பொ. கருணாகரமூர்த்தி
Jump to navigation
Jump to search
பொ. கருணாகரமூர்த்தி | |
---|---|
பிறப்பு | 08-05-1954 புத்தூர், யாழ்ப்பாணம் |
மற்ற பெயர்கள் | காருண்யன் , கொன்ஃபூசியஸ், புதுவை நிலவன் , அழகுமுருகேசு |
தேசியம் | செருமனியர், |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
கல்வி | Diploma in Marine Radio-Telecommunications (இலத்திரனியல்) ஸ்ரீசோமாஸ்கந்தா கல்லூரி |
வாழ்க்கைத் | ரஞ்ஜினி, |
துணை |
பொ. கருணாகரமூர்த்தி (பிறப்பு: மே 8, 1954) செருமானிய, ஈழத்து எழுத்தாளர். புகலிடத்தில் எழுத்துப் பயணத்தை ஆரம்பித்தவர்களில் இவர் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
பொ. கருணாகரமூர்த்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் புத்தூரில் 1954 ஆம் ஆண்டில் பிறந்தவர். 1980 இல் இருந்து செருமனியில் வசித்து வருகிறார். செருமனியில் வாடகைக் காரோட்டியாகப் பணிபுரியும் இவர் புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களில் முதன்மையான ஒரு எழுத்தாளராகக் கருதப்படுகிறார்.
எழுத்துலக வாழ்வு
இவர் 1985 இல் கணையாழில் வெளிவந்த ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ எனும் குறுநாவல் மூலம் சிறுபத்திரிகை வாசகர்களுக்கு அறிமுகமானவர். டிசம்பர் 2010 இல் வெளிவந்த இவரது பதுங்குகுழி சிறுகதைத்தொகுப்பு கனடாவின் தமிழ் இலக்கியத்தோட்டம் என்னும் இலக்கிய அமைப்பால் 2010 இன் சிறந்த சிறுகதைத்தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றது.
வெளிவந்த நூல்கள்
- கிழக்கு நோக்கி சில மேகங்கள் (சிறுகதைத் தொகுப்பு) - ஏப்ரல் 1996
- ஒரு அகதி உருவாகும் நேரம் (மூன்று குறுநாவல்கள்) - ஏப்ரல் 1996
- அவர்களுக்கு என்று ஒரு குடில் (சிறுகதைத் தொகுப்பு) - 1999
- கூடு கலைதல் (சிறுகதைத் தொகுப்பு) - டிசம்பர் 2005
- பெர்லின் இரவுகள் - டிசம்பர் 2005
- பதுங்குகுழி - சிறுகதை டிசம்பர் 2010
- வனம் திரும்புதல் சிறுகதைகள் 2014
- வெயில் நீர் சிறுகதைகள் 2021
- ஆனந்தியின் டயறி சிறுகதைகள் குறுநாவல் தொகுப்பு 2019
வெளி இணைப்புகள்
- பெர்லின் இரவுகள் நூலகம் தளத்தில்