களுக்கு மற்றவர்களுக்கு முன்மாதிரியான தமிழுக்கான அவரின் உயரிய சேவைக்காகவும் டொறொன்ரோவில் வழங்கப்பட்டது
யூலை 2016: தமிழிற்கு அளித்த முன்மாதிரியான சேவைகளுக்காக டேவிட் ஷூல்மன் அவர்களுக்கும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காக அயராது சேவையாற்றியதற்காக இரா. இளங்குமரன் அவர்களுக்கும் சிறப்பு இலக்கியச் சாதனை விருது தொரொன்டோவில் வழங்கப்பட்ட்டது
யூன் 2017: மறைந்த கவிஞர் செழியனுக்கும் தி. ஞானசேகரன் அவர்களுக்கும் முனைவர் நிக்கோலப்பிள்ளை சவேரி அவர்களுக்கும் இலக்கியச் சாதனைக்கான் சிறப்பு விருது தொரொன்டோவில் வழங்கப்பட்ட்டது.
யூன் 2018: ம. நவீன் அவர்களுக்கும் திரு எஸ். திருச்செல்வம் அவர்களுக்கும் இலக்கியச் சாதனைக்கான் சிறப்பு விருது தொரொன்டோவில் வழங்கப்பட்ட்டது
2020: திரு பி. ஜே திலீப்குமார் மர்றும் திரு வீரகத்தி சுதர்சன்
2022: வ. ந. கிரிதரன் அவர்களுக்கு இலக்கிய சாதனை விருது
கல்வி உதவித் தொகை
விருதுகளைத் தவிர, கனடாவின் ஓண்டாரியோ மாகாணத்தில் படிப்பவர்களுக்கு கட்டுரைப் போட்டி வைத்து, அதில் தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையை எழுதியவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதுவரை இந்த உதவித்தொகை பெற்றவர்கள்:
ஆண்டு | வெற்றி பெற்றவர் | தலைப்பு |
---|---|---|
2008 | ஆஞ்சலோ பிரிட்டோ | நான் போய் வருகிறேன்: புலம்பெயர் சூழலில் தமிழ் மொழி அறிதலின் முக்கியத்துவம் |
2009 | கிருபளானி கிருபராஜா | கனடாவின் பன்முகக் கலாச்சாரத்தன்மை - ஒரு தமிழனின் பார்வையில் |
2010 | செரோதி ராமச்சந்திரன் | தமிழ் கல்வியில் ஊடகமும், அரசியலும் |
2011 | ராம் ஆட்ரியன் | தனியுடைமையும் பொதுவுடைமையும்: ஒரு தமிழனின் பார்வையில் |
2012 | மீரா ரகுநாதன் | கனடாவில் தமிழ் சமூகத்தை உருவாக்குதல் |
2013 | எலினா டோபோறொஸ், அருந்ததி (நீட்ரா) ரொட்டிகோ | New Technologies: Refashioning a Tamil Identity |
2014 | வாசுகி கைலாசம், யுகேந்திரா ரகுநாதன் | Renegotiating New Meanings of Self in Tamil Canadian Diaspora |
2015 | ரேணுகா மூர்த்தி | Innovative Forms of Tamil Expression Today |
2016 | சோபிகா சத்தியசீலன் | For the short story based in Tamil diaspora, 'You Have Already Set Yourself on Fire' |
2017 | சங்கரி விஜேந்திரா | For the Essay on Social Media and the Making of Tamil Identities |
2018 | கல்யாணி இராதாக்கிருஷ்ணன் | For the Essay What Symbolizes Tamilness for me? |
2019 | சுருதி சிறீகரன் | For the Essay 'Traditions that bring my family closer together.’ |
மேற்கோள்கள்
- ↑ "நாஞ்சில் நாடனுக்கு இயல் விருது". The Tamil Literary Garden. http://tamilliterarygarden.com/announcements. பார்த்த நாள்: 19-12-2012.
- ↑ "ஜெயமோகனுக்கு இயல் விருது". Archived from the original on 2016-01-12. பார்க்கப்பட்ட நாள் 2016-01-06.
- ↑ "இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015". Archived from the original on 2016-05-18. பார்க்கப்பட்ட நாள் 2016-01-06.
- ↑ "brochure BookLG 16_2017.pdf". பார்க்கப்பட்ட நாள் 31 மே 2017.
- ↑ "வண்ணதாசனுக்கு இயல் விருது... கனடா தமிழ் இலக்கிய தோட்டத்தின் விருதுகள் அறிவிப்பு!". The Tamil Literary Garden. 10 சூன் 2018. https://www.vikatan.com/news/miscellaneous/127288-canada-literary-garden-awards-2017-announced.html. பார்த்த நாள்: 11 சூன் 2018.
- ↑ "2018-ம் ஆண்டுக்கான `இயல்’ விருதைப் பெறுகிறார் எழுத்தாளர் இமையம்!". விகடன். 25 திசம்பர் 2018. https://www.vikatan.com/news/miscellaneous/145514-writer-imayam-selected-for-iyal-award-2018.html. பார்த்த நாள்: 28 திசம்பர் 2018.
- ↑ 7.0 7.1 7.2 7.3 7.4 "பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு!". இந்து தமிழ் (நாளிதழ்). 19 மே 2022. https://www.hindutamil.in/news/world/801861-professor-a-r-venkatachalapathi-and-judge-k-chandru-got-iyal-awards-4.html. பார்த்த நாள்: 20-05-2022.
- ↑ "கனடா தமிழ் இலக்கியத் தோட்டம்: `இயல் விருது' எழுத்தாளர் பாவண்ணனுக்கு அறிவிப்பு!". விகடன். 26 திசம்பர் 2022. https://www.vikatan.com/news/literature/writer-bhavannan-receives-lifetime-literary-achievement-award. பார்த்த நாள்: 27-12-2022.
- ↑ "சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு". பார்க்கப்பட்ட நாள் 16 June 2013.