இரண்டகன்?

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இரண்டகன்?
இரண்டகன்?
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
உண்மையான
தலைப்பு
இரண்டகன்?
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
இரண்டகன்?
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
1
பொருண்மை குடும்ப வாழ்க்கை , அரசியல்
வெளியிடப்பட்டது Dec 21, 2019
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 84
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9780244547059
முன்னைய
நூல்
நெருஞ்சி முள்ளு
அடுத்த
நூல்
மதுவின் இரகசியம்

தியாகிகள் துரோகிகள் என்பது இன்றும் வாதப் பொருளாய்த் தொடரும் எமது சமுகத்தில் இனியாவது அதற்கான அர்த்தத்தைக் கண்டு கொள்வார்களா என்னும் ஏக்கத்தோடு இருக்கும் எமது உறவுகளுக்கு, இது என் அலசலுக்கான ஊந்துகோலும் சமர்ப்பணமும்.

பிரவேசம், அறிமுகம், சுவை புதிது, புதிய நாள், தொடர்கதை, அடுத்தநாள், பறக்க நினைத்த பட்சி, தொடர்ந்த சோதனை, மருத்துவக் கல்லூரி, அகப்பட்ட அபலைகள் ஆகிய 10 அத்தியாயங்களில் இக்குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. “தியாகிகள் துரோகிகள் என்பது இன்றும் வாதப் பொருளாய்த் தொடரும் எமது சமுகத்தில் இனியாவது அதற்கான அர்த்தத்தைக் கண்டு கொள்வார்களா என்னும் ஏக்கத்தோடு இருக்கும் எமது உறவுகளுக்கு, இது என் அலசலுக்கான உந்துகோலும் சமர்ப்பணமும்.” (ஆசிரியர்). தியாகலிங்கம் இலங்கையின் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1967 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை இரத்தினம், இரத்தினம் பரமேஸ்வரி ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை காரைநகர் யா/யாழ்ற்றன் கல்லூரியின் கனிஷ்ட பிரிவிலும், தொடர்ந்து சாதாரண தரத்தை யா/யாழ்ற்றன் கல்லூரியிலும், உயர்தரத்தை காரைநகர் இந்துக் கல்லூரியிலும் பயின்றவர். நோர்வேயில் மேற்கொண்டு படித்துக் கணினிப் பொறியியலாளரான இவர், அங்கிருந்து தனது எழுத்துப்பணியை 1987 தொடக்கம் ஆற்றிவருகின்றார்.

"https://tamilar.wiki/index.php?title=இரண்டகன்%3F&oldid=16239" இருந்து மீள்விக்கப்பட்டது