தா. இராமலிங்கம் (அரசியல்வாதி)
ரி. இராமலிங்கம் | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் for பருத்தித்துறை | |
பதவியில் 1947–1956 | |
பின்னவர் | பொன். கந்தையா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அண். 1905 |
அரசியல் கட்சி | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் |
முன்னாள் கல்லூரி | உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரி |
தொழில் | வழக்கறிஞர் |
இனம் | இலங்கைத் தமிழர் |
தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் (Thamodarampillai Ramalingam, அண். 1905 - ) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
இராமலிங்கம் 1905 ஆம் ஆண்டளவில் இலங்கையின் வடக்கே உடுப்பிட்டி என்ற ஊரில், வழக்கறிஞர் ஆர். தாமோதரம்பிள்ளை என்பவருக்குப் பிறந்தார்.[1] உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியில் கல்வி கற்ற இவர்,[2] இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரில் சேர்ந்து அறிவியலில் பட்டம் பெற்றார்.[1]
இவர் கரணவாய் வடக்கைச் சேர்ந்த மீனாட்சிபிள்ளை என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து ஆண்களும், மூன்று பெண்களுமாக எட்டுப் பிள்ளைகள் உள்ளனர்.
பணி
பல்கலைக்கழகப் பட்டம் பெற்ற பின்னர் சட்டம் பயின்று, வட இலங்கையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் நீதித்துறை நடுவராகப் பணியாற்றினார்.[1]
அரசியலில்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இராமலிங்கம், அக்கட்சியின் சார்பில் 1947 நாடாளுமன்றத் தேர்தலில் பருத்தித்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] 1952 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. பக். 158. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon.
- ↑ நீலகண்டன், கந்தையா (13 அக்டோபர் 2002). "150 years of Uduppidy A.M. College". தி ஐலண்ட்] இம் மூலத்தில் இருந்து 2014-02-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140204042859/http://www.island.lk/2002/10/13/featur12.html.
- ↑ "Result of Parliamentary General Election 1947". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115557/http://www.slelections.gov.lk/pdf/Results_1947%20GENERAL%20ELECTION.PDF.
- ↑ "Result of Parliamentary General Election 1952". Department of Elections, Sri Lanka இம் மூலத்தில் இருந்து 2015-09-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924115603/http://www.slelections.gov.lk/pdf/Results_1952%20GENERAL%20ELECTION.PDF.