பன்னாட்டு புக்கர் பரிசு
இணையம் | thebookerprizes |
---|---|
விருது வழங்குவதற்கான காரணம் | சிறந்த ஆங்கில (அல்லது ஆங்கில மொழி மாற்றத்திற்குரிய) நூல் |
நாடு | ஐக்கிய இராச்சியம் |
பன்னாட்டு புக்கர் பரிசு (International Booker Prize), முன்னதாக மான் புக்கர் பன்னாட்டுப் பரிசு (Man Booker International Prize) என்பது ஐக்கிய இராச்சியத்தில் பன்னாட்டளவில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளில் ஒன்றாகும். இது 2004 யூன் முதல், மேன் புக்கர் பரிசுடன் சேர்த்து பன்னாட்டுப் பரிசாக அறிமுகம் செய்யப்பட்டது.[1] மேன் குழுமத்தின் நிதியுதவியுடன், 2005 முதல் 2015 வரை, ஆங்கிலத்தில் வெளியிடப்பட்ட அல்லது பொதுவாக ஆங்கில மொழிபெயர்ப்பில் கிடைக்கும் ஒரு படைப்பிற்காக எந்தவொரு தேசிய இனத்தைச் சேர்ந்த எழுத்தாளருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்பட்டது.[2] இது ஒரு நூலாசிரியரின் "தொடர்ச்சியான படைப்பாற்றல், மேம்பாடு மற்றும் உலக அரங்கில் புனைகதைக்கான ஒட்டுமொத்த பங்களிப்பு",[3] அத்துடன் எந்த ஒரு தலைப்பையும் விட எழுத்தாளரின் பணிக்கான அங்கீகாரமாக இருந்தது.
2016 ஆம் ஆண்டு முதல், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஐக்கிய இராச்சியம் அல்லது அயர்லாந்தில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்திற்கு ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசினை வென்ற நூலுக்கு £50,000 வழங்கப்படுகிறது. இது எழுத்தாளருக்கும், மொழிபெயர்ப்பாளரிற்கும் இடையே சமமாகப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.[4][5]
சர் மைக்கேல் மோரிட்சு, அவரது மனைவி ஆரியட் எய்மன் ஆகியோரின் "கிரான்க்சுடார்ட்" என்ற தொண்டு நிறுவனம் புக்கர் பரிசுகளுக்கு 2019 சூன் 1 முதல் ஆதரவளித்து வருகிறது. இந்த நாளில் இருந்து இப்பரிசுகள் புக்கர் பரிசு, பன்னாட்டு புக்கர் பரிசு என்று அறியப்படுகிறது. புக்கர் பரிசு அறக்கட்டளைக்கும், பரிசுகளுக்கும் அவர்கள் அளித்த ஆதரவைப் பற்றி, மோரிட்சு பின்வருமாறு கருத்துரைத்தார்: "புத்தகத்தைப் படித்து நேரத்தைச் செலவிடாத ஒரு நாளை நம்மால் யாரும் நினைத்துப் பார்க்க முடியாது. புக்கர் பரிசுகள் என்பது சிறந்த புனைகதையிலிருந்து வரும் நுண்ணறிவு, கண்டுபிடிப்புகள், இன்பங்களைப் பற்றிய செய்திகளைப் பரப்புவதற்கான வழிகள்".
வரலாறு
2016 இற்கு முன்னர்
ஆண்டு | ஆசிரியர் | நாடு | மொழிபெயர்ப்பாளர் | மொழி |
---|---|---|---|---|
2005 | இசுமைல் காதர் | அல்பேனியா | - | அல்பேனியம் |
2007 | சினுவா அச்சிபே | நைஜீரியா | - | ஆங்கிலம் |
2009 | ஆலிசு மன்ரோ | கனடா | - | ஆங்கிலம் |
2011 | பிலிப் ரொத் | ஐக்கிய அமெரிக்கா | - | ஆங்கிலம் |
2013 | லிடியா டேவிசு | ஐக்கிய அமெரிக்கா | - | ஆங்கிலம் |
2015 | லாசுலோ கிராசுனகோர்க்காய் | அங்கேரி | சியார்ச் சர்ட்டெசு, ஒட்டிலி முல்செத் | அங்கேரியம் |
2016 முதல்
ஆண்டு | ஆசிரியர் | நாடு | மொழிபெயர்ப்பாளர் | நாடு | படைப்பு | மொழி |
---|---|---|---|---|---|---|
2016 | கான் காங் | தென் கொரியா | தெபோரா சிமித் | ஐக்கிய இராச்சியம் | The Vegetarian (채식주의자) சைவம் |
கொரியம் |
2017 | டேவிட் கிராஸ்மன் | இஸ்ரேல் | யெசிக்கா கோகென் | இசுரேல்/ஐக்கிய இராச்சியம்/அமெரிக்கா | A Horse Walks Into a Bar (סוס אחד נכנס לבר) ஒரு குதிரை மதுக்கடைக்குள் நுழைகிறது |
எபிரேயம் |
2018 | ஓல்கா தோக்கர்சுக்கு | போலந்து | செனிபர் குரொப்ட் | ஐக்கிய அமெரிக்கா | Flights (Bieguni) துருவங்கள் |
போலியம் |
2019 | ஜோஹா அல்-ஹார்தி | ஓமான் | மாரிலின் பூத் | ஐக்கிய அமெரிக்கா | Celestial Bodies (سـيّـدات الـقـمـر، روايـة) நிலாவின் பெண்கள், ஒரு புதினம் |
அரபு |
2020 | மரீக்கி லூக்கசு ரிச்னவெல்டு | நெதர்லாந்து | மிசேல் அட்சிசன் | ஐக்கிய இராச்சியம் | The Discomfort of Evening (De avond is ongemak) மாலை நேரம் சிரமமாக உள்ளது |
இடச்சு |
2021 | தாவீது தியொப் | பிரான்சு | அன்னா மொசுக்கோவாக்கிசு | ஐக்கிய அமெரிக்கா | At Night All Blood Is Black (Frère d'âme) ஆன்மாவின் சகோதரர் |
பிரெஞ்சு |
2022 | கீதாஞ்சலி சிறீ | இந்தியா | டெய்சி ராக்வெல் | ஐக்கிய அமெரிக்கா | Tomb of Sand (रेत समाधि) மணல் கல்லறை |
இந்தி |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ "Readers debate world Booker prize". BBC News. 20 December 2004. http://news.bbc.co.uk/1/hi/entertainment/4112179.stm.
- ↑ Crerar, Simon (27 May 2009). "Alice Munro announced as Man Booker International Prize winner". தி டைம்ஸ். http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/books/article6371639.ece.
- ↑ "Spark heads world Booker nominees". BBC News. 18 February 2005. http://news.bbc.co.uk/1/hi/entertainment/4277897.stm.
- ↑ "The Booker Prizes". Booker Prize Foundation.
- ↑ Sarah Shaffi (7 July 2015). "'Reconfiguration' of Man Booker International Prize". The Bookseller. பார்க்கப்பட்ட நாள் 8 July 2015.