ஆழியாள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆழியாள்
பிறப்புபெயர் மதுபாஷினி
பிறந்ததிகதி சூன் 16, 1968 (1968-06-16) (அகவை 56)
பிறந்தஇடம் திருகோணமலை, இலங்கை
பணி ஆங்கில விரிவுரையாளர் (யாழ். பல். வவுனியா, 1992-1997)
கணினியியலாளர் 1999-2019
தேசியம் அவுஸ்திரேலியா
கல்வி இளங்கலை (ஆங்கில இலக்கியம், MKU),
முதுகலை (ஆங். இலக்கியம், நிசவேப),
பட்டப்பின் டிப்புளோமா (ததொ (நிசவேப)
காலம் 1995–இன்று
வகை படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு, விமரிசனம்
இணையதளம் http://aazhiyaal.net/

ஆழியாள் (பிறப்பு: 16 சூன் 1968) என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ரகுபதி இலங்கைத் தமிழ்க் கவிஞர்.[1] இவருக்கு "நெடுமரங்களாய் வாழ்தல்" என்ற பிரதிக்காக 2021 ஆம் ஆண்டுக்கான கவிதை விருதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிக் கௌரவித்தது.[2]

வாழ்க்கைக் குறிப்பு

இவர் 1968ம் ஆண்டு இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார்.[1] அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், ஆத்திரேலியாவில் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் பெற்றவர். யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது ஆத்திரேலியத் தலைநகர் கான்பராவில் வசித்து வருகிறார்.

எழுத்துத் துறை

தொண்ணூறுகளில் எழுதத்தொடங்கிய ஆழியாளின் மூன்று கவிதைத் தொகுப்புக்களும் ஓர் மொழிபெயர்ப்பு கவிதைத் தொகுப்பும் இதுவரை வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமரிசனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுபவர். இவரது படைப்புகள் மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் மலையாளத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவரது நூல்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=ஆழியாள்&oldid=6654" இருந்து மீள்விக்கப்பட்டது