13-ம் நம்பர் வீடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
13-ம் நம்பர் வீடு
இயக்கம்பேபி
தயாரிப்புஆஷா கிரியேசன்ஸ்
கதைபேபி
இசைசங்கீத ராஜன்
நடிப்புஜெய்சங்கர்
நிழல்கள் ரவி
ஸ்ரீப்ரியா
சாதனா
ஒளிப்பதிவுகே.பி.தயாளன்
சி.இ.பாபு
படத்தொகுப்புஜி.முரளி
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

13-ம் நம்பர் வீடு 1990 இல் வெளிவந்த திகில் தமிழ்த் திரைப்படம். மலையாளத் திரைத் துறையைச் சேர்ந்த பேபி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[1][2][3][4]

வகை

பேய்ப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

13-ம் எண்ணுள்ள வீட்டுக்கு குடி வருகிறார்கள் அண்ணன், தம்பி கொண்ட குடும்பத்தார். முதலில் தாத்தா மர்மமான முறையில் இறக்கிறார். பின்னர் அண்ணன் மர்மமான முறையில் இறக்கிறார்.வீட்டில் திகிலூட்டும் சம்பவங்கள் நடக்கின்றன. புத்தக அலமாரிக்குள் ஒரு மர்ம அறை இருக்கின்றது. அதில் அவ்வீட்டில் நடந்த பழைய சம்பவங்கள் கண் முன்னே தெரிகின்றன. அக்குடும்பத்தின் முன்னோர் ஒருவர் ஒரு பெண்ணின் சாவுக்கு காரணமாக இருக்கிறார். அப்பெண் அவர் வம்சத்தில் வரும் அனைத்தும் ஆண்களையும் பழி வாங்குவதாக சபதம் செய்து உயிர் விடுகிறாள். பழி வெறி கொண்ட அப்பெண்ணின் ஆவி கருவில் இருக்கும் சிறு உயிரைக் கூட விட்டு வைக்கவில்லை. தெய்வத்தின் சக்தி கொண்டு அந்த பெண்ணின் ஆவியை சாந்தம் செய்து அடக்குகிறார்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=13-ம்_நம்பர்_வீடு&oldid=29779" இருந்து மீள்விக்கப்பட்டது