இரா. முருகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

இரா. முருகன் (பிறப்பு: 1953) என்பவர் தமிழக எழுத்தாளர் ஒருவர் ஆவார். இவர் கணினித்துறையில் பணி புரிகின்றார்.

குடும்ப பின்னணி

தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்த இரா. முருகனின் தந்தையார் நா.சீ.இராமசாமி, தாயார் மீனாட்சி.

எழுத்துலக வாழ்வு

1977-ல் கணையாழியில் முதல் படைப்பாக ஒரு புதுக் கவிதை பிரசுரமானதோடு இவருடைய எழுத்துலகப் பிரவேசம் தொடங்கியது. கவிஞராக அறியப்பட்டு பின் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக முகிழ்ந்தவர். இலக்கியப் பத்திரிகைகளிலும் வெகுஜனப் பத்திரிகைகளிலும் இவர் எழுதி வருகிறார். சென்னை அகில இந்திய வானொலியில் இவர் கதைகள் இவர் குரலிலேயே ஒலிப்பதிவாகி ஒலிபரப்பாகியுள்ளன.

தமிழில் மாந்திரீக யதார்த்தக் கதையாடலாக இவர் எழுதிய அரசூர் வம்சம் புதினம் ஆங்கிலத்தில் கோஸ்ட்ஸ் ஓஃப் அரசூர் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருக்கிறது. இவர் ஆனந்தவிகடனில் எழுதிய 'உலகே உலகே உடனே வா' தமிழில் முதல் branded column ஆகும். மலையாளத்திலிருந்து குறிப்பிடத் தகுந்த மொழிபெயர்ப்புகள் செய்துள்ளார். ஆங்கிலத்தில் இருந்து அருண் கொலாட்கரின் அனைத்துக் கவிதைகளையும் மொழிபெயர்த்தார்.

கமல் ஹாசனின் ‘உன்னைப் போல் ஒருவன்’ (2009) திரைப்படத்துக்கான வசனம் எழுதியுள்ளார். அஜீத் குமார் நடிக்கும் பில்லா 2 (2011) திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய ‘நெம்பர் 40, ரெட்டைத் தெரு’ அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘ரெட்டைத் தெரு’ (2010) குறும்படத்தில் நடிகராகவும் திரையில் தோன்றியிருக்கிறார்.[1]

விருதுகள்

இலக்கியச் சிந்தனை ஆண்டுப் பரிசு (சிறந்த சிறுகதை), கதா விருது (சிறுகதை), பாரதியார் பல்கலைக் கழக விருது (நாவல்) போன்ற பல பரிசுகள் இவருடைய படைப்புகளுக்காகப் பெற்றிருக்கிறார் .

நூல்கள்

இதுவரை இரா.முருகனின் 29 நூல்கள் வெளியாகி உள்ளன.

  • தேர் - சிறுகதைத் தொகுதி (அசோகமித்திரன் முன்னுரையோடு)
  • ஆதம்பூர்க் காரர்கள் (சிறுகதைத் தொகுதி)
  • சிலிக்கன் வாசல் (சிறுகதைத் தொகுதி - லில்லி தேவசிகாமணி விருது பெற்றது)
  • கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ் (அறிவியல் கட்டுரைத் தொகுதி - இந்திய அரசின் என்.சி.ஈ.ஆர்.டி பரிசு பெற்றது)
  • ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் (கவிதைத் தொகுதி - வாசுதேவன் நினைவுப் பரிசு)
  • கம்ப்யூட்டர் கொஞ்சம் கலகலப்பு கொஞ்சம் (அறிவியல் கட்டுரைத் தொகுதி - ராஜாராமனுடன் சேர்ந்து எழுதியது - வரதாச்சாரி விருது)
  • தகவல்காரர் (குறுநாவல் தொகுதி)
  • முதல் ஆட்டம் (சிறுகதைத் தொகுதி)
  • பகல் பத்து ராப்பத்து (குறுநாவல் தொகுதி)
  • ஐம்பது பைசா ஷேக்ஸ்பியர் (சிறுகதைத் தொகுதி)
  • மந்திரவாதியும் தபால் அட்டைகளும் (சிறுகதைத் தொகுதி)
  • மூன்று விரல் (நாவல் - கணினித் துறை பற்றிய முதல் தமிழ் நாவல்) இரண்டு வெளியீடுகள்
  • சைக்கிள் முனி (சிறுகதைத் தொகுதி)
  • ராயர் காப்பி கிளப் (கட்டுரைத் தொகுதி)
  • அரசூர் வம்சம் (நாவல்)
  • இரா.முருகன் சிறுகதைகள் (செம்பதிப்பு - 108 சிறுகதைகள் அடங்கியது)
  • இரா.முருகன் சிறுகதைகள் (ஒலிப் புத்தகம் - ஆடீயோ புக்)
  • Ghosts of Arasur (novel - translation of 'Arasur vamsam')
  • நெம்பர் 40, ரெட்டைத் தெரு (bio-fiction)
  • லண்டன் டயரி (பயணக் கட்டுரைகள்)
  • ப்ராஜக்ட் எம் (பிராஜக்ட் மேனேஜ்மெண்ட் பற்றிய முதல் தமிழ் நூல்)[2]
  • விஸ்வரூபம் (மேஜிகல் ரியலிஸம் நாவல்)
  • அச்சுதம் கேசவம் (மேஜிக்கல் ரியலிஸம் நாவல்)
  • வாழ்ந்து போதீரே (மேஜிக்கல் ரியலிஸம் நாவல்)
  • தியூப்ளே வீதி (பயோஃபிக்‌ஷன் நாவல்)
  • நண்டு மரம் (சிறுகதைத் தொகுப்பு)
  • இரா.முருகன் குறுநாவல்கள்
  • பீரங்கிப் பாடல்கள் (நாவல் - மலையாளத்திலிருந்து மொழிபெயர்ப்பு)
  • 1975 (நாவல்)

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-10-15. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-17. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.

3. amazon

"https://tamilar.wiki/index.php?title=இரா._முருகன்&oldid=3371" இருந்து மீள்விக்கப்பட்டது