ஆலிசு மன்றோ
இயற்பெயர் | ஆலிசு மன்றோ Alice Munro |
---|---|
பிறப்புபெயர் | ஆலிசு ஆன் லெயிட்லோ |
பிறந்ததிகதி | 10 சூலை 1931 |
பிறந்தஇடம் | விங்கம், ஒண்டாரியோ, கனடா |
இறப்பு | 13 மே 2024 | (அகவை 92)
பணி | சிறுகதை எழுத்தாளர் |
கல்வி நிலையம் | மேற்கு ஒண்டாரியோ பல்கலைக்கழகம் |
வகை | சிறுகதை |
குறிப்பிடத்தக்க விருதுகள் | தலைமை ஆளுநரின் விருது (1968, 1978, 1986) கில்லர் பரிசு (1998, 2004) பன்னாட்டு புக்கர் பரிசு (2009) இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2013) |
துணைவர் |
|
பிள்ளைகள் | 4 |
ஆலிசு ஆன் மன்றோ (Alice Ann Munro, 10 சூலை 1931 – 13 மே 2024) என்பவர் ஓர் கனடிய எழுத்தாளர். இவர் 2013ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசையும், 2009ஆம் ஆண்டிற்கான மான் புக்கர் பன்னாட்டுப் பரிசையும் தனது படைப்புகளுக்காக வென்றவர். இவர் மும்முறை கனடாவின் புனைகதைக்கான ஆளுநர் விருதினை (Governor General's Award) வென்றுள்ளார்.[1][2] இவர் தனது படைப்புகளில் தென்மேற்கு ஒன்ராறியோவிலேயே அதிகம் மையப்படுத்தியிருக்கின்றார்.[3] இவர் புனைகதையின் மிக பெரிய சமகால எழுத்தாளர் என்றும் "கனடாவின் செக்கோவ்" என்றும் புகழப்படுள்ளார்.[4].82 வயதாகும் முன்ரோ கடந்த 40 ஆண்டுகளில் அவர் ஏராளமான இலக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.[5]
வாழ்க்கைக் குறிப்பு
இவரது தந்தையார் பெயர் லெயிட்லா ஒரு விவசாயி. தாய் அன்னி கிளார்க் ஒரு பள்ளி ஆசிரியை. ஆலிசு மன்ரோ தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார். இவரது முதல் கதையான ஒரு நிழலின் வடிவம் (The Dimensions of a Shadow) 1950 ஆம் ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது வெளியானது. அந்நேரத்தில் இவர் உணவு பரிமாறுபவராகவும், நூலக எழுத்தராகவும் பணியாற்றிக் கொண்டிருந்தார். மன்ரோ ஜேம்ஸ் என்பவரை 1951-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சீலா, கேத்தரின், ஜெனி ஆகிய குழந்தைகள் பிறந்தன. இதில் கேத்தரின் பிறந்த 15 மணி நேரதில் இறந்து விட்டார். 1963-இல் இத்தம்பதியினர் விக்டோரியா பகுதிக்கு குடிபெயர்ந்தனர். அங்கு மன்றோ புத்தகங்கள் (Munro's Books) என்ற புத்தகக் கடையைத் தொடங்கினர். அக்கடையானது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. 1966-இல் இவர்களுக்கு ஆண்ட்றா என்ற குழந்தை பிறந்தது. இவர்கள் 1972-ல் விவாகரத்து செய்தனர். பின்னர் மன்றோ ஜெரால்ட் பிரீம்லின் எனும் புவியியலாளரைத் திருமணம் செய்து கொண்ட்டர். பிரீம்லின் 2013 ஆம் ஆண்டு இறந்தார்.[6]
இறப்பு
மறதிநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஆலிசு மன்றோ 2024 மே 13 அன்று கனடாவில் ஒண்டாரியோவில் உள்ள அவரது வீட்டில் அவரது 92-ஆவது அகவையில் காலமானார்.[7][8]
மேற்கோள்கள்
- ↑ "The Nobel Prize in Literature 2013 - Press Release" (PDF). Archived from the original (PDF) on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.
- ↑ "Alice Munro wins Man Booker International prize". The Guardian. 27 மே 2009. http://www.guardian.co.uk/books/2009/மே/27/alice-munro-man-booker-international-prize.
- ↑ Marchand, P. (29 ஆகஸ்ட் 2009). "Open Book: Philip march and on Too Much Happiness, by Alice Munro". The National Post இம் மூலத்தில் இருந்து 2011-08-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110825143705/http://network.nationalpost.com/NP/blogs/afterword/archive/2009/08/29/open-book-philip-marchand-on-too-much-happiness-by-alice-munro.aspx. பார்த்த நாள்: 5 செப்டம்பர் 2009.
- ↑ Merkin, Daphne (24 அக்டோபர் 2004). "Northern Exposures". New York Times Magazine. http://www.nytimes.com/2004/10/24/magazine/24MUNRO.html. பார்த்த நாள்: 25 பெப்ரவரி 2008.
- ↑ "கனடாவை சேர்ந்த ஆலிக் மன்ரோவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு!". Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2013-10-10.
- ↑ "Gerald Fremlin (obituary)". Clinton News-Record. April 2013. http://www.yourlifemoments.ca/sitepages/obituary.asp?oId=700628. பார்த்த நாள்: 1 July 2013.
- ↑ "Alice Munro, Canadian author who won Nobel Prize for Literature, dies at 92" (in en-CA). The Globe and Mail. 2024-05-14. https://www.theglobeandmail.com/canada/article-alice-munro-death-author/.
- ↑ CBC Staff (14 May 2024). "Alice Munro, Canadian author who mastered the short story, dead at 92". CBC News (Toronto: கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்) இம் மூலத்தில் இருந்து 14 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240514204502/https://www.cbc.ca/news/canada/alice-munro-author-dead-obit-1.7203737.