கே. ராஜலிங்கம்
Jump to navigation
Jump to search
கே. ராஜலிங்கம் என அழைக்கப்பட்ட காளிமுத்து ராஜலிங்கம் (Kalimuthu Rajalingam, திசம்பர் 3, 1909 – பெப்ரவரி 11, 1963) இலங்கையின் மலையகத் தமிழ் அரசியல்வாதியும், தொழிற்சங்கத்தலைவரும், தமிழ் செயற்பாட்டாளரும் ஆவார்.[1][2]
ராஜலிங்கம் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்ற இலங்கையின் 1-வது நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் நாவலப்பிட்டி தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] இத்தேர்தலில் இலங்கை தொழிலாலர் காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏழு உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[4]
கல்கி ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தி இலங்கை வந்திருந்த போது ராஜலிங்கத்திற்கு 'மலையக காந்தி' என்ற பட்டம் சூட்டி, அவருடைய படத்தை 1950 செப்டம்பர் 10 கல்கி இதழில் அட்டைப் படமாக பிரசுரித்துக் கட்டுரை எழுதினார்.
மேற்கோள்கள்
- ↑ "Hon. Rajalingam, Kalimuthu, M.P.". Directory of Past Members (இலங்கை நாடாளுமன்றம்). https://www.parliament.lk/en/members-of-parliament/directory-of-past-members/viewMember/2572. பார்த்த நாள்: 8 October 2017.
- ↑ Peebles, Patrick (2015). Historical Dictionary of Sri Lanka. Rowman & Littlefield. பக். 157. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781442255852.
- ↑ "Result of Parliamentary General Election 1947". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 14 ஜூன் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210614074838/http://www.slelections.gov.lk/web/images/pdf/general-election-results/general-election-1947.pdf. பார்த்த நாள்: 18 September 2017.
- ↑ de Silva, Lakshmi (2 சூன் 2009). "Indian Tamils and Prabakaran’s Eelam: Seeking Tamil Nadu’s refuge after its betrayal". டெய்லி நியூசு. http://archives.dailynews.lk/2009/06/02/fea40.asp. பார்த்த நாள்: 6 அக்டோபர் 2017.