ஜோஹா அல்-ஹார்தி
ஜோஹா அல்-ஹார்தி | |
---|---|
பிறப்பு | ஜூலை 1978 (அகவை 45–46) ஓமான் |
தேசியம் | ஓமான் |
பணி | எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் |
அறியப்படுவது | மேன் புக்கர் சர்வதேச விருது 2019 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | நரிஞ்சா, சய்யிதத் எல்-கமர் |
ஜோஹா அல்-ஹார்தி (Jokha al-Harthi) ஓர் ஓமான் நாட்டின் எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவர் ஓமனிலும் இங்கிலாந்திலும் கல்விப் பயின்றார்.. எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் அரபு செவ்விலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தற்போது சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் அரபித் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1][2]
படைப்புகள்
அல்-ஹார்தி மூன்று சிறுகதைகள், மூன்று நாவல்கள் மற்றும் மூன்று சிறுவர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். மேலும் இவர் கல்வி பாடப்புத்தகங்கள் உருவாக்குவதிலும் இணைந்து செயல்பட்டுள்ளார். இவரது படைப்புகள் ஆங்கிலம், செர்பியா, கொரியா, இத்தாலி, செர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.[3]
விருதுகள்
அல்-ஹார்தியின் நரிஞ்சா என்ற நாவலுக்காக 2016 ஆம் ஆண்டு கலை, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்திற்கான சுல்தான் கபூஸ் விருது வழங்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இவரது சய்யிதத் எல்-கமர் என்ற படைப்பு ஜயித் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது. மேலும் இந்த படைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு மேன் புக்கர் சர்வதேச விருது பெற்றது.[4][5]
குறிப்புகள்
- ↑ "Man Booker International Prize 2019 winner announced" இம் மூலத்தில் இருந்து 2020-10-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201030193813/https://thebookerprizes.com/resources/media/pressreleases/man-booker-international-prize-2019-winner-announced.
- ↑ Starbush (2011-10-24). "the tanjara: start of 3rd ipaf nadwa with 8 emerging arab writers". http://thetanjara.blogspot.com/2011/10/start-of-3rd-ipaf-nadwa-with-8-emerging.html.
- ↑ "Archive.org" இம் மூலத்தில் இருந்து 2011-10-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111028204940/http://www.jokha.com/english/writer.html.
- ↑ "Scribner pre-empts second novel by Booker International winner Jokha Alharthi". http://www.bookbrunch.co.uk/page/free-article/scribner-pre-empts-second-novel-by-booker-international-winner-jokha-alharthi/.
- ↑ "Women dominate Man Booker International prize 2019 shortlist". https://www.irishtimes.com/culture/books/women-dominate-man-booker-international-prize-2019-shortlist-1.3854837.