தாண்டவம் (திரைப்படம்)

தாண்டவம் என்பது 2012 ஆம் ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது ஒரு அதிரடி சாகசப் படம். யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் இதனை தயாரித்தது.[1].

தாண்டவம்
இயக்கம்விஜய்
தயாரிப்புரோனி ஸ்குரூவாலா
சித்தார்த் ராய் கபூர்
கதைவிஜய்
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புவிக்ரம்
அனுஷ்கா
சந்தானம்
நாசர்
ஏமி சாக்சன்
ஒளிப்பதிவுநீரவ் ஷா
படத்தொகுப்புஆண்டனி
கலையகம்யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 28, 2012 (2012-09-28)
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

கதைச் சுருக்கம்

இந்தியாவின் உளவுப்பிரிவிவான ராவில் பணியாற்றும் விக்ரமும், ஜெகபதிபாபுவும் நண்பர்கள். திடீரென ஊரில் விக்ரமுக்கு திருமணம் நிச்சயமாகிறது. வேண்டா வெறுப்பாக வருபவர், அனுஷ்காவைப் பார்த்ததும் மனம் மாறி மணக்கிறார். திருமணமான கையோடு வேலை தொடர்பாக மனைவியுடன் லண்டன் கிளம்புகிறார். அங்கே எதிராளிகளின் சதியின் காரணமாக மனைவியையும் பார்வையையும் இழக்கிறார். அதன்பிறகு எதிரிகளை எவ்வாறு பழிவாங்குகிறார் என்பதை சண்டை சாகசங்களுடன் சொல்லியிருக்கிறார், இயக்குனர் விஜய்.[2]

நடிகர்கள்

இசை

இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். பாடல்களை நா. முத்துகுமார் எழுதியிருந்தார்.

தயாரிப்பு

இப்படத்தை விஜய் இயக்கினார். திரைத் தொகுப்பாளராக ஆண்டனி, ஒளிப்பதிவாளராக நீரவ்சா, கலை நாகு ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். படத்தின் தொழில் நுட்பத்திற்காக வெளிநாட்டில் இருந்து கலைஞர்களை இறக்குமதி செய்தார் விஜய்.[3]. மேலும் மனோகர் வர்மா என்பவர் சண்டை காட்சிகளை வடிவமைத்திருந்தார்.

மேற்கோள்களும் குறிப்புகளும்

வார்ப்புரு:ஏ. எல். விஜய் இயக்கியுள்ள திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=தாண்டவம்_(திரைப்படம்)&oldid=33942" இருந்து மீள்விக்கப்பட்டது