மேருவைச் செண்டாலடித்த படலம்
மேருவைச் செண்டாலடித்த படலம் திருவிளையாடற் புராணத்தில் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பதினைந்தாவது படலமாகும்.
இப்படலத்தில் உக்கிர பாண்டியன் சோமசுந்தரப் பெருமானின் உபதேசப்படி மகா மேரு மலையை செண்டால் அடித்து அதன் கால தாமதத்தைத் தடுத்து அதன் மூலம் பொன், பொருள் பெற்ற திருவிளையாடல் கூறப்படுகிறது.
திருவிளையாடல்
உக்கிர பாண்டியன் அகத்தியர் ஓதிய சோமவார விரதத்தை தவறாமல் அனுட்டித்து வந்தார். ஆயினும் கோள்நிலை மாறுபட்டால் பாண்டிய நாட்டில் பெரும் பஞ்சம் நிலவியது. மனம் நொந்திருந்த பாண்டியன் கனவில் சோமசுந்தரப்பெருமான் தோன்றி "அன்பரே! மகாமேரு மலையின் பக்கத்தில் ஒரு பெரிய குகையில் அளவற்ற செல்வம் இருக்கிறது. அம்மலையைச் செண்டாலடித்துச் செருக்கடக்கி செல்வத்தைக் கொண்டுவாரும்" என அருளினார்.
உக்கிர பாண்டியன் நால்வகைச் சேனைகளையும் திரட்டி மேருவை அடைந்தான். தென் திசை சென்று அழைத்தான். து அசையவில்லை. அதன் சிகரத்தில் செண்டினால் அடித்தான். எட்டுப் புயங்களும் நான்கு தலைகளும் ஒரு வெள்ளைக் குடையும் கொண்ட உருவத்துடன் மேருமலை பாண்டியனை வந்து வணங்கியது. சோமசுந்தரரை வணங்க மறந்து கிடந்த தன்னைத் தட்டியெழுப்பயதற்குப் பிரதி உபகாரமாய் என்ன வேண்டும் எனக் கேட்டது.
மன்னன் விரும்பிக்கேட்ட பொன்னை எடுத்துச் செல்ல வழிகாட்டியது.