தீபச்செல்வன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தீபச்செல்வன்
Theepachelvan writer.jpg
பிறப்பு 24-10-1983
பிறந்த இடம் இரத்தினபுரம்,
கிளிநொச்சி
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஈழத்து எழுத்தாளர்
கவிஞர்,
ஊடகவியலாளர்


தீபச்செல்வன் (பிறப்பு: 24 அக்டோபர் 1983) ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், சுயாதீன ஊடகவியலாளருமாவார்.[1] நான்காம் கட்டத்தில் இடம்பெற்ற போர் பற்றிய முக்கியமான கவிதைகளை எழுதியதுடன்[1] தொடர்ந்தும் ஈழநிலத்தின் வாழ்வை தன் கவிதைகளில் பதிவுசெய்து வருகிறார். மிக இளம் வயதிலேயே பரவலாக அறியப்பட்ட இவர் சமகாலத்தின் மிக வலிமையுடைய குரலாக கருதப்படுபவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் வடக்கே கிளிநொச்சி, இரத்தினபுரத்தைச் சேர்ந்தவர். கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தர கலைப்பிரிவில் பயின்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தமிழில் இளங்கலைச் சிறப்புப் பட்டமும்,[1] தமிழகத்தின் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலைப் பட்டமும் (ஆ.யு) பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொடர்பியல் துறையில் எம்.பில் பட்டமும் பெற்றவர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் போர் நடந்த காலப்பகுதியில் (2008 ஆம் ஆண்டியிலிருந்து 2009 ஆண்டின் இறுதிவரை) பொதுச்செயலாளராக பதவி வகித்தார்.[1][2]

திரையுலகில்

  • தாண்டவம் என்ற தென்னிந்தியத் திரைப்படத்துக்காக நடிகர் நாசருக்கு இலங்கைத் தமிழைக் கற்றுக் கொடுத்துள்ளார்.[3] யாவும் வசப்படும் என்ற தென்னிந்தியத் திரைப்படத்திற்காக டைட்டில் சோங்கை எழுத்தோட்டப்பாடலை எழுதியுள்ளார்.
  • இலங்கை பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்தில் வசன கர்த்தாவாக பணியாற்றிய இவர், அந்தப் படத்தில் இந்திய இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனின் இசையில் மூன்று பாடல்களை எழுதியுள்ளதுடன், ஒரு முன்னாள் போராளியாகவும் நடித்துள்ளார். [4] [5]
  • சமுத்திரக்கனி, ரித்விகா, அருந்ததிநாயர், யோகிபாபு நடிக்க என்.ஏ. இராசேந்திர சக்கரவர்த்தி இயக்கி, என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்த யாவரும் வல்லவரே திரைப்படத்தில் முக்கிய பாடல் ஒன்றை எழுதியுள்ளார்.[6] [7]

விருதுகள்

  • 2010 - சிறந்த புகைப்பட ஊடகவியலாளர் விருது [8]
  • 2011 - இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான சிறந்த ஊடகவிலாயளருக்கான பேராசிரியர் கைலாசபதி விருது[9]
  • 2014 - இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் மற்றும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம் இணைந்து வழங்கும் நெருக்கடிச் சூழலில் இயங்கியமைக்கான 2014 ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் விருது.[10] (குளோபல் தமிழ் செய்திகளுக்காக எழுதப்பட்டு தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட தமிழர் தாயக நில அபகரிப்புக்கள் குறித்த கட்டுரைகளுக்காக வழங்கப்பட்டது.)

வெளிவந்த நூல்கள்

  • பதுங்குகுழியில் பிறந்த குழந்தை (2008, காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு)
  • ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் (2009, :உயிர்மை பதிப்பகம், சென்னை20)
  • பாழ் நகரத்தின் பொழுது (2010, காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு)
  • ஈழம் மக்களின் கனவு (2010, தோழமை பதிப்பகம், தமிழ்நாடு)
  • பெருநிலம் (2011, காலச்சுவடு பதிப்பகம், தமிழ்நாடு)
  • ஈழம் போர்நிலம் (2011, தோழமை பதிப்பகம், தமிழ்நாடு)
  • மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு (2011, ஆழி பதிப்பகம், .தமிழ் நாடு)
  • கூடார நிழல் (2012, உயிர்மை பதிப்பகம், சென்னை, தமிழ் நாடு)
  • கிளிநொச்சி போர்தின்ற நகரம் (2013, எழுவா வெளியீடு)
  • எதற்கு ஈழம்? (2013, தோழமை பதிப்பகம், தமிழ் நாடு)
  • Pray for my Land (2013, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தமிழ்நாடு)
  • எனது குழந்தை பயங்கரவாதி (2014 விடியல், தமிழ்நாடு)
  • எனது நிலத்தை விட்டு எங்கு செல்வது? (2014 உயிர்மை, தமிழ்நாடு)
  • பேரினவாதத் தீ (2016, யாவரும் பதிப்பகம்)
  • தமிழர் பூமி (2017, எதிர் வெளியீடு)
  • நடுகல் (2018, டிஸ்கவரி புக் பேலஸ்)
  • நான் ஸ்ரீலங்கன் இல்லை (2020, யாவரும் பப்ளிசர்ஸ்)
  • ஸ்மாரக்க ஷிலாவத்த (2021, நடுகல் சிங்கள மொழியாக்கம்) கடுல்ல பதிப்பகம்
  • பயங்கரவாதி (2022, டிஸ்கவரி புக் பேலஸ்)
  • பள்ளிக்கூடங்கள் கட்டடக்கூடுகளல்ல (2023, ஜீவநதி பதிப்பகம்)

மேற்கோள்கள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
  1. 1.0 1.1 1.2 1.3 ஆர். சுஜாதா (6 ஏப்ரல் 2013). "Every time I write, I think of my land". தி இந்து. http://www.thehindu.com/books/books-columns/every-time-i-write-i-think-of-my-land/article4584462.ece. பார்த்த நாள்: 27 திசம்பர் 2015. 
  2. http://www.shobasakthi.com/shobasakthi/?p=717
  3. "நாசரை இலங்கைத் தமிழ் பேசவைத்த ஈழக் கவிஞர் தீபச்செல்வன்!" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304202924/http://www.thinakkathir.com/?p=47452. 
  4. சினம் கொள் திரைப்படத்தில் சிறுவேடத்தில் நடித்த தீபச்செல்வன்!
  5. சினம் கொள் திரைப்பட விமர்சனம்
  6. சமுத்திரக்கனி, யோகிபாபு நடிக்கும் யாவரும் வல்லவரே
  7. தென்னிந்திய திரைத்துறையினுள் பாடலாசிரியராக கவிஞர் தீபச்செல்வன்
  8. "யாழ்ப்பாணம் இணையத்தளம்" இம் மூலத்தில் இருந்து 2016-03-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160305185552/http://www.ourjaffna.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D. 
  9. [1] Theepachelvan has been awarded for the articles written by him for the Global Tamil News
  10. நெருக்கடிச் சூழலில் இயங்கிய சிறந்த ஊடகவியலாளர் விருது தீபச்செல்வனுக்கு!

வெளி இணைப்புகள்

[நூலகம்]

"https://tamilar.wiki/index.php?title=தீபச்செல்வன்&oldid=2719" இருந்து மீள்விக்கப்பட்டது