ஜாகுவார் தங்கம்

தங்கபழம் (பிறப்பு: 6 சூன் 1954 ) ஜாகுவார் தங்கம் என்ற திரைப் பெயரைக் கொண்ட சண்டைப் பயிற்சியாளராவார். இவர் இந்தியத் திரைப்படத்துறையில் பெரும்பாலும் அனைத்து பிராந்திய மொழிகளிலும் பணிபுரிந்தவர் என்றாலும் முதன்மையாக தமிழகத் திரைப்படத்துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தன் ஆறு வயதில் சிலம்பத்தை கற்கத் தொடங்கினார். இவருக்கு 1978 இன் நடுவில் மலையாள இயக்குனர் திரு. சந்திரகுமார் ஜாகுவார் தங்கம் என்று பெயரிட்டார். சந்திரகுமாரின் இந்தி நாடகமான மீனா பஜார் (1978) இல் சண்டைப் பயிற்சியாளராக அறிமுகமானதைத் தொடர்ந்து, இவரது சண்டைப் பயிற்சியாளர் பணியானது திரைப்படத் துறையில் துவங்கியது.

ஜாகுவார் தங்கம்
Jaguar Thangam.jpg
ஜாகுவார் தங்கம்
பிறப்புதங்கபழம்
6 சூன் 1954 (1954-06-06) (அகவை 70)
இந்தியா, தமிழ்நாடு, தூத்துக்குடி
பணி
செயற்பாட்டுக்
காலம்
1978–present
வாழ்க்கைத்
துணை
சாந்தி ஜாகுவார் தங்கம் (1984–தற்போது வரை)
பிள்ளைகள்
விருதுகள்சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது

ஜாகுவார் தங்கத்தை துவக்கத்தில் கண்டறிந்தவர் எம்.ஜி.ஆர் ஆவார். தற்போது வரை ஜாகுவார் தங்கம் இந்தியாவில் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் 1000+ படங்களை முடித்துள்ளார். ஜாகுவார் தங்கம் ஐந்து தமிழ் திரைப்படங்களுக்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நான்கை வென்றுள்ளார் . சண்டைப் பயிற்சியைத் தாண்டி இவர் திரைப்பட நடிகர்,[1][2] தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சண்டைப் பயிற்சியாளர் பணி வாழ்க்கையைத் தவிர, சமூக செயல்பாடுகள் மற்றும் அரசியல் சூழலில் ஆர்வம் கொண்டவராக உள்ளார்.

இப்போது ஜாகுவார் தங்கம் தமிழ்நாட்டின், சென்னை, தியாகரய நகரில் அமைந்துள்ள தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களின் கில்ட் நிறுவனத்தின் செயலாளராக உள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

ஜாகுவார் தங்கம் தமிழ்நாட்டின், தூத்துக்குடி, கொம்மடிக்கோட்டையில் 6 சூன் 1954 இல் பிறந்தார் .[சான்று தேவை] இவரது தாயார் சின்னம்மாள் ஒரு இல்லத்தரசி, இவரது தந்தை எஸ். கே. பால்பாண்டியன் நாடார் ஒரு நில உரிமையாளர் மற்றும் விவசாயி ஆவார்.[சான்று தேவை] இவருக்கு தங்க பழம் நாடார் என்று பெயரிடப்பட்டது. இவர்தான் குடும்பத்தில் இளையவர். இவருக்கு நான்கு அண்ணன்கள் மற்றும் நான்கு அக்காக்கள்கள் உண்டு.[சான்று தேவை] இவர் தனது குழந்தை பருவத்தில், தனது தாயை இழந்தார்.[சான்று தேவை] அதன்பிறகு ஜாகுவார் தங்கத்தின் வளர்ச்சியில் அவரது அக்காள் சக்திக் கனி மற்றும் அவரது கணவர் ஜெயராஜ் நாடார் கவனம் செலுத்தினார்கள்.[சான்று தேவை]

ஆரம்ப கால வாழ்க்கையில்

படிமம்:Jaguar Thangam@40.jpg
ஜாகுவார் தங்கம் தனது 40 வயதில்

ஜாகுவார் தங்கம் சிலம்பத்தை தன் ஆறு வயதில் கற்கத் தொடங்கினார். அன்றிலிருந்து இப்போது வரை 27 தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற ஒரே நபர் இவர் தான்.[3]

திருச்சியில் உள்ள வெல்ல மண்டியில் தனது பத்தொன்பது வயதில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான ம. கோ. இராமச்சந்திரன் முன்னிலையில் தனக்கு சிலம்பத்தில் உள்ள திறமையைக் காட்டினார். இதன்பிறகு இவரின் சண்டைப் பயிற்சிக்கலையை மேம்படுத்த சென்னைக்கு அழைத்துச் சென்றார். ஜாகுவார் தங்கம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எம்ஜியாருடன் சென்று தன்னை வடிவமைத்துக் கொண்டார். இவர் தச்சிணாமூர்த்தி ஆச்சாரியரிடமிருந்து சண்டைப் பயிற்சிக் கலையை கற்கத் தொடங்கினார், பின்னர் டோனி பொன்னையா என்பவரிடமிருந்து சீன பாணியிலான சிட்டோரியன் கலையில் தேர்ச்சி பெற்றார். ஜாகுவார் தங்கம் தமிழ்நாட்டின் மேற்கு பிராந்திய மலைகளில் மட்டுமே வசித்து வந்த சில சித்தர்களிடமிருந்து ஆயுர்வேதத்தைக் கற்றுக்கொண்டார்.[சான்று தேவை]

திரைப்பட வாழ்க்கை

ஜாகுவார் தங்கம் 1978 ஆம் ஆண்டில் இந்தி திரைப்படமான மீனா பஜார் படத்தில் சண்டைப் பயிற்சியாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தொடர்ந்து இவர் இந்தியில் 87 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுளார். அங்கு இவர் மூத்த நடிகர் மிதுன் சக்கரவர்த்தியுடன் 17 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

பிரபல தமிழ் நடிகரான விசயகாந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி என்ற திரைப்படத்தில் சண்டைக் கலைஞராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். தமிழ் திரைப்படமான வைகாசி பொறந்தாச்சு படத்தில் சண்டைப் பயிற்சியாளராக தமிழ் திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இரசினிகாந்து ஒரே ஹாலிவுட் திரைப்படமான பிளட் ஸ்டோன் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் பணியாற்றினார். மூத்த நடிகர் கமல்ஹாசனுடன் மகராசன் படத்தில் பணியாற்றினார்.

தற்போது வரை ஜாகுவார் தங்கம் இந்தியத் திரைப்படத்துறையில் கிட்டத்தட்ட எல்லா மொழிகளிலும் 1000 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

பின்வரும் சண்டை பயிற்சியாளர்கள் ஜாகுவார் தங்கத்தின் மாணவர்கள்: பீட்டர் ஹீன், அனல் அரசு, கே. கணேஷ் குமார், ஸ்டண்ட் சில்வா, எஸ். ஆர். முருகன், நாக் அவுட் நந்தா ஆகியோராவர்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஜாகுவார் தங்கம் சாந்தி என்பவரை மணந்தார். சாந்தியின் பூர்வீகம் தூத்துக்குடி மாவட்டத்தில், புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள சக்கம்மாள்புரம் என்றாலும் சென்னையில் 24 செப்டம்பர் 1963 இல் பிறந்தார். அவருக்கு எம். ஜி. ஆரால் பெயர் சூட்டப்பட்டது.[4] இவர்களின் திருமணம் 1984 செப்டம்பர் 9 அன்று சென்னையின் தியாகராய நகரில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த தம்பதிக்கு விஜய சிரஞ்சீவி மற்றும் ஜெய் ஜே. ஜாகுவார் என்ற இரு மகன்கள் உள்ளனர். இருவரும் சண்டைப் பயிற்சியாளர்களாகவும், நடிகர்களாகவும் தமிழ் சினிமாவில் இயங்கிவருகின்றனர். விஜய் சிரஞ்சீவி தனது தந்தை இயக்கிய சூர்யா (2008) படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.[5]

திரைப்படவியல்

படங்கள் 
தொலைக்காட்சி

இயக்குனர்

நடிகர்

விருதுகள்

வென்றது
  • 1996 சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது - பூமணி
  • 1998 சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது - பிரியமுடன்
  • 2002 சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது - பகவதி

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஜாகுவார்_தங்கம்&oldid=21283" இருந்து மீள்விக்கப்பட்டது