வ. நல்லையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வி. நல்லையா
V. Nalliah

நாஉ
Vallipuram Nalliah.jpg
அஞ்சல், தொடர்புத்துறை அமைச்சர்
பதவியில்
19 சூன் 1952 – 12 சூலை 1952
இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்
திருகோணமலை-மட்டக்களப்பு
பதவியில்
1943–1947
கல்குடா தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1956
பின்வந்தவர் ஏ. எச். மாக்கான் மாக்கார்
தனிநபர் தகவல்
பிறப்பு (1909-10-09)9 அக்டோபர் 1909
இறப்பு திசம்பர் 27, 1976(1976-12-27) (அகவை 67)
அரசியல் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
கிழக்கு மாகாண மக்கள் கட்சி
தொழில் ஆசிரியர்
இனம் இலங்கைத் தமிழர்

வல்லிபுரம் நல்லையா (Vallipuram Nalliah, 10 செப்டம்பர் 1909 - 27 டிசம்பர் 1976) இலங்கைத் தமிழ் ஆசிரியரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சரும் ஆவார்.

ஆரம்ப வாழ்க்கை

நல்லையா 1909 அக்டோபர் 9 இல்[1] மட்டக்களப்பு, புளியந்தீவு என்ற கிராமத்தில் பிறந்தவர். புனித மிக்கேல் கல்லூரியில் படித்து, லண்டன் மெற்ரிக்குலேசன் கலைப் பட்டதாரி ஆனார். மகரகமை ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பயின்று பயிற்சி பெற்ற ஆசிரியரானார்.[2] 1929இல் சிவானந்தா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்த நல்லையா,1937இல் அப்பாடசாலையின் பிரதி அதிபரானார்.[3] பின்னர் அட்டாளச்சேனை ஆண்கள் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தலைமை ஆசிரியரானார். தங்கரத்தினம் முத்தையா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[2] மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.[2]

அரசியலில்

நல்லையா 1943 ஆம் ஆண்டில் திருகோணமலை-மட்டக்களப்புத் தொகுதிக்கு இடம்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அரசாங்க சபைக்குத் தெரிவானார்.[2] 1947 நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக கல்குடா தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[4] பின்னர் டொன் ஸ்டீபன் சேனாநாயக்கவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இதனை அடுத்து அவர் சுகாதாரம் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2] 1952 தேர்தலில் ஐதேக வேட்பாளராகப் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[5] இவர் சிறிது காலம் டட்லி சேனாநாயக்கவின் அமைச்சரவையில் அஞ்சல், தொடர்புத்துறை அமைச்சராகப் பதவியில் இருந்தார்.[6]

1956 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[7] 1960 மார்ச் தேர்தலிலும் தோல்வியடைந்தார்.[8] பின்னர் இவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக 1965 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோல்வியடைந்தார்.[9]

மேற்கோள்கள்

  1. "Nalliah, Vallipuram". இலங்கைப் பாராளுமன்றம்.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 116–117.
  3. கவிக்கோ வெல்லவூர்க் கோபால், "வாழும் மனிதம்", பக். 44, அமரர். வி.நல்லையா, அமரர் நல்லையா நினைவுப் பணி மன்றம், 2015 மட்டக்களப்பு
  4. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  5. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  6. Rajasingham, K. T. "Chapter 14: Post-colonial realignment of political forces". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2013-06-14. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  7. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  8. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
  9. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-18.
"https://tamilar.wiki/index.php?title=வ._நல்லையா&oldid=24224" இருந்து மீள்விக்கப்பட்டது