இ. தியாகலிங்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இ. தியாகலிங்கம்
இ. தியாகலிங்கம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
இ. தியாகலிங்கம்
Thiagalingam Ratnam
பிறப்புபெயர் இரத்தினம்
தியாகலிங்கம்
பிறந்ததிகதி 1967
பிறந்தஇடம் காரைநகர்
இலங்கை,
பணி கணினி
பொறியியலாளர்
தேசியம் நோர்வேஜியர்
கல்வி Oslo University
college,Holtet
videregående skole
Den Polytekniske
Høyskolen,
யா/யாழ்ற்றன்
கல்லூரி,
காரைநகர் இந்துக்
கல்லூரி
பணியகம் Oslo
universitets­sykehus
அறியப்படுவது எழுத்தாளர்
வகை சிறுகதை
புதினம்
குறுநாவல்
கவிதை
பெற்றோர் வேலுப்பிள்ளை
இரத்தினம்,
இரத்தினம்
பரமேஸ்வரி
இணையதளம் [karai
nagaran.com
]
[Youtube]
[lokalhistoriewiki]


இ. தியாகலிங்கம் (Thiagalingam Ratnam, பிறப்பு: 1967) என்பவர் புலம்பெயர்ந்த ஈழத்துப் புதின, சிறுகதை எழுத்தாளராவார்.[1] இவர் காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

தியாகலிங்கம் இலங்கையின், காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஸ்ர பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.

1984 ஆம் ஆண்டில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் இணைந்து, தமிழரின் கனவான தனி நாட்டிற்காகப் போராடப் புறப்பட்டுச் சென்று, தமிழகத்தில் அதற்கான இராணுவப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டதோடு, சென்னையில் அரசியல் பயின்று, அதைத் தோழர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்பு முகாம் ஒன்றிற்குப் பொறுப்பாளராகவும் செயற்பட்டார். அங்கு இருக்கும் போதே முகாமில் வெளியிடப்பட்ட கையெழுத்துப் பிரதிகளிலும், தமிழீழமானவர் பேரவையால் வெளியிடப்பட்ட சஞ்சிகையிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன.

Thiagalingam2.jpg

இறுதியாகத் திருவாரூரில் நடைபெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மாநாட்டில் பங்குபற்றியவர், அதில் கிடைத்த ஞானத்தின் முடிவில், அந்த இயக்கத்தைத் துறந்து, தனது வழியில் புறப்பட்டுச் சென்னையில் வந்து தங்கினார். அப்படியும் சென்னையில் ஏற்பட்ட தொந்தரவால் அங்கிருந்து புலம்பெயர்ந்து நோர்வேக்குச் சென்றார். பின்பு நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் செய்து வருகிறார்.

இலக்கியப் பணி

இவரது சில கவிதைகள் முதலில் இராணி, வீரகேசரி போன்றவற்றிலும், நோர்வே மொழியில் எழுதப்பட்ட கவிதைகள் பின்மார்க்கன் என்னும் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டன. அத்தோடு நோர்வேயில் இருந்து வெளிவந்த சுவடுகளில் சிறுகதைகளும், சர்வதேசதமிழரில் நாவல்களும் பிரசுரிக்கப்பட்டன. பின்னர் கணையாழி, இருக்கிறம் போன்ற சஞ்சிகைகளிலும் கீற்று இணையத்திலும் சிறுகதைகள் வெளியாகியுள்ளன. இவரது முக்கிய படைப்புக்களாக நாவல்கள், சிறுகதைகள், குறுநாவல்கள் உள்ளன.

ரோமாபுரியில் தியாகலிங்கம்

அமார் பொன்னுத்துரையுடன் நட்பு கொண்டிருந்த இவர், மித்ர பதிப்பகத்தின் ஊடாக தனது முதல் ஒன்பது படைப்புகளை வெளியிட்டார். பின்பு சுய வெளியீடாகத் தனது படைப்புகளை வெளியிட்டுவரும் இவர், சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தக்கூடாது என்பதற்காகப், பாரம்பரிய முறையில் புத்தகங்களை வெளியிட்டு இயற்கையை அழிப்பதற்கு தானும் ஊக்கப்படுத்தாது இருப்பதற்காக மின் புத்தகங்களையும், வாங்கியபின் அச்சாகும் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

யதார்த்த வாழ்க்கையில் நிகழும் அவலங்களைச் சமூகக் கடமையுள்ள ஒருவனின் பார்வைக்கு உள்ளாக்குகின்றார். பிரச்சினைகளைக் கருத்தியல் ரீதியான விசாரணைக்கு உட்படுத்துகின்றார். இதனால் அவருடைய ஒவ்வொரு இலக்கியப் புனைவும் சமூக ரீதியான ஒவ்வொரு அக்கறையுடன் இணைந்தே உருவாகியுள்ளதை நாம் அடையாளம் காணலாம் என்று அமரர் திரு ச. பொன்னுத்துரையால் விதந்துரைக்கப்பட்டவர்.

தமிழர்விக்கி உருவாக்கம்

இவர் "முதலில் விக்கிப்பீடியாவின் தமிழ் பிரிவும் அவர்களின் பக்கச் சார்பு சர்வாதிகார போக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பின்னர் தோன்றிய விக்கியின் இலக்கிய நாட்டாமையும், அதனோடு சேர்ந்த அலப்பரையும் தாங்க முடியாது இருக்கிறது. இவ்விரண்டின் தகவல் நடுநிலைக்கு அப்பாற்பட்ட செயற்பாட்டைச் சகித்துக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை" என்கின்ற நிலைப்பாட்டுடன் தமிழர்விக்கியை [2] 2023 ஆம் ஆண்டு துவங்கினார்.


படைப்புகள்

  • அழிவின் அழைப்பிதழ் (1994) – புதினம் - மூன்றாம் பதிப்பு ISBN 9781105401596
  • நாளை (1999) – புதினம் - இரண்டாம் பதிப்பு - ISBN 9781008939905[3]
  • பரதேசி (2008) – புதினம் - இரண்டாம் பதிப்பு - ISBN 9781794846340
  • வரம் (2009) – குறுநாவல் தொகுதி - இரண்டாம் பதிப்பு - ISBN 9781471726569
  • துருவத் துளிகள் (2009) – கவிதைத்தொகுதி - ISBN 978-81-89748-79-1
  • திரிபு (2010) – புதினம் - இரண்டாம் பதிப்பு - ISBN 9781471730221[4]
  • எங்கே (2011) – புதினம் - இரண்டாம் பதிப்பு - ISBN 9781447768883[5]
  • ஒரு துளி நிழல் (2014) - புதினம் - ISBN 987-93-81322-22-2 [6]
  • பாராரிக்கூத்துக்கள் (2014) – புதினம் - ISBN 978-93-813-22-27-7 [7] [8]
  • மானிடம் வீழ்ந்ததம்மா (2015) – புதினம் - ISBN 978-1-329-02347-5, ISBN 978-1-329-02337-6 [9]
  • சர்வ உரூபிகரம் (2016) – புதினம் - ISBN 978-1-326-64799-5
  • அரங்கத்தில் நிர்வாணம் (2016) – புதினம் - ISBN 978-1-6671-6018-4
  • வப்பு நாய் (2016) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - ISBN 978-1-6671-5691-0
  • துருவத்தின் கல்லறைக்கு (2016) – புதினம் - ISBN 978-1-6671-5683-5
  • காமமே காதலாகி (2016) – புதினம் - ISBN 978-1-6671-5681-1
  • மொழியா வலிகள் பகுதி-1 (2018) – புதினம் - ISBN 978-1-6671-5674-3
  • மொழியா வலிகள் பகுதி-2 (2018) – புதினம் - ISBN 978-1-6671-5675-0
  • மொழியா வலிகள் பகுதி-3 (2018) – புதினம் - ISBN 978-1-6671-5671-2
  • மொழியா வலிகள் பகுதி-4 (2018) – புதினம் - ISBN 978-1-6671-5676-7
  • புத்தரின் கடைசிக் கண்ணீர் (2019) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - ISBN 978-0-244-44689-5
  • நெருஞ்சி முள்ளு(2019) – இரு சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் அடங்கிய தொகுப்பு - ISBN 978-0-244-18248-9
  • இரண்டகன்? (2019) – குறுநாவல் தொகுதி - ISBN 978-0-244-54705-9
  • மதுவின் இரகசியம் (2020) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - ISBN 978-0-244-27384-2
  • கடூழியம் (2021) – சிறுகதை, குறுநாவல் தொகுதி - ISBN 978-1-105-02733-8
  • உறைவி (2022) – புதினம் - ISBN 978-1-4583-6440-1
  • ஒப்புரவு (2022) – புதினம் - ISBN 978-1-4710-4831-9
  • பேடும் மிதிக்கும் (2023) -- புதினம் - ISBN 978-1-4477-7948-3
  • ஏழ்மை விலங்கு (2023) — புதினம், - ISBN 978-1-4466-6917-4
  • வே (2024) — புதினம், - ISBN 979-8-8941-5161-8
இலக்கிய சந்திப்பொன்றில் இ. தியாகலிங்கம் அமரர் ச. பொன்னுத்துரை உடன் அமரர் பிரபஞ்சன்

நோர்வே மொழியில்

ஆங்கிலத்தில்

மொழி பெயர்ப்புகள் (நோர்வே மொழியிலிருந்து தமிழுக்கு)

  • கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் -- நாடகம் - ISBN 979-8-8932-2165-7

விருதுகள்

செந்தமிழ் செல்லும் வழியெது பார்- கவிதை - இலங்கைத் தமிழ்ச் சங்கம் - விக்டோரியா, முத்தமிழ் விழா, 1993.05.23 அன்று பரிசு பெற்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=இ._தியாகலிங்கம்&oldid=25977" இருந்து மீள்விக்கப்பட்டது