மலயத்துவசனை அழைத்த படலம்
Jump to navigation
Jump to search
மலயத்துவசனை அழைத்த படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் நூலின் மதுரைக் காண்டத்தில் வருகின்ற பத்தாவது படலமாகும்.
படலச் சுருக்கம்
இப்படலம் ஏழுகடல் அழைத்த படலத்தின் தொடர்ச்சியாக அமைந்துள்ளது. மீனாட்சியின் அன்னை காஞ்சனை மாலைக்கு ஏழுகடல்களை வருவத்து தந்தபின், கணவனை இழந்தவள் என்பதால் சாஸ்திரப்படி கணவனுடன் நீராட இயலாமல் இருந்தவளுக்கு சிவபெருமான் சொர்க்கத்திலிருந்து மலயத்துவ பாண்டியனை வருவித்தலை இப்படலம் விளக்குகிறது.