டிக்கிரி பண்டா சுபசிங்க
டிக்கிரி பண்டா சுபசிங்க Tikiri Banda Subasinghe நா.உ. | |
---|---|
தொழிற்சாலைகள் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர் | |
பதவியில் மே 1970 – 1 மார்ச் 1977 | |
பிரதமர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
பின்வந்தவர் | சிறில் மத்தியூ |
சோவியத் ஒன்றியத்துக்கான 2வது இலங்கைத் தூதுவர் | |
பதவியில் 1961–1965 | |
பிரதமர் | சிறிமாவோ பண்டாரநாயக்கா |
முன்னவர் | குணபால பியசேன மலலசேகரா |
பின்வந்தவர் | பி. எஃப். பெரேரா |
6வது நாடாளுமன்ற சபாநாயகர் | |
பதவியில் 30 மார்ச் 1960 – 23 ஏப்ரல் 1960 | |
பிரதமர் | டட்லி சேனாநாயக்க |
முன்னவர் | அமீது உசைன் சேக் இசுமாயில் |
பின்வந்தவர் | ஆர். எஸ். பெல்பொல |
பாதுகாப்பு, வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்ற செயலாளர் | |
பதவியில் 1956–1959 | |
பிரதமர் | சாலமன் பண்டாரநாயக்கா |
பிங்கிரிய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1947 – மார்ச் 1960 | |
முன்னவர் | எவருமில்லை |
பின்வந்தவர் | லீலானந்த வீரசிங்க |
கட்டுகம்பொல தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 1965–1977 | |
முன்னவர் | லீலானந்த வீரசிங்க |
பின்வந்தவர் | ஜெயவிக்கிரம பெரேரா |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 14 ஆகத்து 1913 பிரித்தானிய இலங்கை |
இறப்பு | 1995 (அகவை 81–82) |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி (1965-1977) |
பிற அரசியல் சார்புகள் |
லங்கா சமசமாஜக் கட்சி (-1955) சுயாதீன சோசலிசக் கட்சி (1955-1959) ஐக்கிய தேசியக் கட்சி (1959) சுயேட்சை (1960-1965) |
வாழ்க்கை துணைவர்(கள்) | லொலித்தா சுபசிங்க |
டி. பி. சுபசிங்க என அழைக்கப்படும் சுபசிங்க முதியான்சிலாகே டிக்கிரி பண்டா சுபசிங்க (Subasinghe Mudiyanselage Tikiri Banda Subasinghe, 14 ஆகத்து 1913 - 1995) இலங்கையின் இடதுசாரி அரசியல்வாதி ஆவார். இவர் நாடாளுமன்றத்தின் 7வது சபாநாயகராகவும், சோவியத் ஒன்றியத்துக்கான தூதுவராகவும் பணியாற்றியவர்.[1][2] இவர் தொழிற்சாலைகள் மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[3]
சுபசிங்க லங்கா சமசமாஜக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராவார். இடதுசாரிகள் இணைந்து நடத்திய சூரிய-மல் இயக்கத்தில் இணைந்து போராடியவர்.[1] சுபசிங்க லங்கா சமசமாஜக் கட்சியின் வேட்பாளராக 1947 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] மீண்டும் 1952 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5] 1956 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார்.[6] சாலமன் பண்டாரநாயக்காவின் அமைச்சரவையில் இவர் பாதுகாப்பு, மற்றும் வெளிவிவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1][3] மார்ச் 1960 தேர்தலில் கட்டுகம்பொலை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதை அடுத்து,[7] நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்பட்டார். நான்கு மாதங்களின் பின்னர் நடைபெற்ற சூலை 1960 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[8] 1961 ஆம் ஆண்டில் இவர் சோவியத் ஒன்றியத்துக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார். 1965 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[9] 1970 தேர்தலில் இலங்கை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[10] 1977 தேர்தலில் போட்டியிட்டுப் பெரும் தோல்வியடைந்தார்.[11]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 "T.B. Subasinghe commemoration". டெய்லிநியூசு. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Rupasinghe, Winston. "Revisiting our Russian friends". Sundayobserver. Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 3.0 3.1 "SUBASINGHE, Tikiri Banda (1913-1995), research papers on". AIM25. Archived from the original on 2013-12-30. பார்க்கப்பட்ட நாள் 30 டிசம்பர் 2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ "Result of Parliamentary General Election March 1960" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ "Result of Parliamentary General Election July 1960" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
வெளி இணைப்புகள்
- 1913 பிறப்புகள்
- 1995 இறப்புகள்
- இலங்கையின் 1வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 2வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 3வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர்கள்
- இலங்கை அமைச்சர்கள்
- இலங்கை இடதுசாரிகள்
- சிங்கள அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்