தமிழ்மகன் (எழுத்தாளர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தமிழ்மகன் (எழுத்தாளர்)
தமிழ்மகன் (எழுத்தாளர்)
இயற்பெயர்/
அறியும் பெயர்
தமிழ்மகன்
பிறப்புபெயர் வெங்கடேசன்
பிறந்ததிகதி (1964-12-24)திசம்பர் 24, 1964
பிறந்தஇடம் செங்கல்பட்டு, தமிழ்நாடு, இந்தியா
புனைபெயர் வளவன், தேனீ
பணி பத்திரிகையாளர், எழுத்தாளர்
தேசியம் இந்தியர்
துணைவர் திலகவதி
பிள்ளைகள் மகன் மாக்சிம், மகள் அஞ்சலி

தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன் மற்றும் வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்மகன் அன்றைய செங்கல்பட்டு மாவட்டம், இன்றைய திருவள்ளூர் மாவட்டம் காரணை கிராமத்தைச் சேர்ந்தவர். இயற்பியல் துறையில் இளம் அறிவியல் பட்டமும், அரசறிவியல் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். பணி ஓய்வு பெற்ற பின் சென்னை பல்கலைக்கழகத்தில் சைவ சித்தாந்தம் முதுகலை பட்டம் படித்தார். இவருக்கு மனைவி திலகவதி, மகன் மாக்சிம், மகள் அஞ்சலி ஆகியோர் உள்ளனர்.

எழுத்துலக அறிமுகம்

1984-ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் பட்டப் படிப்பில் இறுதி ஆண்டு படித்த போது, டி. வி. எஸ். நிறுவனமும் இதயம் பேசுகிறது வார இதழும் இணைந்து புதின போட்டி நடத்துவதாக அறிவித்தன. இறுதி ஆண்டு தேர்வை ஓரம் கட்டிவிட்டு வெள்ளை நிறத்தில் ஒரு காதல் என்ற புதினம் எழுதினார். அதில் தேர்வு பெற்று முதல் பரிசாக டி.வி.எஸ். 50. வாகனத்தைப் பெற்றார். அக்கதையை முதற் பரிசுக்குத் தேர்வு செய்தவர் சின்னக்குத்தூசி ஆவார். புதினம் அந்த இதழில் ஓவியர் ஜெயராஜ் வரைந்த ஓவியங்களோடு தொடர்கதையாக வெளியானது.

எழுதிய நூல்கள்

  • கவிதை நூல்கள்
  • பூமிக்குப் புரிய வைப்போம்
  • ஆறறிவு மரங்கள்

இந்த இரண்டு நூல்களும் அவர் கல்லூரியில் படித்தபோது வெளியானவை.

சிறுகதை நூல்கள்

  • எட்டாயிரம் தலைமுறை
  • மீன்மலர்
  • சாலை ஓரத்திலே வேலையற்றதுகள்
  • அமரர் சுஜாதா
  • மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்

புதினங்கள்

  • வெள்ளை நிறத்தில் ஒரு காதல்
  • சொல்லித் தந்த பூமி
  • மானுடப் பண்ணை
  • வெட்டுப் புலி (இருபதாம் நூற்றாண்டு தமிழகத்தின் திராவிட மனச் சூழலை விவரிக்கும் நாவல்) (2009)
  • ஆண்பால் பெண்பால் (2011)
  • வனசாட்சி (2012)
  • ஆபரேஷன் நோவா (2014) அறிவியல் புனைகதை புதினம்
  • தாரகை (2016)
  • வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் (அறிவியல் வரலாற்று நாவல் - 2017)
  • படைவீடு (2020) சரித்திர புதினம்
  • பிரம்ம ராட்சஸ் (2021)
  • ஒரு ஊர்ல ஒரு ராணி (2022 )
  • ஞாலம் (2023)

சிறுவர் நூல்கள்

அஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள் (2018)


கட்டுரை நூல்கள்

  • விமானங்களை விழுங்கும் மர்மக்கடல்
  • தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் ( நூறாண்டு கண்ட தமிழ் சிறுகதைகளின் வரலாறு )

வாழ்க்கைத் தொடர் கட்டுரைகள்

  • வாக்குமூலம் (தமிழ் திரைப்பட நடிகர் சத்யராஜ் பற்றியது)
  • சங்கர் முதல் ஷங்கர் வரை (தமிழ் திரைப்பட இயக்குநர் ஷங்கர் பற்றியது)

திரையுலகத் தொடர் கட்டுரைகள்

  • தில்லானா தில்லானா (நடிகை மீனா கட்டுரைத் தொடர்)
  • செல்லுலாய்ட் சித்திரங்கள் (நேரில் சந்தித்த திரைப்படக் கலைஞர்கள் பற்றிய நினைவுக் குறிப்புகள்)

மொழி பெயர்க்கப்பட்டவை இவரது சிறுகதைகள் ஆங்கிலம், மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, இந்தி மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

எழுதிய இதழ்கள்

அச்சு இதழ்கள்

இணைய இதழ்கள்

  • ஆறாம் திணை, சென்னை ஆன்லைன், திண்ணை.காம்[2], கீற்று.காம்[3], உயிரோசை[4][5], தமிழ் ஸ்டூடியோ.காம்[6], தமிழ் சினிமா.காம்

பணியாற்றிய பத்திரிகைகள்

  • போலீஸ் செய்தி புலனாய்வு இதழில் பொறுப்பாசிரியர் பணி
  • தமிழன் நாளிதழில் இலவச இணைப்பு இதழ் பொறுப்பு
  • வண்ணத்திரை செய்தியாளர்
  • தினமணி நாளிதழ் சினிமா செய்தியாளர்
  • குமுதம் வார இதழ் சினிமா செய்தியாளர்
  • குங்குமம் வண்ணத்திரை பொறுப்பாசிரியர்
  • தினமணியில் முதன்மை உதவி ஆசிரியர்
  • ஆனந்தவிகடன் குழும‌ இதழில் உதவி பொறுப்பாசிரியர்

விருதுகள்

  • வெள்ளை நிறத்தில் ஒரு காதல் (இளைஞர் ஆண்டு நாவல் போட்டியில் முதல் பரிசு)
  • மானுடப் பண்ணை (தமிழக அரசின் சிறந்த நாவல் விருது)
  • மொத்தத்தில் சுமாரான வாரம் (தி. ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டியில் தேர்வு),
  • கிளாமிடான்[7] (சிறுகதை) (அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை விருது, இருபதாயிரம் ரூபாய் பரிசு)
  • எட்டாயிரம் தலைமுறை (2008-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதை நூல் விருது)
  • 2010‍ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் அறக்கட்டளை விருது (வெட்டுப்புலி நாவலுக்காக‌)
  • 2010ஆம் ஆண்டுக்கான கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை விருது (வெட்டுப்புலி நாவலுக்காக‌)
  • வனசாட்சி நாவலுக்கான மலைச் சொல் விருது 2013
  • வனசாட்சி நாவலுக்கான அமுதன் அடிகள் விருது 2013
  • பெரியார் விருது 2014
  • வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவலுக்கான கனடா இலக்கியத் தோட்ட புனைவு விருது 2017
  • சென்னை ரோட்டரி சங்க விருது 2018
  • தஞ்சாவூர் நெருஞ்சி இலக்கிய வட்டத்தின் க நா சு விருது 2018
  • படைவீடு நாவலுக்கான சௌமா விருது 2021
  • படைவீடு நாவலுக்கான வள்ளுவ பண்பாட்டு மைய விருது 2021
  • படைவீடு நாவலுக்கான உலகத் தமிழ் பண்பாட்டு மைய விருது 2021

திரைப்படப் பணி

  • உள்ளக் கடத்தல்
  • ரசிகர் மன்றம்

ஆகிய திரைப்படங்களுக்கு உரையாடல் எழுதி உள்ளார்.

தயாரிப்பாளர் சிவி குமார் நிறுவனத்தில் கொற்றவை, பீட்சா 3 ஆகிய படங்களுக்கு வசனம் எழுதினார்.

இவருடைய ஆபரேஷன் நோவா, நான் ரம்யாவாக இருக்கிறேன்... ஆகிய அறிவியல் புதினங்கள் திரைப்படங்களுக்காக ஒப்பந்தம் ஆகியுள்ளன.

மேற்கோள்கள்

சென்னை அண்ணா நூலகத்தில் தமிழ் என்ற தலைப்பில் ஆற்றிய உரை.:

வெளி இணைப்புகள்

www.vettupuli.in


"https://tamilar.wiki/index.php?title=தமிழ்மகன்_(எழுத்தாளர்)&oldid=6908" இருந்து மீள்விக்கப்பட்டது