க. வே. நடராசா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை நடராசா
பண்டாரவளை தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1947–1952
முன்னவர் புதிய தொகுதி
பின்வந்தவர் கே. டி. சுகததாச
தனிநபர் தகவல்
பிறப்பு (1905-07-06)6 சூலை 1905
இறப்பு அக்டோபர் 2000 (அகவை 95)
வாசிங்டன், ஐக்கிய அமெரிக்கா
அரசியல் கட்சி சுயேச்சை
வாழ்க்கை துணைவர்(கள்) ஞானமணி இளையதம்பி
பிள்ளைகள் பாலா (மகன்)
படித்த கல்வி நிறுவனங்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
பரமேசுவரா கல்லூரி
இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி
தொழில் வழக்கறிஞர், அரசியல்வாதி
இனம் இலங்கைத் தமிழர்

க. வே. நடராசா (Kanthapillai Velupillai Nadarajah, 6 சூலை 1905 – அக்டோபர் 2000) இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

நடராசா 1905 சூலை 6 இல்,[1] கே. வேலுப்பிள்ளை, ஆச்சிக்குட்டி ஆகியோருக்குப் பிறந்தார்.[1] யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, பரமேசுவரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.[1] பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு இலங்கை பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார்.[1] பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் கற்று வழக்கறிஞரானார். இவர் பி. எஸ். இளையதம்பி என்பவரின் மகள் ஞானமணியைத் திருமணம் புரிந்தார்.[1]

பணி

நடராசா இலங்கையின் மலையகத்தில் பதுளையில் 1930 இல் சட்டத் தொழிலை ஆரம்பித்தார்.[1] ஊவா மாகாணத்தில் 54 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.[1]

அரசியல் வாழ்க்கை

நடராசா பதுளை நகரசபை உறுப்பினராக 10 ஆண்டுகள் இருந்தார்.[1] 1947 நாடாளுமன்றத் தேர்தலில் பண்டாரவளை தேர்தல் தொகுதியில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[2][3]

நடராசா பதுளை சைவ பரிபாலன சங்கத்தின் தலைவராகவும், பதுளை கதிர்வேலாயுத சுவாமி கோவிலின் அறங்காவலராகவும் இருந்து சேவையாற்றினார்.[1] ஊவா மாகாணத்தின் முதலாவது தமிழ்ப் பாடசாலையை நிறுவினார். பதுளை சரசுவதி மகா வித்தியாலயத்தின் முகாமையாளராக 30 ஆண்டுகள் இருந்துள்ளார்.[1]

பிற்கால வாழ்க்கை

1983-இல் தமிழருக்கு எதிரான கறுப்பு யூலை வன்முறைகளின் போது பிங்காரவையில் இருந்த இவரது வீடு வன்முறையாளர்களினால் தீக்கிரையாக்கப்பட்டது.[3] பதுளையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. சி. டி. கொத்தலாவலையின் உதவியுடன் கொழும்பு சென்றார்.[3] பின்னர் அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து வாசிங்டனில் வாழ்ந்து வந்தார்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=க._வே._நடராசா&oldid=24405" இருந்து மீள்விக்கப்பட்டது