மாதவி (நடிகை)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மாதவி
Madhavi
பிறப்புவிசயலட்சுமி
12 ஆகத்து 1962 (1962-08-12) (அகவை 62)[1]
ஐதராபாத், தெலுங்கானா, இந்தியா
மற்ற பெயர்கள்மாதவி
செயற்பாட்டுக்
காலம்
1976-1996
வாழ்க்கைத்
துணை
ரால்ப் சர்மா (தி. 1996)
பிள்ளைகள்டிபானி சர்மா
பிறிசில்லா சர்மா
ஈவலின் சர்மா

மாதவி சர்மா (Madhavi Sharma) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் மற்றும் ஒரியா மொழிப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய 17 வருட நடிப்புத் தொழிலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு தொடங்கி 1996 ஆம் ஆண்டுவரை முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தார்.

இளமைப் பருவம்

இவர் 1962 ம் ஆண்டு ஆகத்து 12ம் திகதி இந்தியாவின் தெலுங்கானா, ஐதராபாத்து எனும் இடத்தில் பிறந்தார்.[2] இவர் கணவரின் பெயர் ரால்ப் சர்மா என்பது ஆகும். இவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் உண்டு. ரிப்பினி சர்மா, பிறிசில்லா சர்மா மற்றும் ஈவலின் சர்மா ஆகியோரே அம்மூவருமாவர். இவர்கள் மூவரும் நியூ ஜேர்சியில் வசிக்கின்றனர். மேலும் இவருக்கு கீர்த்தி குமாரி எனும் சகோதரியும் தனஞ்சய் எனும் சகோதரனும் உள்ளனர்[3]. இவர் பரதநாட்டியத்தை உமா மகேஸ்வரியிடமும் நாட்டுப்புறக் கலைகளை பட் ஆகியோரிடமும் கற்றார். மேலும் இவர் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் ஐதராபாத்தில் உள்ள ஸ்டன்லி பெண்கள் உயர் பாடசாலையில் கல்வி பயின்றார்.[4]

திரைத்துறையில்

தெலுங்கு

இவரின் பதின்ம பருவத்தில் தெலுங்கு மொழியில்  தசரி நாராயண ராவோவின் இயக்கத்தில் "தூருப்பு படமரா" எனும் படத்தில் நடித்தார்.[5] இப்படம்  வெற்றி பெற்றது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் 1982 ஆம் ஆண்டு முதன்முதலில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்த படம் இன்ட்லோ ராமையா வீடில்லோ கிருஷ்ணையா. பின்னர் மீண்டும் சிரஞ்சீவியுடன் கைதி எனும் படத்தில் இணைந்து நடித்தார். இப்படம் இவருக்கு பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தெலுங்கில் இவரது இறுதி படம் பிக் பாஸ் என்பதாகும்.

தமிழ்

இவர் கே. பாலச்சந்தரின் மரோ சரித்ரா எனும் படத்தில் துணை கதாபாத்திர வேடமேற்று நடித்தார். இப்படம் இந்தியில் ஏக் தூஜே கே லியே (1981) எனும் பெயரில் மீளுருவானது. இப்படம் 1981 ஆம் ஆண்டு பெரும் வருவாய் வசூலித்த படமாகவும் திகழ்ந்தது. மாதவி இவ்விரு படங்களிலும்  கமலஹாசனுடன்  இணைந்து நடித்திருப்பார். இப்படத்தில் இவருடைய நடிப்பிற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார்.[6] கே. பாலச்சந்தர் முதன்முதலில் தமிழ் திரையுலகிற்கு "தில்லு முல்லு" எனும் படத்தின் மூலம் இவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். இதில் ரசினிகாந்துடன் இணைந்து நடித்தார்.

மேலும் மாதவி கமலஹாசனுடன் "ராஜ பார்வை, டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம், எல்லாம் இன்பமயம் மற்றும் மங்கம்மா சபதம்" ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். மேலும் இவர் ரசினிகாந்த் நடிப்பில் வெளியான "கர்ஜனை, தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வடிந்தால் மற்றும் விடுதலை" ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாளம்

இவர் பல மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். பிரதானமாக மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி மற்றும் மோகன்லால் இருவருடன் இணைந்து நடித்துள்ளார். "ஒரு வடக்கன் வீர கதா" எனும் படத்தில் மிகவும் தத்ரூபமாக நடித்ததன் மூலம் தேசிய விருதையும் பெற்றார். "ஆகாசதூது" எனும் படத்தில் நடித்தமைக்காக கேரள அரசின்  மாநில விருதை சிறந்த இரண்டாம் நடிகைக்காக பெற்றார். மேலும் இப்படத்தில் நடித்தமையால்  1993ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான "பிலிம் பேர் " விருதுகளையும் பெற்றார். இப்படத்தில் இவர் புற்றுநோயுள்ள ஒரு தாயாக நடித்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கேரள அரசிடம் இருந்து 3 மாநில விருதுகளை பெற்றுள்ளார். அவற்றுள் ஒன்று சிறந்த நடிகைக்காகவும் மேலும் இரண்டு சிறந்த இரண்டாம் நடிகைக்காகவும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கன்னடம்

இவர் பல கன்னட மொழி படங்களிலும் நடித்தவராவார். பிரதானமாக கன்னட திரையுலகின் பிரபலமான நடிகர்களான  " ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், அன்னட் நக் மற்றும் அம்பரீஷ்  " ஆகியோர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் ராஜ்குமாருடன் இணைந்து நடித்த பல படங்கள் வர்த்தக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதுடன் பாராட்டுக்களையும் குவித்தன.

மேற்கோள்கள்

  1. "Madhavi Biography". Archived from the original on 2018-01-15. பார்க்கப்பட்ட நாள் 2019-01-07.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-08-15. பார்க்கப்பட்ட நாள் 2019-01-06.
  3. "Madhavi's Childhood". Archived from the original on 2013-01-14. பார்க்கப்பட்ட நாள் 2019-01-06.
  4. "Maadhavi". Maadhavi. Archived from the original on 25 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  5. "Maadhavi". Maadhavi. Archived from the original on 29 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 9 June 2012.
  6. 1st Filmfare Awards 1953

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாதவி_(நடிகை)&oldid=23167" இருந்து மீள்விக்கப்பட்டது