எல்லாம் வல்ல சித்தரான படலம்
எல்லாம் வல்ல சித்தரான படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் 20-ஆவது படலமாகும்.(செய்யுள் பத்திகள்: 1333- 1356)[1] இப்படலம் நான் மாடக்கூடலான படலம் என்பதன் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.
சுருக்கம்
இறைவன் அபிசேகப் பாண்டியனுக்கு முக்தி அளிக்க எண்ணி மதுரைக்கு எல்லாம் வல்ல சித்தராக உருமாறி வந்தார். காணும் மக்களிடம் தன்னுடைய சித்தால் பலவித அற்புதங்களைச் செய்தார். மண்ணை பொன்னாக்குதல், முதியவனை இளைஞனாக்குதல், இளைஞனை முதியவனாக்குதல், ஊனத்தினைக் குணம் செய்தல் என அற்புதங்கள் தொடர்ந்தன. மக்கள் மீனாட்சியம்மன் சொக்கநாதர் கோயிலில் இருக்கும் சித்தரைக் காணக் கூட்டம் கூட்டமாக வந்தனர். வந்தவர்கள் அனைவரும் சித்தரின் சித்தால் அதிசயித்துப் போயினர்.
எல்லாம் வல்ல சித்தரின் பெருமைகள் மன்னரின் கவனத்திற்குச் சென்றன. அவர் மந்திரிகளை அனுப்பி எல்லாம் வல்ல சித்தரை அழைத்து வரும்படி கட்டளையிட்டார். ஆனால் எல்லாம் வல்ல சித்தரை மக்களே காண வேண்டும் என்றும், தான் அரசனைக் காண அங்கு வரமுடியாது என்றும் சித்தர் கூறிவிட்டார். அவருக்குத் துணையாக மக்களும் இருந்தார்கள். மன்னரிடம் இதனைத் தெரிவிக்க அமைச்சர்கள் சென்றார்கள்.[2]
காண்க
ஆதாரங்கள்
- ↑ "பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் (திருவாலவாய் மான்மியம்) இரண்டாவது - கூடற் காண்டம் - பாகம் 2 ( படலம் 35-42): 28. நாகமெய்த படலம் (1603 - 1625)". மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம். 1998-2014. http://www.infitt.org/pmadurai/pm_etexts/utf8/pmuni0474_02.html. பார்த்த நாள்: 11 செப்டம்பர் 2016.
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2259
வெளி இணைப்புகள்
- மூன்றாவது - திருவாலவாய்க் காண்டம் பரணிடப்பட்டது 2016-09-21 at the வந்தவழி இயந்திரம்