உடுப்பிட்டி
Jump to navigation
Jump to search
உடுப்பிட்டி | |
---|---|
ஆள்கூறுகள்: 9°48′20.2″N 80°09′55.60″E / 9.805611°N 80.1654444°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
உடுப்பிட்டி (Udupiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல்வெட்டியும் வடக்கே கொம்பந்தறையும் மேற்கே கெருடாவில், தொண்டைமானாறு ஆகியவையும், தெற்கே வல்வெட்டித்துறையும் உள்ளன.[1][2][3]
கல்லூரிகள், கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றனவற்றுக்குப் பிரபலமான ஊராகும். பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றன இங்கு நடைபெறுகின்றன. கல்வி வளர்ச்சியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரிகளினது பங்கு பிரதானமாகும்.
உடுப்பிட்டியின் புகழ்பூத்தவர்கள்
பாடசாலைகள்
- உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி
- உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
- உடுப்பிட்டி சைவப்பிரகாச வித்தியசாலை
வழிபாட்டுத் தலங்கள் - இந்து
- உடுப்பிட்டி சந்திரசேகர வீரபத்திர சுவாமி கோவில்
- இலக்கணாவத்தை கற்பகவிநாயகர்
- இமையாணன் மேற்கு கும்பவாழி வீரகத்தி விநாயகர் ஆலயம்
- இமையாணன் மேற்கு துவாளி கண்ணகி அம்மன் ஆலயம்
- உடுப்பிட்டி சொர்ணஞானவைரவர் ஆலயம்
- உடுப்பிட்டி வல்லைவாழி சித்திவிநாயகர் தேவஸ்தானம்
- உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயம்
கிறித்தவம்
முக்கியமானவை
- உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
- உடுப்பிட்டி மத்தி சனசமூக நிலையம்
- இலக்கணாவத்தை அறிவகம் சனசமூக நிலையம்
மேற்கோள்கள்
- ↑ "Udupiddy, Northern, Sri Lanka - Population and Demographics".
- ↑ "Uduppiddy, Northern Province, Sri Lanka".
- ↑ "National Highways". www.rda.gov.lk. பார்க்கப்பட்ட நாள் 2023-05-24.