மொழியா வலிகள் பகுதி-4
நூலாசிரியர் | இ. தியாகலிங்கம் |
---|---|
பதிப்பாசிரியர் | இ. தியாகலிங்கம் முதற் பதிப்பு |
குரல் கொடுத்தவர் |
கஸ்தூரி |
உண்மையான தலைப்பு |
மொழியா வலிகள் 4 |
செயற்பாட்டிலுள்ள தலைப்பு |
மொழியா வலிகள் 4 |
நாடு | நோர்வே |
மொழி | தமிழ் |
வெளியீட்டு எண் |
1 |
பொருண்மை | குடும்ப வாழ்க்கை , அரசியல் |
வெளியிடப்பட்டது | Aug 8, 2018 முதலாவது பதிப்பு |
ஊடக வகை |
புத்தகம், ஒலிப்புத்தகம் |
பக்கங்கள் | 282 |
பன்னாட்டுத் தரப்புத்தக எண் |
9781667156767 |
முன்னைய நூல் |
காமமே காதலாகி |
அடுத்த நூல் |
புத்தரின் கடைசிக் கண்ணீர் |
வருங்காலச் சந்ததிக்கும் நாம் கடந்து வந்த பாதையில் சிலவற்றைப் பார்ப்பதற்கு ஒரு காலதர் தேவைப்படுகிறது. பேசா அந்தப் பொருளை, அழியா அந்த இரணத்தை, மொழியா அந்த வலிகளை நான் இங்கு மீண்டும் மொழிய முனைகிறேன். அதற்கான காலதரை முழுமையாகத் திறக்க முடியாவிட்டாலும் ஒரு சிறிதளவேனும் திறக்க வேண்டும் என்கின்ற என் முயற்சி இது. எதிர்ப்புக்குத் தலை பணியாத உண்மைகள் அதனூடே தெரிய வேண்டும் என்கின்ற என் அவா.
நாவலின் நான்காம் பாகத்தில் பிறந்த நாள், சுதி மாறிய இராகம், சண்முகன் சரணடைந்தான், பூவும் புனிதமும், தடம் ஏறிய வண்டி, வடக்கின் பறவைகள், சிவ தரிசனம், திசையில்லாப் பயணம், பல்லுக் கொழுக்கட்டை, நகரத்தின் ஆபத்து, நிமலன் வீட்டுத் திருவிழா, வளர்ச்சிக் கோர்மோன், திருநாளைப் போவார்கள், சரிஸ்காவின் சன்னியாசம், இறக்கை முளைத்த கிளிகள், விதியின் வலிய கரங்கள், திருந்தாப் பார்வை, கற்கால மதங்களின் நவீன வாழ்விடங்கள், அனாமோதய அப்பா, ஒன்று பலதாகி பலது ஒன்றாகி, சுனாமியான மூச்சடைப்பு, கடற்கரையில், பேய்கள் அரசாண்டால், நான் என்பதால் அழிந்த நாம், அகத்தைத் தின்ற அதிர்ச்சி, சுகந்தி, நிமலனும் தேவியும், மீண்டும் ஆரம்பித்த அநர்த்தம், மாறிய கோலங்கள், இங்கும் கலவரம், பற்றிய வீடு, தைப்பொங்கல், ஓயாத ஒப்பாரி ஆகிய 33 அத்தியாயங்களில் நான்கு பாகங்கள் கொண்ட இந்நாவல் முடிவுக்கு வந்துள்ளது.