தேவராஜ்-மோகன்

தேவராஜ் - மோகன் (Devaraj–Mohan) இந்திய திரையுலகில், முக்கியமாக தமிழ் மொழி திரைப்படங்களை இயக்கும் இரட்டையராக இருந்தார்கள். அவர்கள் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தரமான படங்களுக்காக அறியப்பட்டனர். இதனால் கிட்டத்தட்ட ஒவ்வொரு படத்திற்கும் மிகவும் நியாயமான லாபம் கிடைத்தது.

தேவராஜ்–மோகன்
பிறப்புதேவராஜ்
மோகன்
பணிதிரைப்பட இயக்குனர்கள்

நடிகர் சிவகுமார் இவர்களின் பெரும்பாலான படங்களில் கதாநாயகனாக நடித்தார். 1980 க்குப் பிறகு, இருவரும் பிரிந்தனர். அதற்குப்பிறகு எஸ். தேவராஜன் மட்டும் சில படங்களை இயக்கியுள்ளார். தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக மோகன் 2012 ஜனவரியில் இறந்தார்.

திரைப்பட பட்டியல்

ஆண்டு திரைப்படம் மொழி நடிகர்கள் குறிப்பு
1973 பொண்ணுக்கு தங்க மனசு தமிழ் சிவகுமார், விஜயகுமார், ஜெயசித்ரா, விதுபாலா
1974 கண்மணி ராஜா தமிழ் சிவகுமார், லட்சுமி (நடிகை), எம். என். ராஜம் [1]
1975 அன்பு ரோஜா தமிழ் ஆர். முத்துராமன், லதா
1975 உறவு சொல்ல ஒருவன் தமிழ் ஆர். முத்துராமன், சுஜாதா, பத்மப்ரியா
1976 உங்களில் ஒருத்தி தமிழ் சிவகுமார், சுஜாதா, ஜெய்கணேஷ்
1976 அன்னக்கிளி தமிழ் சிவகுமார், சுஜாதா (நடிகை), ஜெயலட்சுமி (நடிகை) [2]
1976 பாலூட்டி வளர்த்த கிளி தமிழ் விஜயகுமார், சிறீபிரியா, மேஜர் சுந்தரராஜன்
1976 உறவாடும் நெஞ்சம் தமிழ் சிவகுமார், சந்தரகலா
1977 கவிக்குயில் தமிழ் சிவகுமார், இரசினிகாந்து
1977 சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு தமிழ் சிவகுமார், ஸ்ரீதேவி
1978 வாழ நினைத்தால் வாழலாம் தமிழ் ஜெய்சங்கர், சிறீபிரியா, ஜெய தேவி
1978 சிட்டுக்குருவி தமிழ் சிவகுமார், சுமித்ரா, மீரா
1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி தமிழ் சிவகுமார், உன்னி மேரி
1979 பூந்தளிர் தமிழ் சிவகுமார், சுஜாதா, ஏ. ஆர். சீனிவாசன்
1979 சக்களத்தி தமிழ் சுதாகர், ஷோபா, அம்பிகா
1980 இளையராஜாவின் ரசிகை தமிழ் சிவசந்திரன், எம். ஜி. சி. சுகுமார், உன்னி மேரி, ஈ. வி. சரோஜா திரைப்படம் வெளிவரவில்லை
1980 ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது தமிழ் சிவகுமார், சரிதா
1980 கண்ணில் தெரியும் கதைகள் தமிழ் சரத் பாபு, சிறீபிரியா
1982 ஆயிரம் முத்தங்கள் தமிழ் சிவகுமார், ராதா தேவராஜ் மட்டும் இயக்கியது
1982 கவிதை மலர் தமிழ் மாதவி தேவராஜ் மட்டும் இயக்கியது
1985 ராஜாத்தி ரோஜாக்கிளி தமிழ் ராஜேஷ், சுரேசு, நளினி, சுலக்சனா தேவராஜ் மட்டும் இயக்கியது
1986 இசை பாடும் தென்றல் தமிழ் சிவகுமார், அம்பிகா, ரேகா தேவராஜ் மட்டும் இயக்கியது
1989 அன்னக்கிளி சொன்ன கதை தமிழ் சத்யராஜ், சுதாராணி தேவராஜ் மட்டும் இயக்கியது

மேற்கோள்கள்

  1. "Veteran Vijayakumar 50 years in cinema". Indiaglitz. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
  2. Vasudevan, Ravi (2000). Making Meaning in Indian Cinema. Oxford University Press. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195645456. பார்க்கப்பட்ட நாள் 25 December 2015.
"https://tamilar.wiki/index.php?title=தேவராஜ்-மோகன்&oldid=21072" இருந்து மீள்விக்கப்பட்டது