சிவகிரி வட்டம்
Jump to navigation
Jump to search
சிவகிரி வட்டம் , தமிழ்நாட்டின் [தென்காசி மாவட்டம்|தென்காசி மாவட்டத்தின்]] 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இந்த வட்டத்தின் தலைமையகமாக சிவகிரி நகரம் உள்ளது. இவ்வட்டத்தில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.
இந்த வட்டத்தின் கீழ் என வாசுதேவநல்லூர், சிவகிரி, கூடலூர் என 3 குறுவட்டங்களும், 21 வருவாய் கிராமங்களும் உள்ளன.[3]
மக்கள்தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது:[4]
- மக்கள்தொகை = 194,156
- ஆண்கள் = 95,537
- பெண்கள் = 98,619
- குடும்பங்கள் = 54,421
- கிராமப்புற மக்கள்தொகை % = 37.3%
- எழுத்தறிவு = 73.58%
- பாலின விகிதம் = 1,000 ஆண்களுக்கு, 1,032 பெண்கள் வீதம் உள்ளனர்
- 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் = 19341
- குழந்தைகள் பாலின விகிதம் = 1000 ஆண் குழந்தைகளுக்கு, 977 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.
- பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் = 47,215 மற்றும் 930
சமயம்
- இந்துக்கள் = 85.35%
- இசுலாமியர்கள் = 8.74%
- கிறித்தவர்கள் = 5.77%
- பிறர்= 0.14%