மான் ஆசிய இலக்கியப் பரிசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மான் ஆசிய இலக்கியப் பரிசு
இணையம் http://www.manasianliteraryprize.org/
விளக்கம் ஆசிய நாடுகளின் குடிமகன் ஒருவர் ஆங்கிலத்தில் படைக்கும் சிறந்த புதினம்.
இடம் ஆசியா (மட்டும்)

மான் ஆசிய இலக்கியப் பரிசு (Man Asian Literary Prize), ஒவ்வொரு ஆண்டும் ஆசிய நாடுகளின் குடிமகனொருவரால் முந்தைய ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட ஆங்கிலத்தில் நேராக எழுதிய அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சிறந்த புதினத்திற்கு 2007ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.[1] பின்வரும் 34 நாடுகளின் குடிகளும் வசிப்போரும் இந்தப் பரிசு பெற தகுதியுடையவராவர்: ஆப்கானித்தானம், வங்காளதேசம், பூடான், கம்போடியா, கிழக்கு டிமோர், இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கசக்கசுத்தான், கிரிக்கிசுத்தான், யப்பான், லாவோசு, மலேசியா, மங்கோலியா, மியான்மர், நேபாளம், வடக்கு கொரியா, பாக்கித்தான், பப்புவா நியூகினி, பிலிப்பைன்சு, சிங்கப்பூர், தெற்கு கொரியா , இலங்கை , தாய்வான், தசிக்கிசுத்தான், தாய்லாந்து, ஆங்காங் அல்லது மகாவ் , மாலத்தீவுகள், சீனா மக்கள் குடியரசு, துருக்கி, துர்க்மெனிசுத்தான், உசுபெக்கித்தான், வியத்நாம்.[1][2] ஒவ்வொரு ஆண்டும் ஆகத்து 31ஆம் நாளுக்குள் பதிப்பாளர்கள் தங்கள் இரு புதினங்களை சமர்பிக்க வேண்டும். மே மாதத்திலிருந்தே விண்ணப்ப படிவங்கள் கிடைக்கின்றன.

மான் ஆசிய இலக்கியப் பரிசு பெற்ற படைப்பாளிக்கு $ 30,000உம் மொழிபெயர்ப்பாளருக்கு (எவரேனும் இருந்தால்) $ 5,000 உம் பணமாக வழங்கப்படுகிறது .[1] முதல் மூன்றாண்டுகளில் (2007 முதல் 2009 வரை) இந்தப் பரிசுத்தொகை அமெரிக்க டாலர் 10,000ஆகவும் 3000ஆகவும் இருந்தது; மேலும் பதிப்பிக்கப்படாத புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. படைப்பாளிகளே இந்தப் பரிசிற்கு விண்ணப்பித்தனர். இம்முறை 2010ஆம் ஆண்டிலிருந்து நடைமுறை சிக்கல்களால் மாற்றப்பட்டது.[3] மான் ஆசிய இலக்கியப் பரிசு “ஆசிய எழுத்தாளர்களின் சிறந்த ஆங்கிலப் படைப்பை அறியத்தரவும் பன்னாட்டளவில் ஆசிய இலக்கியம் குறித்த விழிப்புணர்வையும் இரசனையையும் கூட்டவும் பங்காற்றுகிறது.”[1]

இந்தப் பரிசினை மான் புக்கர் பரிசினை புரக்கும் அதே மான் குழுமம் வழங்குகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "MAN ASIAN LITERARY PRIZE ANNOUNCES NEW FORMAT". Man Asian Literary Prize. Archived from the original on 2010-06-17. பார்க்கப்பட்ட நாள் 2010-04-28.
  2. Entry Rules பரணிடப்பட்டது 2011-04-23 at the வந்தவழி இயந்திரம். Man Asian Literary Prize. Retrieved 2011-05-17.
  3. 5/the-man-asian-literary-prize-switcheroo/ "The Man Asian Literary Prize Switcheroo", Doretta Lau, Wall Street Journal, Feb.15 2011

வெளியிணைப்புகள்