அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே
அலெக்சாண்டர் பிரான்சிஸ் மொலமுறே Alexander Francis Molamure | |
---|---|
இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகர் | |
பதவியில் 7 சூலை 1931 – 10 டிசம்பர் 1934 | |
முன்னையவர் | எவருமில்லை |
பின்னவர் | எஃப். ஏ. ஒபயசேகர |
இலங்கை பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் | |
பதவியில் 14 அக்டோபர் 1947 – 24 சனவரி 1951 | |
பிரதமர் | டொன் ஸ்டீபன் சேனாநாயக்க |
முன்னையவர் | வைத்திலிங்கம் துரைசுவாமி |
பின்னவர் | அல்பர்ட் பீரிசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இரத்தினபுரி, இலங்கை | 2 சூலை 1888
இறப்பு | 25 பெப்ரவரி 1951 கொழும்பு, இலங்கை | (அகவை 62)
துணைவர் | அடெலின் மீதெனிய |
முன்னாள் கல்லூரி | கொழும்பு புனித தோமையர் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
சேர் அலெக்சாண்டர் பிரான்சிசு மொலமுறே (Alexander Francis Molamure, 7 பெப்ரவரி 1888 – 25 சனவரி 1951), பிரித்தானிய இலங்கையில் இலங்கை சட்டவாக்கப் பேரவை, இலங்கை அரசாங்க சபை ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தவர். அரசாங்க சபையின் முதலாவது சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் கல்வி பயின்ற பிரான்சிசு மொலமூர் பாடசாலைத் துடுப்பாட்ட அணியில் இணைந்து கல்லூரிக்காக விளையாடினார்[1]. இவர் அடிலைன் மீதெனிய என்பவரைத் திருமணம் புரிந்தார்.
அரசியலில்
அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல்கள் 1931, சூன் 23 இல் முடிவடைந்ததும், சூலை 7 இல் அரசாங்க சபை கூடியபோது[2] டெடிகமைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரான்சிசு மொலமூர் அவை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும்பான்மைச் சிங்களவரின் பிரதிநிதியாக இவரது பெயர் பிரேரிக்கப்பட்டது. சிறுபான்மையினத்தவரின் பிரதிநிதியாக நியமன உறுப்பினர் சேர் சிறீவாத் சினித்தர் என்பவரின் பெயர் பிரேரிக்கப்பட்டது. இரகசிய வாக்கெடுப்பில், மொலமூருக்கு 35 வாக்குகளும், சினித்தருக்கு 18 வாக்குகளும் கிடைத்ததை அடுத்து மொலமூர் சபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[3][4]. ஆனாலும் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக 1934, டிசம்பர் 10 ஆம் நாள் தமது பதவியைத் துறந்தார்[5]. பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இலங்கை பிரதிநிதிகள் சபையில் இவர் மீண்டும் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[5]. இவரது பதவிக்காலம் முடிவடைய முன்னரே அவர் 1951, சனவரி 25 இல் காலமானார்.[6]
மேற்கோள்கள்
- ↑ "The Battle of the Blues Steeped in tradition". டெய்லி நியூஸ். 2009-03-13. Archived from the original on 2009-03-16. பார்க்கப்பட்ட நாள் 2009-07-01.
- ↑ Rajasingham, K. T. (2001-09-22). "Sri Lanka: The Untold Story". Asia Times. Archived from the original on 2009-06-24. பார்க்கப்பட்ட நாள் 2009-07-01.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ குலரத்தினம், க. சி., நோத் முதல் கோபல்லவா வரை, சேமமடு பதிப்பகம், கொழும்பு, 2008
- ↑ "Molamure is elected Speaker of First Parliament". Sunday Times. 2007-10-14. பார்க்கப்பட்ட நாள் 2009-07-01.
- ↑ 5.0 5.1 "Speakers". Archived from the original on 2009-07-25. பார்க்கப்பட்ட நாள் 2009-07-01.
- ↑ "Principal Ceylon Events, 1951". Ferguson's Ceylon Directory, Colombo. 1952.