திருநகரங் கண்ட படலம்
திருநகரங் கண்ட படலம் என்பது சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்கும் திருவிளையாடல் புராணம் நூலின் மூன்றாவது படலமாகும்.
கடம்ப மரங்கள் நிறைந்த கடம்ப வனமாக இருந்த இடத்தில் இந்திரன் சிவபூசை செய்தார். இந்திரனின் வாகனமான வெள்ளையானையும் அவ்வாறே சிவபூசை செய்து சாபவிமோசனம் பெற்றது. அதனால் இந்திரன் உருவாக்கிய கோயிலில் ஐராவதம் அமைந்த விமானமும் உருவானது. அவ்விடத்தில் தனஞ்செயன் எனும் சிவபக்தர் கடம்பவனத்தில் தங்க நேர்ந்த பொழுது இந்திரன் கட்டிய ஆலயத்தினை தரிசித்தார். அங்கு தேவர்கள் இலிங்கத்தினை பூசை செய்வது குறித்து குலசேகரப் பாண்டியனிடம் தெரிவித்தார்.
பாண்டிய மன்னரின் கனவில் வந்த சிவபெருமான் அந்த கோவிலை சுற்றி அழகிய நகரை உருவாக்குமாறு பணித்தார். மன்னர் நகரை உருவாக்கியப் பிறகு சிவபெருமான் தோன்றி தன்னுடைய சடாமுடியிலிருக்கும் சந்திரனிலிருந்து மதுரத்தினை சிந்தி, அதன் மூலம் நகரை ஒளிபெற செய்தார். இதனால் உருவாக்கப்பட்ட நகரம் மதுரை எனப்பட்டது.