சர்வ உரூபிகரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சர்வ உரூபிகரம்
சர்வ உரூபிகரம்
நூலாசிரியர் இ. தியாகலிங்கம்
பதிப்பாசிரியர் இ. தியாகலிங்கம்
முதற் பதிப்பு
குரல்
கொடுத்தவர்
கஸ்தூரி
உண்மையான
தலைப்பு
சர்வ உரூபிகரம்
செயற்பாட்டிலுள்ள
தலைப்பு
சர்வ உரூபிகரம்
நாடு நோர்வே
மொழி தமிழ்
வெளியீட்டு
எண்
2
பொருண்மை அரசியல்
வகை புனைவு
வெளியிடப்பட்டது May 6, 2016
முதலாவது பதிப்பு
ஊடக
வகை
புத்தகம், ஒலிப்புத்தகம்
பக்கங்கள் 170
பன்னாட்டுத்
தரப்புத்தக
எண்
9781326647995
முன்னைய
நூல்
மானிடம் வீழ்ந்ததம்மா
அடுத்த
நூல்
அரங்கத்தில் நிர்வாணம்


ஈழப்போராட்டம் தமிழரின் இருப்பை ஈழத்தில் வலுவேற்றவில்லை என்பது எனது தாழ்மையான எண்ணம். வலுவேற்றியதாகக் கூறுபவர்கள் எமது இனத்தின் இன்றை இருப்பைப் பற்றிய யதார்த்தத்தை உள்வாங்காதோர். சிங்கள அரசின் நீண்டகாலத் திட்டத்தை நிறைவேற்றியது எமது ஆயுதப் போராட்டம் என்கின்ற எண்ணம் என்னிடம் உண்டு. ஆழ்ந்து சிந்திக்கும் போது அது புலப்படும். ஜெ.ஆர் ஜெவர்த்தனே அகதிகளாய்த் தமிழரை நாட்டைவிட்டு வெளியேற அனுமதித்ததன் சூட்சுமம் இன்றும் புரியாதவர்கள் உண்டோ? யூதர்கள் நாடொன்று அமைத்து அங்கே செறிந்து தங்கள் இருப்பைப் பலப்படுத்தினர். நாங்கள் நாட்டைவிட்டு ஓடி எமது இருப்பைப் பலவீனப்படுத்தினோம். மீதம் இருந்தவர்களையும் போராட்டம் என்கின்ற பெயரில் அழித்தோம். போராளிகளும், அரசியல்வாதிகளும் நாட்டைவிட்டு ஓடுவதற்கு எம்மை ஊக்குவித்தார்கள். அதில் வருவாய் தேடினார்கள். எங்கள் இருப்பு ஈழத்தில் இன்று கேள்விக்குறியே. இப்போது புலம்பெயர்ந்தவர்களின் வரலாற்றுக் கடமை என்ன?

புலிகள் என்றும் விமர்சனத்திற்கு உட்படாதவர்கள் என்பது பலரின் எண்ணம். இந்த நாவல் புலிகளை விமர்சனம் செய்வதை நோக்காகக் கொண்டதல்ல. புலிகளின் பெயரைப் பயன்படுத்தி வெளிநாட்டில் வாழ்ந்த பினாமிகள் செய்த சில கூத்துக்களின் சிறிய அம்பலம் இது. அதுவும் ஒருகோணத்தில் இருந்து பார்க்கப்பட்டது. இதற்கு மறுகோணங்கள் இல்லை என்பது ஆசிரியரது வாதமில்லை. அப்படியான பார்வைகளும், பதிவுக்கு வரவேண்டும் என்பதே அவரது விருப்பம். போராட்டம் நடக்கும் போது வைக்கப்படும் விமர்சனம் போராட்டத்தை நலிவுறுத்தும் என்பதை தனது கருத்தில் வைத்திருந்த ஆசிரியர் தற்போது புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்துவிட்ட நிலையில் தன் கருத்துக்களை எதிர்காலப் பாதையை செப்பமிடும் வகையில் தன் பாத்திரங்களின் ஊடாக முன்வைக்கிறார். ஈழம் என்பது கனவாகிவிட்டது. இனி ஆயுதப் போராட்டம் என்பதே மீண்டும் வரக்கூடாது. இருந்தும் உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டும் என்பது இந்நாவலாசிரியரின் நிலைப்பாடாக உள்ளது.

"https://tamilar.wiki/index.php?title=சர்வ_உரூபிகரம்&oldid=16221" இருந்து மீள்விக்கப்பட்டது