கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் (நாடகம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் (நாடகம்)
கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் (நாடகம்)
நூலாசிரியர் ஹென்ரிக் இப்சன்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
உண்மையான
தலைப்பு
Hærmændene på Helgeland
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் (நாடகம்)
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை , அரசியல்
வெளியிடப்பட்டது 04 Mar 2024
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம்
பக்கங்கள் 84
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
979-8893221657
முன்னைய
நூல்
ஏழ்மை விலங்கு


கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்ற இந்த நாடகம் ஹென்ரிக் இப்சனால் 1858 இல் எழுதப்பட்டுக் கிட்டத்தட்ட 200 வருடங்கள் சென்றபின் தமிழிற்கு மூல மொழியிலிருந்து நேரடியாக இ. தியாகலிங்கத்தால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடகத்தின் வீரியம் இன்றும் குன்றாது இருப்பது அதிசய மூட்டுகிறது என்பதோடு இது ஒரு துருவத்தின் பாரதம் போல அதன் சில சாயல்கள் இந்த நாடகத்தில் கொப்பளிக்கின்றன. இது நோர்வேயிலும் மற்றும் பல நாடுகளிலும் பிரபலமாக மேடையேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் ஹென்ரிக் ஜோஹன் இப்சன் (1828-1906) ஒரு நோர்வே நாடக ஆசிரியர் என்பதுடன் கவிஞரும் ஆவார். அவர் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முக்கியத்துவம் பெற்றவர். மேலும் வில்லியம் ஷேக்ஸ்பியருக்குப் பிறகு உலகில் அதிகம் அரங்கேறிய நாடக ஆசிரியராகக் கூறப்படுகிறது. இப்சன் நவீன நாடகத்தின் தந்தை என்று அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்.

நான்கு காட்சிகளில் இந்தநாடகம் விரிகிறது.

நபர்கள்: ஓர்நூல்வ் - பியூர்ட்டில் இருந்து ஐஸ்லாந்தின் நில ஜாமீன். பியூர்ட் (செங்குத்தான மலைகளுக்கு இடையில்இ ய-னாவின் அரைப் பகுதி போலஇ கடலில் வாயைத் திறப்பதாய்இ பனி யுகத்தில் உருவாக்கப்பட்ட, ஒரு நீண்ட கடல் பகுதி, குறிப்பாக இது நோர்வேயில் காணப்படுகிறது. இதைப் பியூர்ட் என்பார்கள்.) சிகூர்ட் கின் ஸ்தர்க்க, கடல் ராஜா. குன்னார் ஹெர்ஸெ, கெல்கலாண்டின் பணக்கார விவசாயி. ஓர்நூல்வின் இளைய மகன் தூரோல்ப்வ். ஓர்நூல்வின் மகள் டாக்னி. அவரது வளர்ப்பு மகள் யோர்டீஸ். கோர பொண்ட ஒரு கெல்கலாண்டான். குன்னாரின் நான்கு வயது மகன் ஏகில். ஓர்நூல்வின் ஆறு மூத்த மகன்கள். ஓர்நூல்வின் மற்றும் சிகூர்ட்டின் ஆட்கள். விருந்தினர்கள், பணியாட்கள், வடமுனை ஆலா, அமைதியற்ற ஆட்கள் முதலியன.

(ஏரிக் புளாட்ஒக்ஸின் காலத்தில் இந்த காட்சி வடநோர்வேயில் கெல்கலாண்டில் உள்ள குன்னாரின் பண்ணையிலும், அருகிலும் நடைபெறுகிறது.)

இந்த நாடகத்திற்கு கிடைத்த விமர்சனத்தில் ஒன்று

கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் என்கிற இந்த நாடகம்; உலக நாடகங்களின் தந்தை என்று அழைக்கப்படும் ஹென்ரிக் இப்சனால் எழுதப்பட்டது. அதனால் அதன் கலையம்சம், கதையம்சம் பற்றி நான் இங்கே கூறத் தேவையில்லை. மொழி பெயர்ப்பை மட்டும் பார்த்த வகையில் யாரும் இ. தியாகலிங்கத்தை இதற்குப் பாராட்டாமல் கடந்து செல்லமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

இந்த நாடகம்; நாடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம். ஹென்ரிக் இப்சனின் சிறந்த நாடகமாய் ஒரு பொம்மை வீடு கருதப்படுகிறது. கெல்கலாண்டில் யுத்த வீரர்கள் அதற்குச் சளைத்தது இல்லை. அத்தோடு தியாகலிங்கத்தின் அழகு தமிழும் சேர்ந்து, வாசிக்கும் கணங்களைத் திரைப்படம் பார்க்க வைப்பது போல் இருக்கிறது.

தமிழில் பல இலக்கியங்கள், சில இலக்கியப் படைப்பாளர்கள், ஏனோ பேசப்படுவதில்லை, கண்டு கொள்ளப் படுவதில்லை. தமிழக இலக்கிய ஜாம்பவான்களிடம் ஓடுவதும், அவர்களை அழைத்து வந்து விருந்தோம்புவதும், அவர்களுக்கு விருது கொடுப்பதும், அதனால் நல் விமர்சனங்களையும், புகழ் மொழியையும், விருதுகளையும் அதற்குக் கையூட்டாக வாங்குவதுமாகத் தமிழ் இலக்கிய உலகு காசடைந்து கிடக்கிறது. அதைவிடப் பல அரசியல்கள். அதனால் பேசப்படாத நல்ல படைப்புக்கள், அவற்றைப் படைத்த எழுத்தாளர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அப்படி பேசப்படாதவர்களில் ஆளுமையான படைப்பாளிகளும் உண்டு. அவற்றை இனம் காண வேண்டியது தமிழ் இலக்கியத்திற்கு மிகவும் அவசியமாகின்றது. அதில் தியாகலிங்கமும் ஒருவர் என்று நான் எண்ணுகிறேன்.

இளைய சந்திரன்

இத்தாலி