எஸ். என். பார்வதி
S. N. Parvathy | |
---|---|
பிறப்பு | பார்வதி பர்மா |
தேசியம் | இந்தியர் |
பணி | திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை, நாடக நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1965 – தற்போது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பசி பாலைவனச்சோலை ஆகாயகங்கை அருவி எங்க ஊரு பாட்டுக்காரன் சின்ன மாப்ளே |
சொந்த ஊர் | பரமக்குடி, இராமநாதபுரம் |
வாழ்க்கைத் துணை | சாரங்கன் |
பிள்ளைகள் | 2 |
விருதுகள் | கலைமாமணி விருது, கலைச்செல்வம் |
எஸ். என். பார்வதி (S. N. Parvathy) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். இவர் தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலான படங்களில் தாய் வேடங்களில் நடித்துள்ளார். பிரபல திரைப்படங்களான அனுபவி ராஜா அனுபவி, பசி, பலைவானச்சோலை, ஆகாய கங்கை, எங்க ஊரு பாட்டுக்காரன், அண்ணாநகர் முதல் தெரு, சின்ன மாப்ளே போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். இவரது முதல் படம் 1965 ஆம் ஆண்டில் வெளியான பணம் தரும் பரிசு ஆகும். இவர் 200 க்கும் மேற்பட்ட படங்களிலும் 5000 நாடகங்களிலும் நடித்துள்ளார். இவர் 1985 இல் கலைமாமணி விருது பெற்றார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
பார்வதியின் சொந்த ஊர் பரமக்குடி, என்றாலும் இவர் பர்மாவில் பிறந்தார். பார்வதியின் தந்தை நாகசுந்தரம், தாய் வள்ளியம்மாள். இவர் 1958 இல் நாடகங்களில் நடிக்க வந்தார். இவர் நடித்த முதல் நாடகம் தீர்பு என்பதாகும். பி. ஏ. கிருஷ்ணன் இவரது நாடக குரு ஆவார். அவர்தான் இவரை நடிகையாக்கியது. அதன் பிறகு, நாடக உலக தந்தை டி. கே. சண்முகம் அண்ணாச்சியுடன் 5000 க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார்.[சான்று தேவை]
திரைப்பட வாழ்க்கை
இவர் ஒரே நாளில் ஏழு நாடகங்களில் நடித்துள்ளார். இவர் தனது 13 வயதில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ஏ. வி. எம். ராஜன் குழுவிலிருந்து காத்தாடி ராமமூர்த்தியின் குழு வரை பல நாடகங்களில் நடித்துள்ளார். இவர் முதலில் பணம் தரும் பரிசு படத்தில் தாயாக நடித்தார். அந்த நேரத்தில், இவருக்கு 17 வயதுதான். இவர் பசி படத்தில் நடிக்கும் வரை இவரது வாழ்க்கை கஷ்டத்திலேயே இருந்தது. அப்போதிருந்து, இவர் ஒரு சிறந்த துணை நடிகையாக மாறிவிட்டார். [2] [3] [4]
தனிப்பட்ட வாழ்க்கை
இவர் நாடகத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோது 1961 இல் திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் சாரங்கன் என்பவராவார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகன் ஒரு பொறியாளர், மகள் இயங்கியல் மருத்துவர்.[சான்று தேவை]
விருதுகள்
இவர் தமிழக அரசின் கலைமாமணி மற்றும் கலைசெல்வம் விருதுகளைப் பெற்றவர். [5]
தொலைக்காட்சி
ஆண்டு | தொடர் | பாத்திரம் | தொலைக்காட்சி அலைவரிசை |
---|---|---|---|
1999-2000 | சொந்தம் | பொதிகை தொலைக்காட்சி | |
2004-2006 | அகல்யா | சன் தொலைக்காட்சி | |
கணவருக்காக | சன் தொலைக்காட்சி | ||
2008 | மணிக்கூண்டு | ரசாம | |
2010–2013 | முந்தானை முடிச்சு | மீனாட்சி | |
2018 - தற்போது | ஈரமான ரோஜாவே | பாப்பமாள் | விஜய் தொலைக்காட்சி |
2019 - தற்போது | பாண்டவர் இல்லம் | பட்டம்மாள் | சன் தொலைக்காட்சி |
2020 | சித்தி–2 | சாரதா மற்றும் பத்மாவின் தாய் |
திரைப்படவியல்
இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமை. நீங்கள் இதை விரிவாக்கலாம்.
1960 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1965 | பணம் தரும் பரிசு | அறிமுகம் | |
1967 | பாமா விஜயம் | பார்வதியின் தாய் | |
1967 | அனுபவி ராஜா அனுபவி | தங்கமுத்தைக் காப்பவர் | |
1967 | பால் மனம் | ||
1968 | நீலகிரி எக்ஸ்பிரஸ் | சபாபதியின் மனைவி | |
1968 | கலாட்டா கல்யாணம் | ரஞ்சிதம், நாடக நடிகை | |
1968 | கணவன் | ||
1968 | உயர்ந்த மனிதன் | ||
1969 | கண்ணே பாப்பா |
1970 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1970 | திருமலை தென்குமரி | ||
1970 | எங்க மாமா | ||
1970 | சினேகிதி | ||
1971 | சுமதி என் சுந்தரி | பார்வதி | |
1971 | தெய்வம் பேசுமா | ||
1971 | புன்னகை | ||
1971 | ஜஸ்டிஸ் விஸ்வநாதன் | ||
1972 | நவாப் நாற்காலி | ||
1972 | நான் ஏன் பிறந்தேன் | ||
1972 | வழையடி வாழை | ||
1972 | பொன் மகலள் வந்தாள் | ||
1973 | சூரியகாந்தி | பார்வதி, ராதாவின் தாய் | |
1973 | பிரார்த்தனை | ||
1973 | ராஜ ராஜ சோழன் | ||
1973 | திருமலை தெய்வம் | ||
1973 | சொந்தம் | ||
1974 | அன்பைத்தேடி | ||
1974 | பிரயாசித்தம் | ||
1974 | பந்தாட்டம் | ||
1974 | குலகௌரவம் | ||
1975 | சினிமா பைத்தியம் | ஆசிரியர் | |
1975 | அந்தரங்கம் | ||
1977 | சக்ரவர்த்தி | ||
1977 | ஸ்ரீ கிருஷ்ணலீலா | ||
1978 | வணக்கத்திற்குரிய காதலியே | ||
1979 | மந்தோப்பு கிளியே | ||
1979 | நான் வாழவைப்பேன் | ||
1979 | இமயம் | ||
1979 | வீட்டுக்கு வீடு வாசப்படி | ||
1979 | பசி | ராக்காமா |
1980 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | எமனுக்கு எமன் | ||
1980 | குமரி பெண்ணின் உள்ளத்திலே | ||
1980 | பொன்னகரம் | ||
1981 | நண்டு | உமாவின் தாய் | |
1981 | ஒருத்தி மட்டும் கரைனிலே | ||
1981 | காதோடுதான் நான் பேசுவேன் | ||
1981 | கிளிஞ்சல்கள் | ||
1981 | பலைவனச்சோலை | ||
1981 | சுமை | ||
1981 | மீண்டும் கோகிலா | ||
1982 | பரிட்சைக்கு நேரமாச்சு | ||
1982 | அகாய கங்கை | ||
1982 | ராணித்தேனீ | ||
1982 | சகலகலா வல்லவன் | ||
1982 | அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை | ||
1982 | கல்யாணக் காலம் | ||
1982 | ரூபி மை டார்லிங் | மலையாள படம் | |
1983 | வீட்டுல ராமன் வெளியில கிருஷ்ணன் | ||
1983 | இளமை காலங்கள் | ||
1986 | மேல்மருவத்தூர் அற்புதங்கள் | ||
1986 | கோடை மழை | ||
1986 | நான் அடிமை இல்லை | பணிப்பெண் | |
1987 | கிருஷ்ணன் வந்தான் | ||
1987 | எங்க ஊரு பட்டுக்காரன் | சென்பகம் | |
1987 | ஊர்க்காவலன் | ||
1988 | செண்பகமே செண்பகமே | ||
1988 | அண்ணாநகர் முதல் தெரு | ||
1988 | சத்யா | ராதாவின் மாமியார் | |
1988 | சகாதேவன் மகாதேவன் | ||
1989 | உத்தம புருஷன் |
1990 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1990 | பாலைவன பறவைகள் | ||
1990 | அதிசயப் பிறவி | காளையனின் தாய் | |
1990 | கிழக்கு வாசல் | ||
1990 | நீங்களும் ஹீரோதான் | ||
1990 | 13-ம் நம்பர் வீடு | பார்வதி | |
1991 | கும்பக்கரை தங்கய்யா | ||
1992 | நாடோடிப் பாட்டுக்காரன் | ||
1992 | அண்ணாமலை | ||
1993 | சின்ன மாப்ளே | ||
1993 | மாமியார் வீடு | ||
1993 | வேடன் | ||
1994 | மனசு ரெண்டும் புதுசு | ||
1997 | தெம்மாங்கு பாட்டுக்காரன் | ||
1997 | விவசாயி மகன் |
2000 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2001 | டும் டும் டும் | ||
2001 | ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி | ராஜேஸ்வரியின் பாட்டி | |
2002 | பம்மல் கே. சம்மந்தம் | ||
2006 | குருச்சேத்திரம் | ||
2007 | வீரசாமி | வீரசாமியின் தாய் |
குறிப்புகள்
- ↑ "All you want to know about #SNParvathi" (in en). https://www.filmibeat.com/celebs/s-n-parvathi.html.
- ↑ ""குப்பைக் கீரை கடைஞ்சா ஆசையா சாப்பிடும்!" - மனோரமா பற்றி பார்வதி" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/actress-sn-parvathy-shares-her-experiences-about-actor-manorama.
- ↑ Dinamalar (2017-02-17). "பிளாஷ்பேக்: அகதியாக வந்து நடிகை ஆனவர் | Flashback : How Actress SN Parvathi turn as actress" (in ta). https://cinema.dinamalar.com/tamil-news/56310/cinema/Kollywood/Flashback-:-How-Actress-SN-Parvathi-turn-as-actress.htm.
- ↑ "உயர்ந்த மனிதன் - 50: வெட்கப்பட்ட கதாநாயகிகள்!" (in en). https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/162439-50.html.
- ↑ "எனக்கு இரண்டாவது முறை 'கலைமாமணி' விருதா? - குழப்பத்தில் நடிகை எஸ்.என்.பார்வதி" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/151045-name-confusion-in-recently-announced-kalaimamani-awardees-list.